Published:Updated:

மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019

மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019
மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019

பிளாக் கேப்சின் பேட்டிங் யூனிட்தான் அவர்களின் மிகப்பெரிய பலம். டாம் லாதம், ஜென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர் ஆகியோரின் ஃபார்ம், எந்த அணிக்கும் அச்சுறுத்தல்தான்.

4 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை சாம்பியனாகும் வாய்ப்பைத் தவறவிட்டது நியூசிலாந்து. கோப்பை வெல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் இருந்தும், ஃபைனலில் கோட்டைவிட்டார்கள். மெல்போர்னில் தவறியதை லார்ட்ஸில் நிறைவேற்றும் உத்வேகத்தோடு இருக்கிறது வில்லியம்சனின் படை. அவர்களின் பலம், பலவீனம் என்ன? அலசுவோம்...

கேப்டன் : கேன் வில்லியம்சன்

பயிற்சியாளர் : கேரி ஸ்டெட்

ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 3

உலகக் கோப்பையில் இதுவரை

4 ஆண்டுகளுக்கு முன்னர் தவறவிட்டதை, இங்கிலாந்தில் நிறைவேற்றக் காத்திருக்கிறது நியூசிலாந்து. கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான அணியின் கன்சிஸ்டன்சி, நிச்சயம் அந்த அணிக்கு இன்னொரு அரையிறுதியை உறுதிசெய்யும் என்றே நம்பப்படுகிறது.

மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019

பிளாக் கேப்சின் பேட்டிங் யூனிட்தான் அவர்களின் மிகப்பெரிய பலம். டாம் லாதம், ஜென்ரி நிகோல்ஸ், ராஸ் டெய்லர் ஆகியோரின் ஃபார்ம், எந்த அணிக்கும் அச்சுறுத்தல்தான். பேட்டிங்குக்குச் சாதகமான சிறிய இங்கிலாந்து ஆடுகளங்களில் நிச்சயம் ரன்மழை பொழிவார்கள். இவர்களோடு, கேப்டன் வில்லியம்சன் இணைவது அவர்களது மிடில் ஆர்டரை அசுரபலமாக மாற்றுகிறது. இவர்களின் மிடில் ஆர்டரை உடைத்தால் மட்டுமே எதிரணிகள், குறைந்து ஸ்கோருக்கு நியூசிலாந்தைக் கட்டுப்படுத்த முடியும். பார்ட்னர்ஷிப் அமைப்பதில் அனைவரும் கில்லிகள் என்பதால், சேஸ் செய்யும் போட்டிகளில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கும்.

ஓப்பனர்களின் கன்ஸ்டென்சிதான் அவர்கள் பேட்டிங்கில் இருக்கும் ஒரே சிக்கல். குப்தில், காயத்திலிருந்து மீண்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், அவரும் முன்றோவும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது அவசியம். சமீபகாலமாக முன்றோ தொடர்ந்து சொதப்பிவருவதால், நிக்கோல்ஸை ஓப்பனராகக் களமிறக்கும் வாய்ப்பும் இருக்கிறது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் போதும், அடுத்து வரும் ஆல்ரவுண்டர்கள் தங்கள் அதிரடியால் ஸ்கோரை உயர்த்திவிடுவார்கள்.

மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019

ஆல்ரவுண்டர்கள் கிராந்தோம், நீஷம் இருவரில் யாரைக் களமிறக்குவது என்பதிலும் அவர்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். கிராந்தோம், முன்றோவைப்போல் கன்சிஸ்டன்சி இல்லாமல் தடுமாறுகிறார். அதேசமயம், நீஷம் தொடர்ந்து காயங்களால் அவதிப்படுகிறார். அதனால், அவர்களைத் தேர்வுசெய்வதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சில சமயங்களில் இரண்டாவது ஸ்பின்னரைத் தேர்வுசெய்ய வேண்டும் என நினைத்தால், இருவரையுமே பயன்படுத்தலாம். நீஷம் மீண்டும் காயமடையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

பந்துவீச்சு - நியூசிலாந்தின் சிக்கல் இங்குதான் தொடங்குகிறது. அணியில் இருக்கும் யாருமே சிக்கனமாகப் பந்துவீசக்கூடியவர்கள் அல்லர் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல். டிரென்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோர் முன்புபோல் அச்சுறுத்தும் ஃபார்மில் இல்லை. இருவருமே ஐ.பி.எல் தொடரில் தடுமாறியது தெரிந்தது. இருந்தாலும், இங்கிலாந்து ஆடுகளங்களில் போல்ட் மீண்டும் தன் மின்னல் பந்துவீச்சால் மிரட்டலாம். மேட் ஹென்றி, லாகி ஃபெர்குசன் இருவரும் இன்னும் சிறப்பாகப் பந்துவீச வேண்டும். அதேபோல், தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இல்லாததும் அவர்களுக்குச் சிக்கலாக அமையலாம். மிட்சல் சேன்ட்னர், ஈஷ் சோதி இருவரின் ஃபார்முமே கொஞ்சம் சங்கடம்தான்.

மெல்போர்னில் விட்டது லார்ட்ஸில் வசப்படுமா... சாம்பியனாகுமா நியூசிலாந்து? #WorldCup2019

இதுவரை நியூசிலாந்து அணிக்காக விளையாடிராத விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இருந்தாலும், அந்த அணி நிர்வாகம் தேர்வுசெய்துள்ள 15 பேர் அணியில் மாற்றுக்கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. அந்த அணியின் வாய்ப்புகள் வீரர்களையும், அவர்களின் பர்ஃபாமன்ஸ்களையும் மட்டுமே நம்பியில்லை. வில்லியம்சனின் கேப்டன்ஷிப், அந்த அணியின் முன்னேற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். வீக்கான பௌலிங் அட்டாக்கை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நியூசிலாந்தின் போட்டிகள்:

அடுத்த கட்டுரைக்கு