Published:Updated:

ஸ்டார்க் அண்ட் கோ உஷார்... சௌம்யா சர்கார் சரவெடிக்குத் தயார்! #PlayerBio

சௌமியா சர்கார்
News
சௌமியா சர்கார்

வங்கதேச அணியைப் போலவே எதிரணிக்கு எதிர்பாராத சமயத்தில் `ஷாக்’ கொடுக்கும் வீரர். பயமறியா ஆட்டம்தான் அவரின் ட்ரேட்மார்க். #PlayerBio

இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு ஷகிப் அல் ஹசன்தான் முக்கியக் காரணம். அவரது சீரான ஆட்டம்தான் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. அதே சமயம், சௌமியா சர்கார் தொடக்கத்தில் ஆடும் அதிரடி ஆட்டம்தான் ஷகிப்புக்கே ஓர் ஊட்டச்சத்தாக இருக்கிறது. ஷார்ட் பால் போட்டு விக்கெட் வீழ்த்த நினைக்கும் பெளலர்களை, பௌண்டரிக்குப் பறக்கவிட்டுச் சிறப்பான தொடக்கம் தந்துகொண்டிருக்கிறார். இன்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகும் அவரைப் பற்றிய ஒரு குட்டி பயோ...

பெயர் : சௌமியா சர்கார்
பிறந்த தேதி : 25-2-1993

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊர் : சட்கிரா, வங்கதேசம்
ரோல் : ஆல்ரவுண்டர்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
பெளலிங் ஸ்டைல் ; வலது கை வேகப்பந்து வீச்சு
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 1-12-2014
செல்லப்பெயர் : பாபு
சௌமியா சர்கார்
சௌமியா சர்கார்

பிளேயிங் ஸ்டைல்

சௌமியா சர்கார்- வங்கதேச அணியைப் போலவே எதிரணிக்கு எதிர்பாராத சமயத்தில் `ஷாக்’ கொடுக்கும் வீரர். பயமறியா ஆட்டம் தான் அவரின் ட்ரேட்மார்க். ஓப்பனராக நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுப்பவர்; நல்ல ஸ்ட்ரோக் ப்ளே உள்ள திறமையான வீரர். பெரிய இன்னிங்ஸாக மாற்றும் நுணுக்கத்தை இன்னும் முழுமையாகக் கற்கவில்லை என்றாலும், அதில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளார்.

உலகத் தர பேட்ஸ்மேன்களே ஷார்ட் பால்களில் தடுமாறும் நேரத்தில், இவர் அசால்டாக `புல்’ செய்வார். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணி பெளலர்களின் மிரட்டலான ஷார்ட் பால்களை இவர் டீல் செய்த விதத்தைப் பார்க்கும் போது ``ஷார்ட் பாலுக்கு அவ்வளோதான் மதிப்பா?” என யோசிக்க வைத்தார்.

தன் பெளலிங்கில் வேகம் பெரிதாக இல்லாவிட்டாலும், ஸ்விங்கிற்கு உதவும் பிட்ச்களில் தன்னுடைய மிதவேகப் பந்துவீச்சு மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிரிக்கெட் பயணம்

வங்கதேசத்தில் சிறந்த கிரிக்கெட் அகாடமியான BKSP-ல் சேர்ந்த போது இவருக்கு வயது 12. அங்கே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சர்கார், BKSP நடத்திய லீக்கில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் வங்கதேச 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பெற்றார். 2010 மற்றும் 2012 என இரண்டு முறை அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்காகப் பங்கேற்றுள்ளார்.

2014-ம் ஆண்டு தாகா ப்ரீமியர் லீக்கில் 15 போட்டிகளில் 615 ரன்கள் குவிக்க, அது இவருக்கு வங்கதேச அணியின் ஜெர்சியை அணிய வாய்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் தர போட்டியில் இவர் அடித்த 97 ரன்கள், தன் 21–வது வயதில் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. அதற்கு முன் ஒரேயொரு சர்வதேசப் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தார்.

பயமறியாமல் ஆடுவதுதான் என் இயல்பு. அதை மாற்றி நான் ரன்கள் அடித்தாலும், அது நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. என் ஒரிஜினல் கேமை மாற்றாமல் ரன்கள் அடிக்கும் வழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
செளமியா சர்கார்

நன்றாக ஆட்டத்தைத் தொடங்கும் சர்கார் அதைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றச் சிரமப்பட்டார். இருந்தும் அவரின் திறமை மேல் அதீத நம்பிக்கை வைத்திருந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்குப் பல வாய்ப்புகள் தந்தது. அப்படிக் கிடைத்த வாய்ப்புகள் ஒவ்வொன்றிலும் தன்னை மெருகேற்றிப் பல போட்டிகளில் வங்கதேச அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சதம், தாகா ப்ரிமியர் லீக்கில் இரட்டைச் சதம் அடித்து தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். 126-4 என இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடிக்கொண்டிருந்தது வங்கதேசம். அந்த நிலைமையில் மகமதுல்லா உடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் அவருடைய மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. நியூசிலாந்து பெளலர்கள் ஷார்ட் பால்களால் மிரட்டலாக அட்டாக் செய்ய, வில்லியம்சனும் அடித்தால் கேட்ச் ஆகும்படி ஃபீல்டிங் செட் செய்திருந்தார். அதையும் சர்கார் துல்லியமாக எதிர்கொண்டார். போராடி 147 ரன்கள் எடுத்தார்.

சௌமியா சர்கார்
சௌமியா சர்கார்

2018-19 தாகா ப்ரிமியர் லீக் சீசனில் 153 பந்தில் 16 சிக்ஸர்கள் 14 பெளண்டரிகளுடன் 208 ரன்கள் அடித்து சாதனை படைத்தார் செளமியா சர்கார். வேகம், ஸ்பின் என எதுவாக இருந்தாலும் நாலாப் பக்கமும் பந்தைச் சிதறவிட்டார். அந்தப் போட்டியில் இரட்டைச்சதம் அடித்ததன் மூலம், முதல் தர போட்டியில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் வங்கதேச வீரர் எனப் பெயர்பெற்றார்.

சௌமியா சர்கார் ஸ்பெஷல்

முதல் தர போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்.

ரோல் மாடல் - யுவராஜ் சிங்

ஃபேவரட் ஷாட்- கவர் ட்ரைவ்

ஒவ்வொரு போட்டிக்கும் முன், அம்மாவிடம் பேசிவிட்டுத்தான் விளையாடப் போவார்.