Published:Updated:

பாபர் ஆசம் - இந்திய பௌலர்களுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் #INDvPAK

இந்த உலகக் கோப்பையில் பாபர் ஆசமின் ஸ்ட்ரெயிட் டிரைவ் போல் அற்புதமானது இதுவரை வேறு ஏதுமில்லை

இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பாகிஸ்தான் பௌலர்களுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் எதிரான போட்டியாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானின் பேட்டிங் யூனிட்டிலும் இந்தியாவுக்குச் சவாலளிக்கும் ஒருவர் இருக்கிறார். பாபர் ஆசம் - 67 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 50+ சராசரி என கடந்த சில ஆண்டுகளாக மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார் இவர். நிச்சயமாக பும்ரா அண்ட் கோ இவரை எச்சரிக்கையோடு கையாளவேண்டும். ஆசமைப் பற்றிய ஒரு குட்டி பயோ...

பெயர்: பாபர் ஆசம்
பிறந்த தேதி: 15.10.1994
பிறந்த இடம்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம்
பேட்டிங்: வலது கை பேட்ஸ்மேன்
பவுலிங்: வலது கை ஆஃப் பிரேக்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம்: 31 மே, 2015
Babar Azam
Babar Azam

பிளேயிங் ஸ்டைல்

பாபர் ஆசம்... நீண்ட நாட்களுக்கு பின் பாகிஸ்தான் அணியிலிருந்து வந்திருக்கும் உலகத்தர பேட்ஸ்மேன். தனது ஆதர்ச வீரரான டி வில்லியர்சின் ஷாட்களை கச்சிதமாக பிரதி எடுப்பார். டி வில்லியர்சின் 'வில்லோ வீல்டிங்' என்னும் ஸ்டைலை ஃபாலோ செய்வார். ஆசமின் ஃபேவரிட் ஸ்ட்ரெயிட் டிரைவ்தான். "இந்த உலகக் கோப்பையில் பாபர் ஆசமின் ஸ்ட்ரெயிட் டிரைவ் போல் அற்புதமானது இதுவரை வேறு ஏதுமில்லை" என்று பிரபல கிரிக்கெட் எழுத்தாளர் ஷார்தா உக்ரா பாராட்டியிருந்தார். அப்படியிருக்கும் அவரது ஆட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஃப் ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை அநாயசமாக பவுண்டரிக்கு திருப்புவார். குட் லென்த் பந்துகளையும் எளிதாக ரன்களாக மாற்றுவார். யார்க்கரில் கொஞ்சம் வீக் தான். ஆனால், எப்படியேனும் அதைத் தடுத்தாடிவிடுவார். நீண்ட நாள்களுக்குப் பிறகு வந்திருக்கும் பாகிஸ்தானின் கிளாசிக் பேட்ஸ்மேன் இந்த ஆசம்!

கிரிக்கெட்டின் தொடக்க காலங்களில் டிவில்லியர்சைப் பார்த்து அதிகம் கற்றுக்கொண்டேன், அவரின் ஷாட்களை நெட்டில் அதிகம் பயிற்சி செய்துள்ளேன். பாகிஸ்தானிற்காக இன்னும் சிறப்பாக விளையாட தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன்
பாபர் ஆசம்

கிரிக்கெட் பயணம்

பாபர் ஆசம் கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் உறவினர்கள் மூன்று பேர் பாகிஸ்தானிற்காக ஆடியவர்கள். 2010ம் ஆண்டு சராய்தராகய்தி வங்கி அணிக்காக ஆடத் தொடங்கினார். 2012 தொடங்கி 2015 வரை இஸ்லாமாபாத் லெபர்ட்ஸ அணிக்காக, லிஸ்ட் ஏ டி20 போட்டிகளில் ஆடினார். அந்தக் காலக்கட்டத்தில் 3000 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்‌. அந்த ஆட்டத்தைப் பார்த்து தான் 2015 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. அதன் பின் சர்வதேச போட்டிகளில் கலக்கிய அவர் தற்போது பாகிஸ்தான் ப்ரீமியர் லீகில் கராச்சி கிங்க்ஸ் அணிக்காகவும், கரீபியன் ப்ரீமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் ஆடுகிறார்.

பாபர் அசாமின் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

125 vs வெஸ்ட் இண்டீஸ் 2017

2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான ஒருநாள் தொடர். முதல் போட்டியை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி‌. இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்தது பாகிஸ்தான். முதல் போட்டியில் சற்றே சொதப்பினார் பாபர் ஆசம். இரண்டாவது போட்டியில் தன் இடத்தை நிரூபிக்க பாபர் ஆசம் நிலைத்து ஆடினார். ஓப்பனர்கள் இருவரும் சொதப்ப ஒற்றை ஆளாக ஆடிய பாபர் ஆசம் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று ஆடினார்.

Babar Azam
Babar Azam
86 vs உலக லெவன் 2017

இன்டிபெண்டன்ஸ் கப் தொடரின் முதல் டி20 போட்டி. பெரேரா, பென் கட்டிங், மோர்கல், இம்ரான் தாகிர் என சிறந்த பந்துவீச்சாளர்கள் எதிரணியில். பாகிஸ்தானின் மற்ற பேட்ஸ்மேன் வெகு சுமாரான ஆட்டத்தை ஆட பாபர் ஆசம் அதிரடியாக ஆடினார்‌ 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 86 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் ராக்கெட் வேகத்தில் 197 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆடிய அணி 177 ரன்கள் மட்டுமே எடுக்க 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணம் பாபர் ஆசம் மட்டுமே.

ஆசம் ஸ்பெஷல்

குறைந்த வயதில் 1000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர்.
25 போட்டிகளில் அதிக ரன்களெடுத்த முதல் வீரர் (1306 ரன்கள்)
டி20 போட்டிகளில் 1000 ரன்களை குறைந்த போட்டிகளில் கடந்த முதல் வீரர்.
ஐசிசியின் கனவு அணி 2017 ல் இடம்பிடித்த ஒரோ பாகிஸ்தான் வீரர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு