Published:Updated:

வார்னர் நிதானம், ஸ்டாய்னிஸ் விலகல்... ஆஸி குழப்பங்கள் பாகிஸ்தானுக்கு சாதகமா?! #AUSvPAK

ஸ்மித், வார்னர்
ஸ்மித், வார்னர்

"ஐ.பி.எல் ஆடுகளங்களுக்கும் இந்த ஆடுகளங்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. அங்கு பெரிதாக கால்களை நகர்த்த வேண்டியதில்லை. ஸ்லோ பிட்ச், பந்து எளிதாக பேட்டுக்கு வரும். ஆனால், இங்கு அப்படியில்லை.’’

டேவிட் வார்னர் ஸ்லோ பேட்டிங், ஸ்டாய்னிஸ் விலகல், பிளேயிங் லெவனில் குழப்பம் என விழி பிதுங்கி நிற்கிறது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா. எதிர்த்து விளையாடப் போகும் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்தாலும், இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இருக்கிறது. `வந்து பார்’ என ஆஸ்திரேலியாவுக்கும் சவால் அளிக்கும்.

AUSvPAK Preview
AUSvPAK Preview

இந்தியாவுக்கு எதிரான தோல்வி, ஆஸ்திரேலியாவின் பல பலவீனங்களை அம்பலப்படுத்தி விட்டது. அதில் முக்கியமானது டேவிட் வார்னரின் பேட்டிங். ஐ.பி.எல் தொடரில் வெளுத்து வாங்கிய வார்னர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிதானமாக ஆடினார். இலக்கு குறைவு என்பதால் அந்த ஆட்டம் போதுமானதாக இருந்தது. இந்தியா நிர்ணயித்த 350+ ஸ்கோரை சேஸ் செய்யும்போதும், பவர்பிளேவில் ரொம்பவே நிதானமாக ஆடியது, கடைசி கட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. இப்போது, இந்த உலகக் கோப்பையின் `ஸ்லோ ஸ்டார்ட்டிங் ஓப்பனர்’ என பெயரெடுத்துவிட்டார். `முதல் போட்டியில் கால்களை நகர்த்துவதே கடினமாக இருக்கிறது’ என்றவர், இரண்டாவது போட்டியில் அதைச் சரிசெய்துகொள்ளவே இல்லை.

"ஐ.பி.எல் ஆடுகளங்களுக்கும் இந்த ஆடுகளங்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றன. அங்கு பெரிதாக கால்களை நகர்த்த வேண்டியதில்லை. ஸ்லோ பிட்ச், பந்து எளிதாக பேட்டுக்கு வரும். ஆனால், இங்கு அப்படியில்லை. தன் ஸ்லோ ஸ்டார்ட்டிங்கைப் பற்றி வார்னரும் புரிந்துள்ளார். பாண்டிங், லங்கர் உடன் தன் பேட்டிங் நுணுக்கம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்.’’
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்
இரு அணிகளும் இதுவரை..!
இரு அணிகளும் இதுவரை..!

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் லைனைப் பொறுத்தவரை ஸ்மித் மட்டுமே அவர்களது நம்பிக்கை நட்சத்திரம். இரண்டு அரை சதங்களுடன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரன் அவுட் ஆவதற்கு முன்புவரை, ஆரோன் ஃபின்ச் இந்தியாவுக்கு எதிராக நன்றாகவே ஆடினார். ஆனால், உஸ்மான் கவாஜா நான்காவது இடத்தில் இறங்கியதும், மேக்ஸ்வெல் பொறுப்பில்லாமல் அவுட்டானதும், மிடில் ஆர்டர் பலவீனத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்புவரை ஆஸ்திரேலிய பெளலிங் மீது பிரமிப்பு இருந்தது. ஆனால், ஷிகர் தவன், ரோஹித் இருவரும் முதல் பத்து ஓவர்கள் பொறுமையாக ஆடிவிட்டால், பின்னர் இமாலய ஸ்கோரை பதிவு செய்துவிடலாம் என லீட் கொடுத்துவிட்டனர். ஸ்டார்க், கம்மின்ஸ் மிரட்டல் இங்கு எடுபடவில்லை. மற்ற அணிகளும் இந்தியாவைப் பின்பற்றத் தொடங்கினால், ஆஸ்திரேலியாவின் பாடு திண்டாட்டம்தான்.

ஸ்மித், வார்னர்
ஸ்மித், வார்னர்

ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக விலகியது ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி. பேட்டிங்கில் அவர் மிரட்டவில்லை என்றாலும், பெளலிங்கில் கைகொடுக்கிறார். தவிர, ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக யாரை சேர்ப்பது, இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டுமா என பல பிளேயிங் லெவன் குழப்பங்கள் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், ஆஸி சரியான நேரத்தில் மீண்டு எழும் என்பதற்கு, அவர்கள் இந்த உலகக் கோப்பைக்கு முன் ஆடிய போட்டிகளே சாட்சி. ஒரு விவாதத்தில் குறிப்பிட்டதைப் போல, `எல்லா அணியிலும் பும்ராவைப் போல மிரட்டும் பெளலர்கள் இல்லை. அதனால், வார்னரின் ஸ்லோ ஸ்டார்ட்டிங்கையும், ஆஸ்திரேலியாவின் தோல்வியையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை’ என்பதையும் ஏற்க வேண்டும். இன்று பழைய வார்னரைப் பார்க்கலாம்.

Wahab Riaz
Wahab Riaz

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, போட்டி நடைபெறும் டான்டன் நகரில் இன்று மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய முனைப்பில் இருக்கிறது. இந்த சூழலில் மழையால் ஆட்டம் ரத்தானால் இரு அணிகளுக்கும் சிக்கல்தான்.

இதுவரை...

#AUSvPAK
#AUSvPAK

இரு அணிகளும் இதுவரை மோதிய 103 போட்டிகளில் ஆஸி 67, பாகிஸ்தான் 32 முறை வெற்றிபெற்றுள்ளன. உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் ஐந்தில் வென்று, ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜம்பா, ஜேசன் பெஹண்டராஃப்.

முக்கிய வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், கவாஜா, ஸ்டார்க்

பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹஃபீஸ், சர்ஃப்ராஸ் அஹமது, ஷோயிப் மாலிக், ஆசிஃப் அலி, வஹாப் ரியாஸ், ஹசன் அலி, சதாப் கான், முகமது அமீர்.

முக்கிய வீரர்கள்: பாபர் ஆசம், அமீர்

அடுத்த கட்டுரைக்கு