Published:Updated:

அந்த 30 ஓவர்களை சமாளிப்பதில் இருக்கிறது ஆஸ்திரேலியாவின் வெற்றி!

அந்த 30 ஓவர்களை சமாளிப்பதில் இருக்கிறது ஆஸ்திரேலியாவின் வெற்றி!
அந்த 30 ஓவர்களை சமாளிப்பதில் இருக்கிறது ஆஸ்திரேலியாவின் வெற்றி!

ஆப்கானிஸ்தான் முழுக்க முழுக்க சுழற்பந்தை நம்பியே களமிறங்குகிறது. பேட்டிங் டெப்தாக இல்லை. ஆஸ்திரேலியா இதை எளிதில் சமாளிக்கும்.

போட்டி எண் : ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் நேரம்: மாலை 6 மணி இடம்: பிரிஸ்டல்

அந்த 30 ஓவர்களை சமாளிப்பதில் இருக்கிறது ஆஸ்திரேலியாவின் வெற்றி!

ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, தன் முதல் போட்டியில் தரவரிசையில் பத்தாவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை இந்த புள்ளிவிவரமே சொல்லும். இருந்தாலும், நடப்பது உலகக் கோப்பை. அண்டர்டாக்ஸை குறைத்து மதிப்பிட முடியாது.

ஓராண்டுக்கு முன்புவரை ஆஸ்திரேலியா பரிதாப நிலையில் இருந்தது. தடைக்குப் பின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் அணிக்குத் திரும்பிய பின், எல்லோருடைய ஃபேவரிட் லிஸ்ட்டிலும் ஆஸ்திரேலியா இடம்பிடித்துவிட்டது.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

இந்த உலகக் கோப்பையின் இளம் அணியான ஆப்கானிஸ்தான், லெக் ஸ்பின்னர் ரஷித் கான், மிஸ்ட்ரி ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், ஆஃப் ஸ்பின்னர் முகமது நபி ஆகியோர் அடங்கிய சுழல் கூட்டணியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.

ரஷித் கான்
ரஷித் கான்

கூக்ளி, லெக் பிரேக் மூலம் கலக்குவார் ரஷித் கான். ஆஃப் பிரேக், கேரம் பால் மிரட்டுவார் முஜீப். முகமது நபி எகனாமிக் பெளலர். இந்த மூவரும் சேர்ந்து 30 ஓவர்கள் வீசுவர். ஆஸ்திரேலியா மட்டுமல்ல மற்ற அணிகளும் இந்த 30 சுழல் ஓவர்களை எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் முடிவு அமையும்.

ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், ஸ்மித் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு மேக்ஸ்வெல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சுழற்பந்தை எளிதாக எதிர்கொள்வர். இதனால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வியூகம் அமைக்கவில்லை எனில், ஆப்கானிஸ்தான் பாடு திண்டாட்டம்தான். தவிர, போட்டி நடக்கும் பிரிஸ்டல் மைதானத்தில் பயிற்சிப் போட்டிகளின்போது ரன் மழை பொழிந்தது.

மேட்ச் ப்ரிவியூ
மேட்ச் ப்ரிவியூ

ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 250 ரன் குவித்தாலே, ஆப்கானிஸ்தான் அதைச் சேஸ் செய்வது கடினம். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் பெளலிங் அட்டாக் அப்படி. மிச்செல் ஸ்டார்க் 150 கி.மீ வேகத்தில் வீசும் பந்தை, சமாளித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் ஆப்கன் அணியில் இல்லை. முகமது ஷேஸாத் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்களிடம் கன்சிஸ்டன்ஸி இல்லை.

நேருக்கு நேர்!

சர்வதேசக் கிரிக்கெட்டிலும் சரி, உலகக் கோப்பையிலும் சரி, இந்த இரு அணிகளும் பெரிதாக மோதவில்லை. உலகக் கோப்பை உள்பட இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வெற்றிவாகை சூடியுள்ளது. பெர்த் மைதானத்தில் நடந்த 2015 உலகக் கோப்பை குரூப் சுற்றில், டேவிட் வார்னர் 178 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தமுறையும் ஆஸி அப்படியொரு வெற்றியுடன் உலகக் கோப்பையைத் தொடங்க வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் இதுவரை...
இரு அணிகளும் இதுவரை...

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், மார்க் ஸ்டாய்னிஸ், மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நேதன் கூல்டர் நைல், ஆடம் ஜம்பா

ஆப்கானிஸ்தான் : குல்பாதின் நைப், அஸ்கர் ஆப்கன், ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷாஹிதி, நூர் அலி ஜத்ரான், முகமது ஷேஸாத், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், தவ்லத் ஜத்ரான்.

முக்கிய வீரர்கள்

ஆஸ்திரேலியா: வார்னர், ஸ்மித், ஸ்டார்க்

ஆப்கானிஸ்தான்: ரஷித் கான், முகமது நபி, முகமது ஷஸாத்

வெற்றி வாய்ப்பு: ஆப்கானிஸ்தான் முழுக்க முழுக்க சுழற்பந்தை நம்பியே களமிறங்குகிறது. பேட்டிங் டெப்தாக இல்லை. ஆஸ்திரேலியா இதை எளிதில் சமாளிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு