Published:Updated:

ஃபெலுக்வாயோ #PlayerBio

ஃபெலுக்வாயோ
News
ஃபெலுக்வாயோ

அதிக ரன்களை சேஸ் செய்யும் போதும் கூட எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ரன் எடுக்க உதவும் compatible player. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கும் இவர். #PlayerBio

பெயர்: ஆண்டைல் லக்கி ஃபெலுக்வாயோ.
பிறந்த தேதி: 03.03.1996.
ஊர்: டர்பன் தென் ஆப்பிரிக்கா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரோல்: ஆல் ரவுண்டர்.
பேட்டிங் ஸ்டைல்: இடது கை பேட்ஸ்மேன்
பௌலிங் ஸ்டைல்: வலது கை வேகப்பந்து வீச்சாளர்.
அறிமுகம்: 28.07.2017
செல்லப்பெயர்: லக்கி, பில்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ப்ளேயிங் ஸ்டைல்

அன்டைல் ஃபெலுக்வாயோ மிகவும் கான்ஃபிடன்ஸான, கூலான வீரர். எதிரில் இருப்பது பேட்ஸ்மேனோ பவுலரோ யாராக இருப்பினும் இவரின் அட்டிட்யூட் எப்பவுமே கீப் காம் தான். அதிகம் ஸ்லோ பாலாக வீசக் கூடியவர். முக்கியமாக டெத் ஓவர்களில் சிக்ஸ், ஃபோர் என பறக்கவிடாமல் எதிரணியின் ரன்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். பிட்ச்சின் தன்மை அறிந்து பந்துவீசுபவர்‌. பெரும்பாலும் ஸவிங் மற்றும் பவுன்சர்கள் பயன்படுத்துவது தான் இவரின் ஸ்டைல்‌. அதிக ரன்களை சேஸ் செய்யும் போதும் கூட எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ரன் எடுக்க உதவும் compatible player. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கும் இவர். கொஞ்சம் மெனக்கிட்டால் நிச்சயம் உலகக் கோப்பையில் ஜொலிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரிக்கெட் பயணம்

ஃபெலுக்வாயோ
ஃபெலுக்வாயோ

பள்ளிக் காலங்களின் தொடக்கத்தில் ஹாக்கி வீரராக விரும்பி மைதானத்திற்கு சென்ற இவரை கிரிக்கெட்டிற்குள் அழைத்து வந்தது அவரின் வீட்டு பாதுகாவலர். ஆரம்பத்தில் பள்ளியில் ஆடத்தொடங்கியவர் பின்னர் முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி டி20 க்ளோபல் லீக், ஆப்பிரிக்கா டி20 கப் என உள்ளூர் போட்டிகளின் மூலம் கவனம் பெற்றார். பின் 2014 U19 உலகக் கோப்பையில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடினார். 2015- 2016ல் டால்பின் அணியில் ஆடி அந்த சீசனில் அதிக விக்கெட் (27) எடுத்தார். அதன் பின்னர் தென்னாபிரிக்க ஏ அணியில் ஆடியவர் ஜிம்பாவே ஏ அணிக்கு எதிராக 5-62 என்ற தன் சிறந்த பந்துவீச்சை பெற்றார். பின்னர் 2016ம் ஆண்டு தன் 20வது வயதில் தென்னாபிரிக்க அணிக்காக ஆடத் தொடங்கினார். தனது முதல் தொடரான ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் முதலிடம் பிடித்தார். அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வென்றது தென்னாபிரிக்கா.

பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

42* (39) vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி. வார்னர்‌, ஸ்மித் அதிரடியால் 372 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. பின்னர் அதிக இலக்குடன் ஆட வந்த தென்னாப்பிரிக்காவின் முக்கியபேட்ஸ்மேன்கள் சொதப்ப, தத்தளித்த அணியை தூக்கி நிறுத்தினர் மில்லரும், ஃபெலுக்வாயோ. மில்லர் ஒருபுறம் சதமடிக்க ஏழாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃபெலுக்வாயோ 39 பந்துகளில் 42* ரன்கள் அடித்தார். பவுன்சராக வந்த பந்துகளையெல்லாம் சிக்சர்களாக மாற்றினார். கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் வரும் போது வெற்றிபெற தேவையான ரன்ரேட்டை 10.4 இருந்து கடைசி ஓவரில் 7 ரன்களாக குறைத்தார் . இவர்களின் இந்த 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், தென்னாபிரிக்கக் கூட்டணியின் ஏழாவது விக்கெட்டிற்கு சேர்த்த அதிக ரன் பார்ட்னர்ஷிப். இதன் மூலம் 372 ரன்கள் அடித்து தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா. பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தான் கில்லாடி என நிரூபித்தார் ஃபெலுக்வாயோ.

ஃபெலுக்வாயோ
ஃபெலுக்வாயோ

4/44 vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி அடித்து நொறுக்கியது. 18 ஓவர்களில் 131 ரன்கள் என இருந்த நிலையில் தென்னாபிரிக்க கேப்டன் ஃபெலுக்வாயோவிற்கு வாய்ப்பு வழங்கினார். தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் பிட்ச்சின் தன்மையை நன்கு அறிந்து அவுட் ஸ்விங் பந்துகளாக வீச பேட்ஸ்மேன்களால் டிஃபென்ட் செய்ய முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 350 ரன்கள் எடுக்கும் என்ற நிலையை மாற்றி அமைத்தது ஃபெலுக்வாயோவின் பவுலிங். முக்கியமாக பின்ச், ஸ்மித், ஹேஸ்டிங்க்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் ரேட்டைக் கட்டுக்குள் வைத்த அவர். 350 ரன்கள் போக வேண்டிய போட்டியை 294 ரன்களில் முடித்தார். பின்னர் அதை சேஸ் செய்து 295 ரன்களெடுத்து வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா. ஆஸ்திரேலியா போன்ற பெரும் அணிகளுக்கு எதிரான முதல் போட்டியிலே இத்தகைய அசாதாரண பந்துவீச்சு ஃபெலுக்வாயோவிற்கு வாய்த்தது.

"தென்னாபிரிக்க அணியில் ஆல்ரவுண்டர்களின் வாய்ப்பு என்பது நேரத்திற்கு ஏற்ப மாறுபடும், ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்து இரண்டிலும் என்னால் முடிந்ததைப் பண்ணுவேன்" (ஃபர்ஸ்ட் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியான நேர்காணலில் இருந்து)
ஃபெலுக்வாயோ

ஃபெலுக்வாயோ ஸ்பெஷல்

ஃபெலுக்வாயோவின் காப்பாளர் ரோஸ்மேரி அடிக்கடி கிரிக்கெட் பற்றி பேசி பேசி அவரை கிரிக்கெட்டை விரும்ப செய்தார்.

ஹாக்கி போட்டியில் உதவித்தொகை வந்தாலும் அதை உதறிவிட்டு கிரிக்கெட் ஆடத் தொடங்கியதற்கு காரணமும் ரோஸ்மேரி தான். அவரின் பேவரைட் வீரர்கள் : கிறிஸ் கெயிலும், தென்னாபிரிக்காவின் காலிஸும். லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2014ம் ஆண்டின்‌ சிறந்த உள்ளூர் வீரர் விருது பெற்றார்.