Published:Updated:

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நியூஸி... சுழலில் செக் வைக்குமா ஆப்கன்?! #AFGvNZ

#AFGvNZ
#AFGvNZ

10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்த உலகக்கோப்பையை அபாரமாக தொடங்கிய நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் வங்கதேச சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறியது.

ைபோட்டி எண் : 13

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து

நேரம்: மாலை 6 மணி

இடம்: தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானம், டான்டன்

இதுவரை நடந்த 2019 உலகக்கோப்பை லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானும் இன்று மோத உள்ளன. இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறியது.

#AFGvNZ
#AFGvNZ

வெற்றியா, தோல்வியா என கடைசிவரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி போராடிதான் வென்றது. தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியிலும் முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரகுமான் என பலமான ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திட்டம் வகுத்திருக்க வேண்டும். சுழலுக்கு தடுமாறுவதை உணர்ந்திருக்கும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிடாது. ஓய்வில் இருக்கும் டிம் சவுதி இன்னும் முழுமையாக குணமடையாததால் மேட் ஹென்ரி தொடர்ந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா,இலங்கை அணிகளுக்கு எதிராக டஃப் கொடுத்த ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் வெற்றி கைகூடவில்லை. விக்கெட் கீப்பர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முகமது சேஸாத் காயம் காரணமாக விலகியுள்ளதால் ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இக்ராம் அலி விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"அனுபவமான நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம்"
ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின்

ரஹமத், நிஜிபுல்லா, குல்பதின் என ஆப்கானிஸ்தானின் மிடில் ஆர்டர் ஃபார்மில் உள்ளதால் பேட்டிங்கில் பெரிதாக கவலையில்லை. ஆனால், கடைசி இரண்டு போட்டிகளிலுமே முழுமையாக 50 ஓவரை எதிர்கொள்ளாத ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்துக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானின் டாப் ஆர்டர் நிலையானால் மட்டுமே 50 ஓவர்களையும் எதிர்கொண்டு 250+ ஸ்கோர் எடுக்க முடியும்.

மழை வருமா?

இந்திய - இலங்கை அணிகள் மோதிய 1999 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானத்தில் நடைபெறும் முதல் உலகக்கோப்பை போட்டி இது. முதலில் பேட் செய்த இந்திய அணி 373 ரன்கள் எடுக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கங்குலி, டிராவிட் இணை 318 ரன்கள் எடுத்ததை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

பேட்டிங்குக்கு சாதகமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் சராசரி ஸ்கோர் 315. கவுன்டி மைதானம் இருக்கும் டான்டன் நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி தாமதாக தொடங்கலாம். எனினும் இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால், போட்டி நடந்தால் மட்டுமே வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும்!

நேருக்கு நேர்:

#AFGvNZ
#AFGvNZ

உலகக்கோப்பையில் இரு அணிகளும் பெரிதாக மோதியதில்லை. 2015 உலகக்கோப்பையில் நடந்த ஒரே போட்டியில் 186 ரன் இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ப்ளேயிங் லெவன்: (உத்தேசம்)

#AFGvNZ
#AFGvNZ

ஆப்கானிஸ்தான்: குல்பதின்(கேப்டன்), நஜிபுல்லா, ரஹ்மத் ஷா, ஹஸ்ரத்துல்லா, ஹஷ்மத்துல்லா, இக்ராம் அலி, ஹமித் ஹாசன், ரஷித் கான், முகமது நபி, தவ்லத் சத்ரான், முஜீப் உர் ரகுமான்.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் குப்தில், காலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன். டிரென்ட் போல்ட்

முக்கிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான்: முகமது நபி, ரஹமத் ஷா

நியூசிலாந்து: டிரென்ட் போல்ட்

அடுத்த கட்டுரைக்கு