Published:Updated:

கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!

கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!
News
கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!

போட்டி முடிந்ததும், ``இன்னும் கொஞ்சம் வொர்க் அவுட் செய்தால், இன்னும் ஃபிட்டான கெயிலைப் பார்க்க முடியும். உடலில் என்ன இருக்கிறது. நான் ரிட்டயர் என்று சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா? யோசிப்போம்’’ என்றார் நக்கலாக. Life starts at forty gayle. Hit us soon.

பெயர் : கிறிஸ்டோஃபர் ஹென்றி கெய்ல்
பிறந்த தேதி : 21-9-1979
ஊர் : கிங்ஸ்டன், ஜமைக்கா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரோல் : ஓப்பனர்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
பௌலிங் ஸ்டைல் : ஆஃப் பிரேக்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 11-9-1999
செல்லப்பெயர் : யுனிவர்சல் பாஸ்

சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும்தான் அவர்கள் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்பதைக் கடந்தும் ரசிகர் கூட்டம் இருக்கும். கிரிக்கெட் என்பது, சில வீரர்களுக்கு மட்டும் இயற்கையாகவே வாய்க்கும். அவர்கள் எந்த ஒரு பயிற்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாள் அவர்களுடைய நாள் ஆவதற்கு சில நிமிடம் போதுமானதாக இருக்கும்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

சில வீரர்கள், அதீத திமிரில் இருப்பார்கள்; செல்லும் இடமெல்லாம் பிற வீரர்களை நக்கலடிப்பார்கள்; பவுலர்களை துவம்சம் செய்வார்கள். மனதில் பட்டதை அப்படியே பேசுவார்கள். காட்டடி மன்னன் என்றதும் சில வீரர்களின் அதிரடி ஆட்டம் நமக்கு நினைவுக்கு வரலாம். அப்படிப்பட்ட வீரர்கள், ஒரு நாள் போட்டிகளின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம் டி20 போட்டியின் முதல் பந்தையேனும் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை சிக்ஸுக்கு அனுப்பும் லாகவமெல்லாம் ஒருவருக்கு மட்டுமே அப்போது வாய்த்திருந்தது. அவர் யுனிவர்சல் பாஸ், கிறிஸ் கெயில்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டெஸ்ட் போட்டிகளில் முச்சதப் பட்டியலில் வீரர்களின் பெயர் நீளும். ஆனால், இரண்டு முச்சதம் என்றால் அந்தப் பட்டியல் சற்றுச் சுருங்கிவிடும். ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதமும் அதே நிலைதான். டி20 போட்டிகளில் அதிக சதம், அதுவும் 10,000 ரன்கள் என்பதெல்லாம் கெயில் ஒருவரைத் தவிர யாருக்கு வாய்க்கும் என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. உலகில் அதிகம் பேர் பார்க்கும் டி20 போட்டியான ஐபிஎல்-லில் 300 சிக்ஸர்கள். அதுவும் 114 இன்னிங்ஸில்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

டி20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு கிரிக்கெட் பார்க்கும் முறை ரசிகர்களிடமும், அதை விளையாடும் முறை வீரர்களிடமும் பெரிய அளவில் மாறின. சிலர் `பாரம்பர்யமிக்க டெஸ்ட் போட்டிகளைக் கொன்றுவிட்டோம்!' எனப் புலம்பிக்கொண்டே இதில் விளையாடினார்கள். சிலர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஓய்வை அறிவித்துவிட்டு இதில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். டி20, ஒருகாலத்தின் கட்டாயம். ஒரு கால்பந்து வீரருக்கு ஒரு சர்வதேசப் போட்டியில் தரப்படும் சம்பளத்துக்கு இணையான சம்பளத்தையும், புகழையும் ஐபிஎல் போட்டிகள் தருகின்றன. அதனால், டி20 போட்டிகள் தேவை என்றார் கெயில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ரீலான்சர் என்னும் சொல்லாடலை அதிகம் கேட்கும் காலமிது. கெயில் ஒரு டி20 ஃப்ரீலான்சர். சிட்னி தண்டர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், தாக்கா கிளாடியேட்டர்ஸ், பரிசால் பர்னர்ஸ், லாகூர் கலாந்தார்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், ஸ்டான்ஃபோர்டு சூப்பர்ஸ்டார்ஸ் என கெயில் விளையாடும் பல அணிகளின் பெயரையெல்லாம் அவர் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறார் என்பதுகூட ஆச்சர்யமாக இருக்கும். அத்தனை நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விளையாடி இருக்கிறார். ஆனால், அது கெயிலுக்கு ஒரு பொருட்டாக இருப்பதே இல்லை. அந்த நாள் எப்போது தன்னுடையதாக மாறுகிறது என்பதை அவர் உணர்வதேயில்லை.

எந்த ஒரு சதமோ சாதனையோ திட்டமிட்டுச் செய்ததில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஜமைக்காவின் மற்றோர் உலக சூப்பர் ஸ்டாரான உசைன் போல்ட். ஒலிம்பிக் 100 மீட்டர் மின்னல் வேக கோல்டு வின்னர் போல்ட், கெயிலுக்குத் தெரிந்த அளவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஒரு சாரிட்டி போட்டியில் இருவரும் எதிரெதிர் அணிகளுக்கு ஆடி இருக்கிறார்கள். கெயில் இதுவரை சந்தித்ததில் சிறப்பான பவுன்ஸரை வீசியது போல்ட்தான் என்கிறார். விஷயம் அதுவல்ல, போல்ட் 9.58 நொடியில் ஓட வேண்டும் என முன் தீர்மானம் செய்து ஓடுவதில்லை. அது இயல்பாகவே நடக்கிறது என்கிறார் கெயில். ஜமைக்கா மண்ணின் மைந்தர்களுக்கு எல்லாம் இயல்பாகவே நடக்கின்றன. பிற வீரர்களுக்குக் கிடைக்கும் பயிற்சியோ, வாய்ப்புகளோ அவர்களுக்கு என்றும் கிடைக்கப்போவதில்லை. அதை அவர்கள் கண்டுகொள்வதுமில்லை.

ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகவும் முக்கியமான விஷயம், hand - eye co-ordination. எந்தப் பயிற்சியும் இல்லாமல், அது நேச்சுரல் கிஃப்ட்டாக இருக்கும் வீரர்களுக்கு இது மிகவும் சுலபமாக வரும். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான கெயில் பற்றி அவ்வளவு யோசிக்கும்போது, நம் ஊர் வலதுகை அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் பற்றியும் இங்கு பேச வேண்டும்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

அஷ்வின் ஒரு பேட்டியில் இவ்வாறாகச் சொல்லியிருப்பார். ``ஷேவாக், ஸ்பின்னர்களை பவுலர்களாகவே மதிப்பதில்லை. ஸ்பின்னர்கள் எவ்வளவு நல்ல பந்துகளைப் போட்டாலும் அதை அவர் அடிப்பார். ஷேவாக் போன்ற வீரர்களை அவுட் செய்ய, நாம் அவருக்குப் போடவேண்டியதெல்லாம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மோசமான ஒரு பால். எல்லா நல்ல பாலையும் அடித்துவிடலாம் என யோசிக்கும் இதுபோன்ற வீரர்கள், அவுட் ஆவது மோசமான பாலில்தான்’’ என்று.

ஷேவாக்கும் கெயிலும் பவுலர்களை அப்படித்தான் டீல் செய்வார்கள். இருவருக்கும் ஃபுட்வொர்க் என்று ஒன்று சுத்தமாகக் கிடையாது. பந்து வருகிறது, அதை நாம் அடிக்கிறோம் என்கிற ஒரு ரோபோட்டிக் மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கும். இன்னும் எளிமையாகச் சொல்வதாயின் ராயல் சர்க்கஸ் யானை ஃபுட்பாலை பேட்டைக்கொண்டு அடிப்பதுபோலத்தான் இவர்கள் அடிப்பார்கள். ஒரு பவுலர் தன்னை சோதிக்கிறார் என முடிவுசெய்துவிட்டால், கெயில் கிரீஸ் லைனிலிருந்து சில இன்ச் நகர்ந்து வந்து நிற்பார். கெயிலின் ஆஜாகுபாகுவான உடலுக்கும், அவரின் இந்த மேனரிசத்துக்கும் எந்த பவுலருக்குமே சற்று நிலைகுலையத்தான் செய்யும்.

கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!

அது, ஐசிசி டி20 உலகக்கோப்பை. மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய அணியாக யாரும் மதிக்காத ஒரு காலகட்டம். ஜேம்ஸ் ஃபால்க்னர் போகிறபோக்கில், ``எனக்கு அவர்களையெல்லாம் பெரிதாகப் பிடிக்காது’’ என ஸ்டேட்மென்ட்விட, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கும் அனைத்து வேற்றுமைகளையும் ( சம்பளப் பிரச்னை, அணியில் நிரந்தர இடம்) கடந்து ஒன்றிணைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே நான்கு பவுண்டரிகள் அடித்து அந்த நாளை ஆரம்பித்துவைத்தார் கெயில்.

கெயிலுக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் 53 (35b 6x4 2x6) SR: 151.42 இதுவும் ஒன்று. ஸ்டார்க் வீசிய 19 ஓவரில் 19 ரன்கள் அடித்தபோதே எல்லாம் முடிந்துவிட்டன என ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும். இறுதி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். பெய்லி ஃபால்க்னரை பந்துவீச அழைக்க, ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸும் வெறியின் உச்சத்தில் இருந்தது. மூன்றாவது பந்தில் லாங் ஆஃப் திசையில் சமி ஒரு சிக்ஸ். கெயில் அப்போதே ஆட ஆரம்பித்துவிட்டார். அடுத்த பால் மீண்டும் ஒரு சிக்ஸ். ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் குவிந்துவிட்டது. கக்னம் ஸ்டைலில் இருந்து எல்லாவற்றையும் ஆடியது அந்தக் கூட்டம். அப்போது அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. ஆனால், ஃபால்க்னர் பேசியது அவர்களை அவ்வளவு காயப்படுத்தியிருந்தது. ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு இருந்த கூட்டம் ஒன்று, வெள்ளையாய் இருப்பவர்களைப் பார்த்து, வென்று அவர்களின் மீது ஏறி அமர்ந்து கொக்கானி காட்டும் தருணம் அது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரிக்கெட் பிடிக்க ஆரம்பித்ததே அப்படித்தான். ஃபால்க்னருக்கான கெயிலின் பதில் இதுதான், ``சுட வேண்டும் என்றால் சுட்டுவிடு. வாய் பேசிக்கொண்டிருக்காதே.’’

கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!

அதேபோல், புனே வாரியர்ஸுக்கு எதிராக அவர் அடித்த 175*. அந்தப் போட்டியைப் பார்த்த யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பால்கணக்கில் கெயில் சரியாக 11 ஓவர்கள் பிடித்திருந்தார். அவர் அடித்த ரன்கள் 175*. பவுலர்கள் நொந்தது தனிக்கதை என்றால், கெயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தானே களத்தில் இறங்கிய ஆரோன் ஃபிஞ்சின் நிலைமைதான் இன்னும் மோசம். ஒரு ஓவரில் 29 ரன்கள். டீப் விக்கெட்டில் இரண்டு சிக்ஸ், லாங் ஆனில் இரண்டு சிக்ஸ். அலி முர்தாஸாவின் முதல் ஓவரில் 17 ரன்கள் என்றால், இரண்டாவது ஓவரின் இறுதியில் அவரது பவுலிங் கார்டு 45 என்றானது.

புனேவின் பயிற்சியாளரான ஆலன் டொனால்டு அந்தப் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டார், ``அனைத்து வீரர்களின் முகத்திலும் பயத்தை மட்டுமே பார்த்தேன். அப்படியோர் ஆக்ரோஷமான ஆட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அடுத்த போட்டிக்கு இவர்களை எப்படித் தயார்படுத்துவேன் என்றே தெரியவில்லை.’’ அதுதான் கெயில். அந்தப் போட்டியில் மட்டும் கெயில் அடித்தது 17 சிக்ஸர்கள்.

ஐபிஎல் என்பது, கெயிலைப் பொறுத்தவரையில் தான் கனவிலும் எதிர்பார்க்காத ஒரு பணத்தை அணியின் உரிமையாளர்கள் தருகிறார்கள். அதற்கு நியாயம் சேர்க்காமல் பெஞ்சைத் தேய்ப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. கெயிலுக்கு இந்தியா பிடிக்க மற்றுமொரு காரணம், இங்கு இருக்கும் ரசிகர்கள். ஒருசமயம், கெயில் அடித்த ஒரு சிக்ஸ் அரங்கில் இருந்த ஒரு சிறுமியின் மூக்கைப் பதம்பார்த்தது. போட்டி முடிந்ததும் கெயில் மருத்துவமனைக்கு விரைகிறார். அந்தக் குழந்தையைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுகிறது அந்த மெகா சைஸ் குழந்தை. அந்தச் சிறுமி சிரித்துக்கொண்டே இருந்தாராம். அதைவிட வேடிக்கை, கெயிலின் அடுத்த போட்டியில் அவர் பார்த்த ஒரு ரசிகரின் பேனர், `Please Hit me’

பணம் சம்பாதிப்பது, குடிப்பது, பெண்களுடன் ஜாலிவாலாவில் ஈடுபடுவது, கிரவுண்டில் கக்னம் ஸ்டைலில் டான்ஸ் ஆடுவது என எதையும் கெயில் எப்போதும் மறுத்ததோ, மறைத்ததோ இல்லை. ஆனால், 39 வயதான கெயிலுக்கான இடம் அவரது சொந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் எப்போதும் நிரந்தரமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில் மாதிரியான வீரர்களுக்கு பெரிய வாய்ப்புகள் எல்லாம் இல்லை.

``லூகாஸ் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்ததால் நான் இந்த நிலையில் இருக்கிறேன். இல்லையெனில், என் நண்பர்களையும் சகோதரர்களையும்போல தெருக்களில் இருந்திருப்பேன்'' என்கிறார் கெயில். கெயிலின் சகோதரர்களில் மூவர் இடதுகை ஆட்டக்காரர்கள். மூவர் வலதுகை ஆட்டக்காரர்கள். அவர்களுள் மைக்கேல் க்ரூ-தான் தகுதியானவர் என்பது கெயிலின் எண்ணம். அதீத குடிபோதையில் பாழாய்ப்போன அண்ணன்தான் கெயிலுக்கான எச்சரிக்கை மணி. ‌உணவு இல்லாத நாள்களில் சிறப்பான உணவு கிடைக்கும் ஒரே நாள் கிறிஸ்துமஸ். அவ்வளவு வறுமை!

குறிப்பிட்ட ஒரு போட்டியில் நாம்தான் பாஸ் என்பதற்கு நாம் எப்போதும் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. நமக்கு அடுத்து அந்தப் பட்டியலில் இருப்பவரின் சாதனைதான், நாம் எவ்வளவு பெரிய டான் என்பதை உணர்த்தும். ஆம், ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர் வரிசையில் கெயிலுக்கு அடுத்து இருப்பது ஏபிடி. கெயிலைவிடவும் 18 போட்டிகள் அதிகம் விளையாடியிருக்கிறார். ஆனால், 100 சிக்ஸர்கள் பின்தங்கி இருக்கிறார்.

பிப்ரவரி இறுதியில் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்தார் கெயில். சன்னுக்கு ஏது சண்டே என்பதுபோலத்தான் இருந்தது அவரது ஓய்வு அறிவிப்பு. எல்லா வீரர்களும், விளையாடி முடித்த அயர்ச்சியில், இனி போதும் என்கிற மனநிலையில் ஓய்வை அறிவிப்பார்கள். பிப்ரவரி 27-ம் தேதி நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 418 ரன்கள் அடிக்கிறது. வென்றுவிட்டோம் என்கிற நம்பிக்கையில், பந்து வீச வருகிறது. 40 வயதை நெருங்கும் ஒரு வீரர் 35 ஓவர்கள் தனது அணிக்காக களத்தில் இருந்து 97 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு மரண பயத்தைக் கொடுத்தார். லாராவுக்கு அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 10,000 ஒரு நாள் ரன்களை இந்தத் தொடரில் அடித்தார் கெயில்.

போட்டி முடிந்ததும், ``இன்னும் கொஞ்சம் வொர்க் அவுட் செய்தால், இன்னும் ஃபிட்டான கெயிலைப் பார்க்க முடியும். உடலில் என்ன இருக்கிறது, நான் ரிட்டையர் என்று சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா? யோசிப்போம்’’ என்றார் நக்கலாக.

கெயிலுக்குப் பெரும்பாலும் இதுதான் கடைசி உலகக் கோப்பை. சென்ற முறை இரட்டைச் சதம் அடித்தவர், இந்த முறை என்ன செய்யக் காத்திருக்கிறாரோ ?

Life starts at forty gayle. Hit us soon.

வழக்கம்போல தன் கேப்டனிடம் கடனாக அவரது English பேட்டைக் கேட்க ``சதம் அடித்தால் வைத்துக்கொள்'' என்கிறார் நக்கலாக. ஜமைக்காவின் ரோலிங்டனில் வெறும்கால்களில் சுற்றித் திரியும் ஒரு சிறுவனுக்கு, தோற்பதற்கு எதுவுமில்லை. சதமடிக்கிறார்... கெயிலுக்கு பேட் சொந்தமாகிறது. அதன் பிறகு இந்த வாழ்க்கையும். பார்ட்டி , கொண்டாட்டம் என எல்லாவற்றையும் கடைசி நொடி வரை ஆஹான்னு சொல்லி கெயில் வாழ்வதன் பின்கதை இதுதான்.

சில நாடுகளில் கெயில் போன்ற உலகப்புகழ் வீரர்களுக்கு இன்னும் ஹோட்டலில் ரூம் தரப்படுவதில்லை. நைட் க்ளப்களில் கெயில் நிறத்தில் இருப்பவர்களை உள்ளே அவர்கள் அனுமதிப்பதில்லை. கெயிலின் அத்தனை சாதனைகளும்கூட அந்தக் கதவுகளை ஏனோ திறப்பதில்லை.

கெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும்! - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்!

கெயில் பார்த்து வியந்த வீரர் அவர். டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடிக்கும்போது அமைதியாக அவர் இருக்கிறார். அந்தப் போட்டிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். கெயில் அவுட்டானதும்தான் அவர் நிம்மதிகொள்கிறார். கெயிலால் என்றும் மறக்க முடியாத சம்பவம் அது.