Published:Updated:

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update

ENG v NZ
Live Update
ENG v NZ

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் Live Update இங்கே! இந்தப் போட்டியைப் பற்றிய உடனடி அப்டேட்கள், அனாலசிஸ், வாதங்கள், Stats என நிறைய விஷயங்களை இங்கு விவாதிக்கலாம்..!

14 Jul 2019 2 PM

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் Live Update இங்கே! இந்தப் போட்டியைப் பற்றிய உடனடி அப்டேட்கள், அனாலசிஸ், வாதங்கள், Stats என நிறைய விஷயங்களை இங்கு விவாதிக்கலாம்..!

14 Jul 2019 2 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
14 Jul 2019 2 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாஸ் தாமதம்

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டாஸ் 15 நிமிடம் தாமதமாக போடப்படும்!

14 Jul 2019 2 PM

கிரிக்கெட் உலகின் அரசனாக, லார்ட்ஸ் மைதானத்தில் மகுடம் சூடப்போவது யார்? முதல் முறையாக உலகக் கோப்பையை முத்திமிடப்போவது யார்? கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில், உள்ளூர் அணியான இங்கிலாந்தைச் சமாளிக்குமா 'அண்டர்டாக்ஸ்' நியூசிலாந்து? இங்கிலாந்து பேட்டிங்குக்கும், நியூசிலாந்து பௌலிங்குக்குமான யுத்தத்தை வெல்லப்போவது யார்? உங்களின் கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்ள கமென்ட் செய்யுங்கள்.

14 Jul 2019 2 PM
சேஸிங்கில் நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் டாஸ் வென்று பேட்டிங் செய்ய நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த பிட்சில் முதலில் பேட் செய்யவேண்டுமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!
பிரயன் லாரா
14 Jul 2019 2 PM
டாஸ்
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
14 Jul 2019 2 PM

பிளேயிங் லெவன்

இரு அணிகளும் எந்த மாற்றமும் செய்யவில்லை. அரையிறுதியில் விளையாடிய அதே அணியோடு களமிறங்குகின்றன.

இங்கிலாந்து (உத்தேச அணி) : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.

நியூசிலாந்து (உத்தேச அணி) : மார்டின் குப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராந்தோம், மிட்செல் சேன்ட்னர், மேட் ஹென்றி, லாகி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

14 Jul 2019 2 PM
பௌலிங்தான் தங்கள் பலம் என்பதால், வில்லியம்சன் பேட்டிங் தேர்வுசெய்துள்ளார். 240 - 250 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்று நம்புகிறார். ஆனால், புற்கள் நிறைந்த இந்த ஆடுகளத்தில், முதல் அரை மணி நேரத்தில் பலமான இங்கிலாந்து டாப் ஆர்டரை வெளியேற்றி, இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் தங்களின் பௌலிங்கை முழுமையாக நம்பி களமிறங்குகிறார்
வி.வி.எஸ்.லட்சுமண்
14 Jul 2019 2 PM

மோர்கன் vs வில்லி!

14 Jul 2019 3 PM

😂😂

14 Jul 2019 3 PM

குப்திலா இது?!

கடந்த 2015 உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரர் மார்டின் குப்தில், தான் எப்பேர்பட்ட பேட்ஸ்மேன் என்பதையே மறந்துவிட்டார் போல! அப்போது, ஒரே போட்டியில் 237 ரன்கள் அடித்தவர், இப்போது 9 இன்னிங்ஸும் சேர்த்து 167 ரன்கள்தான் அடித்திருக்கிறார். முதல் போட்டிக்குப் பிறகு, 3 முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டியிருக்கிறார். ஃபீல்டிங்கில் ஏற்படுத்தும் தாக்கத்தை பேட்டிங்கில் அவர் ஏற்படுத்தவே இல்லை. இன்று அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

14 Jul 2019 3 PM
14 Jul 2019 3 PM

அதே டெய்லர்... வேறு வாடகை..!

கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில், ஹென்றி நிகோல்ஸுக்கு LBW அப்பீல் கோரப்பட்டது. நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்க, ரிவ்யூ கோரினார் நிகோல்ஸ். பந்து ஸ்டம்புகளுக்கு மேலே சென்றது 'பால் டிராக்கிங்'கில் உறுதி செய்யப்பட, தப்பிப் பிழைத்தார் அவர். இதேபோல், இந்த இரு அணிகளும் டர்ஹாமில் மோதிய லீக் போட்டியில், இதே மாதிரி நிகழ்வு நடந்தது. வோக்ஸ் பந்துவீச்சில் LBW முறையில் வெளியேறினார் நிகோல்ஸ். அப்போதும் பந்து ஸ்டம்பில் படவில்லை. ஆனால், அவர் ரிவ்யூ கேட்காமல் வெளியேறினார். அதே பௌலர்.. அதே பேட்ஸ்மேன்.. ஆனால், முடிவு மட்டும் இன்று மாறியிருக்கிறது!

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 3 PM
நியூசிலாந்து : 24-0

5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிவரும் குப்தில், 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்துள்ளார். ஹென்றி நிகோல்ஸ் 12 பந்துகளில் 4 ரன்களுடன் ஆடிவருகிறார்.

14 Jul 2019 3 PM

ஆர்ச்சர் எனும் அதிசயப் பிறவி!

14 Jul 2019 3 PM
குப்தில் அவுட்
கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் LBW முறையில் வெளியேறினார் மார்டின் குப்தில் (19 ரன்கள்). ரிவ்யூ எடுத்து, அதையும் வீணாக்கியிருக்கிறார். இங்கிலாந்து - 29/1
இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 3 PM

வில்லியம்சனுக்கு 3 ஸ்லிப்கள் நிற்கவைத்துள்ளது இங்கிலாந்து அணி. அதுபோக, தேர்ட் மேன் ஏரியாவுக்குச் செல்லும் வில்லியின் டிரேட் மார்க் சிங்கிள்களைத் தடுக்க, பௌண்டரி எல்லையில் தேர்ட் மேன் ஃபீல்டரும் நிற்கிறார். ஆஃப் சைடில் மிகவும் பலமான ஃபீல்ட் செட் அப்போடு, சிறப்பாகப் பந்துவீசினார் கிறிஸ் வோக்ஸ். முழு அட்டாகிங் மோடில் இருக்கிறது இங்கிலாந்து!

14 Jul 2019 4 PM
மஞ்ச்ரேக்கர் இல்லை!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்றைய ஃபைனலின் வர்ணனையாளர்கள் குழுவில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இல்லை. 9 பேர் கொண்ட குழுவில், கங்குலி மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர். அதனால், எந்த சங்கடமும் இல்லாமல் நாம் ஆங்கிலத்திலேயே ஆட்டத்தைப் பார்க்கலாம்! ஒருவேளை, இன்னைக்கு மேட்ச்ல, மும்பைக்காரங்க யாரும் இல்லைனு அவரே வெளிநடப்பு செஞ்சிட்டாரோ!

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 4 PM

நியூசிலாந்து - 50

13.4 ஓவர்களில், நியூசிலாந்து அணி 50 ரன்கள் அடித்துள்ளது.

14 Jul 2019 4 PM

இங்கிலாந்து அணி, வில்லியம்சனை மிகவும் சிறப்பாகக் கையாண்டுகொண்டிருக்கிறது. அவரை சிங்கிள் எடுக்க முடியாதபடி கட்டிவைத்திருக்கிறது. இங்கிலாந்து பௌலர்களும் அதற்கு ஏற்ப ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, நான்காவது / ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்துவீசுகின்றனர். அதனால், அவர் அதிக டாட் பால்கள் பிடிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

14 Jul 2019 4 PM

கடந்த இரண்டு, மூன்று ஓவர்களாக கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருக்கிறார் நிகோல்ஸ். பிளங்கட் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருக்கும் அவர், இப்போது 48 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துள்ளார். புல், கட் ஷாட்களை மிகவும் நேர்த்தியாக விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 4 PM

சபாஷ் சரியான போட்டி!

இதற்கு முன் விளையாடிய 3 உலகக் கோப்பைப் ஃபைனல்களிலும், சேஸ் செய்து தோற்றிருக்கிறது இங்கிலாந்து. இங்கிலாந்தின் அந்த ரெக்கார்டை மனதில் வைத்துத்தான் வில்லியம்சன் பேட்டிங் எடுத்திருப்பாரோ!

-சௌரவ் கங்குலி

ரெக்கார்டுகள் உடைபடுவதுதானே மரபு, சௌரவ்?!

-ஈஷா குஹா

14 Jul 2019 4 PM

நிகோல்ஸ் - வில்லியம்சன் ஜோடி நிதானமாக ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது சிங்கிள், டபுள், பவுண்டரி என அனைத்துக்குமான வழியை அறிந்துவிட்டனர். ரன்ரேட்டையும் மெல்ல உயர்த்திக்கொண்டிருக்கின்றனர். கடைசி 5 ஓவர்களில், 30 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி 72 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளது.

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 4 PM

ரஷீத் பந்துவீச்சை டார்கெட் செய்து ஆடிக்கொண்டிருக்கிறார் வில்லியம்சன். அதிலும் குறிப்பாக, மிட் விக்கெட் ஃபீல்டர் டீப்பில் இல்லாததால், அந்த ஏரியவைத் தேர்ந்தெடுத்து ஸ்லாக் ஷாட்கள் ஆடுகிறார். ரஷீத் வீசிய முதல் ஓவரில் அப்படியொரு ஷாட் அடிக்க, பந்து எல்லையைக் கடக்கும் முன்பே நின்றுவிட்டது. ஆனால், அடுத்த ஓவரில், இன்னும் பலமாக அடித்து, பவுண்டரி அடித்திருக்கிறார் வில்லியம்சன். 

14 Jul 2019 4 PM
14 Jul 2019 4 PM

கேப்டன் நம்பர் 1

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் அடித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் கேன் வில்லியம்சன். 2007 உலகக் கோப்பையில் 548 ரன்கள் எடுத்து, அந்தப் பட்டியலில் முதலிடத்திலிருந்த மஹேலா ஜெயவர்தனேவை, இந்தப் போட்டியில் பின்னுக்குத்தள்ளியுள்ளார் வில்லி!

14 Jul 2019 4 PM

நியூசிலாந்து : 102 - 1

22 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

ஹென்றி நிகோல்ஸ் - 45 (64)
கேன் வில்லியம்சன் - 30 (51)
14 Jul 2019 5 PM
மோர்கனுக்கு இருக்கும் மிகச் சிறந்த அட்டாகிங் ஆப்ஷன் ஆர்ச்சர்! இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்குக் குறைந்தபட்சம் ஒரு ஓவராவது இப்போது பந்துவீசக்கொடுக்கலாம்!
பிரெண்டன் மெக்கல்லம்
14 Jul 2019 5 PM
வில்லியம்சன் அவுட்
லியாம் பிளங்கட் பந்துவீச்சில், ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வில்லியம்சன். அவர் 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து - 103/2
இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 5 PM

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, மிடில் ஓவர்களில் (ஓவர் 11-40) அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் பிளங்கட். இந்த 4 வருட காலகட்டத்தில் அவர் 55 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அடுத்த இடத்தில் 46 விக்கெட்டுகளோடு இருப்பவர், ஹசன் அலி.

14 Jul 2019 5 PM

😜

14 Jul 2019 5 PM
நிகோல்ஸ் அரைசதம்

நிதானமாக நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸைக் கட்டமைத்த ஹென்றி நிகோல்ஸ், 71 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது!

14 Jul 2019 5 PM
நிகோல்ஸ் அவுட்
55 ரன்கள் எடுத்த நிலையில், பிளங்கட் பந்துவீச்சில் போல்டானார் ஹென்றி நிகோல்ஸ். நியூசிலாந்து - 118/3
14 Jul 2019 5 PM

என்ன குமாரு இது?!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இதுவரை 27 ஓவர்களே முடிந்துள்ள நிலையில், இதுவரை 2 முடிவுகள் தவறாகக் கொடுத்துள்ளார் நடுவர் குமார் தர்மசேனா. முதலில், வோக்ஸ் பந்துவீச்சில், நிகோல்ஸுக்கு LBW என அறிவித்தார். ரிவ்யூவில் அது நாட் அவுட் என்று தெரிந்தது. அடுத்து, பிளங்கட் ஓவரில், வில்லியம்சனுக்கு எதிரான கேட்ச் அப்பீலை நிராகரித்தார். மோர்கன் உடனடியாக ரிவ்யூ கேட்க, மீண்டும் முடிவு மாற்றப்பட்டது. 25% போட்டியே முடிந்துள்ள நிலையில், 2 தவறான முடிவுகள் கொடுத்திருக்கிறார் தர்மசேனா. இந்த உலகக் கோப்பையில் அவர் முடிவு தவறாகியிருப்பது இது நான்காவது முறை. அரையிறுதிப் போட்டியில் ஜேசன் ராய்க்கு அவர் தவறாக அவுட் கொடுத்து, அது சர்ச்சைக்குள்ளானது. இந்தப் போட்டிக்கு முன்புதான் ஜேசன் ராயுடன் சமாதானம் செய்துகொண்டிருந்தார். இன்னும் எத்தனை பேருடன் சமரசம் செய்யவேண்டியிருக்குமோ!

14 Jul 2019 5 PM
14 Jul 2019 5 PM

11 ஓவர்களாக பவுண்டரி இல்லை..!

நியூசிலாந்து அணி பவுண்டரி அடித்து 71 பந்துகள் ஆகிவிட்டது. அடில் ரஷீத் வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடித்ததோடு சரி. அதன்பிறகு, இன்னும் ஒரு பவுண்டரிகூட அடிக்கப்படவில்லை. மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் மிகவும் அவசியம். ஆனால், நியூசிலாந்து தடுமாறுகிறது. பவுண்டரிகள் மட்டுமல்ல, சிங்கிள்களும் டபுள்களும்கூடக் குறைந்துவிட்டன.

14 Jul 2019 5 PM

😎

14 Jul 2019 5 PM
ராஸ் டெய்லர் அவுட்
15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மார்க் வுட் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார் ராஸ் டெய்லர். நியூசிலாந்து 141/4
14 Jul 2019 5 PM

இந்தப் போட்டியில் ஏற்கெனவே இரண்டு தவறான முடிவுகளைக் கொடுத்தார் குமார் தர்மசேனா. அவை, ரிவ்யூவில் சரிசெய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில், மற்றொரு நடுவர் மராய் எராஸ்மஸ், இப்போது ஒரு தவறான அவுட் கொடுத்திருக்கிறார். ராஸ் டெய்லரை LBW என்ற அவரது முடிவு தவறு என பால் டிராக்கிங்கில் தெரிய வந்துள்ளது. பந்து ஸ்டம்புகளைத் தகர்க்காமல், மேலே செல்கிறது. ஆனால், நியூசிலாந்தின் ரிவ்யூவை குப்தில் வீணாக்கிவிட்டதால், ரிவ்யூ எடுக்க முடியாமல் வெளியேறினார் ராஸ் டெய்லர். போட்டியின் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட எராஸ்மஸும் இப்படியொரு முடிவைக் கொடுத்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 6 PM

நியூசிலாந்து : 152-4

35 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி.

ஜேம்ஸ் நீஷம் - 9(10)

டாம் லாதம் - 12(21)

14 Jul 2019 6 PM
14 Jul 2019 6 PM
உலகக் கோப்பை போன்ற போட்டிகளில், ரசிகர்களின் எமோஷன், தேசிய கீதங்களின் எமோஷன் போன்ற விஷயங்களை ஏற்றிக்கொள்ளவே கூடாது. திறமை மட்டுமே அங்கு பேசவேண்டும்
மைக்கேல் கிளார்க்
14 Jul 2019 6 PM

ஆர்ச்சருக்கு 5 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், 42-வது ஓவர் வரை காத்திருக்காமல், ஓரிரு ஓவர்களை இப்போதே வீசச்செய்வது இங்கிலாந்துக்கு நல்லது. லாதம், நீஷம் இருவரும் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், விக்கெட் வீழ்த்துவது இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியம். அதற்கு, அணியின் சிறந்த அட்டாகிங் ஆப்ஷனைப் பயன்படுத்துவதுதான் சரி!

14 Jul 2019 6 PM
நீஷம் அவுட்
25 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த ஜிம்மி நீஷம், பிளங்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிட் ஆன் திசையில் நின்றிருந்த ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து - 173 / 5
14 Jul 2019 6 PM
ஏன் ஒரே ரிவ்யூ?

ஏன் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஒரேயொரு ரிவ்யூ என்று புரியவில்லை. கால்பந்தில், நடுவர்கள் எத்தனை முறை வேண்டுமானால் VAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியும். டென்னிஸில்கூட, ஒரு செட்டுக்கு, மூன்று தவறான முடிவுகள் வரை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவற்றையெல்லாம் விட, அதிக நேரம் ஆடக்கூடிய இந்த விளையாட்டில் மட்டும் ஒரேயொரு ரிவ்யூ மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. ஐ.சி.சி-யின் சிறந்த நடுவர் விருதை வென்றவரான குமார் தர்மசேனாவின் 4 முடிவுகள் DRS முறையால் மாற்றப்பட்டுள்ளன. கெட்டில்பெரோவின் 5 முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன. ரிவ்யூக்கள் மீதமில்லாததால், ஜேசன் ராய், ராஸ் டெய்லர் போன்ற பல வீரர்கள் வெளியேறியிருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், முதல் பந்திலேயே ரிவ்யூ கேட்ட இந்திய அணியால், அடுத்த 299 பந்துகளுக்கு அதைப் பயன்படுத்த முடியவில்லை. உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இப்படியான சிக்கல்கள் எழும்போது, அதை ஐ.சி.சி சரிசெய்ய முன்வரவேண்டும். ரிவ்யூ விதிகளைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்வதுதான் கிரிக்கெட்டுக்கு நல்லது!

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 6 PM

இன்னும் 10 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், நியூசிலாந்து குறைந்தபட்சம் 250 ரன்கள் எடுக்கவேண்டும். இன்னும் 4 முதல் 5 ஓவர்கள் வரையிலாவது இந்த லாதம் - கிரந்தோம் கூட்டணி களத்தில் இருப்பது அவசியம்

14 Jul 2019 6 PM

சூப்பர் பிளங்கட்!

தன் கிராஸ் சீம் பந்துவீச்சால், நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சேதாரத்தை உண்டாக்கிவிட்டார் லியான் பிளங்கட். வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ், ஜேம்ஸ் நீஷம் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிடில் ஓவர்களில் இங்கிலாந்து அணியின் கை ஓங்குவதற்குக் காரணமாக இருந்த இந்த சீனியர் வீரர், மிகமுக்கியமான இந்தப் போட்டியில், தன் பணியை சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்.

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 6 PM

ஹெல்மட் பிரேக்கர்!

பேட்ஸ்மேன்களின் ஹெல்மட்களைப் பதம் பார்த்துக்கொண்டே இருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர். இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஹஷிம் அம்லாவைப் பதம் பார்த்து, அடுத்த போட்டியில் ஓய்வெடுக்கவைத்தவர், அரையிறுதியில் அலெக்ஸ் கேரியின் தாடையில் தையல் போடவைத்தார். இன்று காலின் டி கிராந்தோம், ஆர்ச்சரின் அசுர வேகத்துக்கு இலக்காகியிருக்கிறார். நல்லவேளையாகப் பெரிய அடி ஏதும் இல்லை!

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 6 PM

🤷‍♂️

14 Jul 2019 6 PM

நியூசிலாந்து 200!

43.3 ஓவர்கள் முடிந்த நிலையில், 200 ரன்களைக் கடந்தது நியூசிலாந்து. கிராந்தோம் 12 ரன்களுடனும், லாதம் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

14 Jul 2019 6 PM

நியூசிலாந்து அணி, தங்களின் திட்டத்தை ஓரளவு சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியதைப் போலவே, இங்கிலாந்தையும் வீழ்த்த திட்டமிட்டிருப்பார்கள்.  240 - 250 ரன்கள்தான் அவர்களின் இலக்காக இருந்திருக்கும். இந்த உலகக் கோப்பையில், இரண்டு போட்டிகளில் மட்டுமே 250+ ஸ்கோர்கள் சேஸ் செய்யப்பட்டுள்ளன. அனவே 250 என்பது மிகவும் நெருக்கடிய ஏற்படுத்தக்கூடிய ஸ்கோராகவே இருக்கும். இப்போது 45 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது அந்த அணி. அடுத்த 5 ஓவர்களில், 40 ரன்கள் எடுத்தாலே, இங்கிலாந்துக்கு ஒரு நல்ல டார்கெட்டை நிர்ணயிக்க முடியும். அதன்பிறகு, அவர்களின் மிரட்டல் பந்துவீச்சைக் கொண்டு, இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவால் அளிக்கலாம்! 

14 Jul 2019 6 PM

இதேபோல், வேகத்தில் வேரியேஷனோடு உங்களுக்கு ஆர்ச்சர் பந்துவீசினால், அதை எங்கு அடிக்க நினைப்பீர்கள்?

-நாசர் உசேன்

அவரை எதிர்கொண்டால், கிரீசில் நன்றாக பின்னால் நின்று, ஸ்டம்புகளுக்கு முன் நகர்ந்து லெக் சைட் ஆட முயற்சி செய்வது நல்லது. அவரது பந்துவீச்சில் புல் ஷாட் ஆடுவது மிகவும் கடினம்.

- பிரெண்டன் மெக்கல்லம்

14 Jul 2019 6 PM
கிராந்தோம் அவுட்
கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில், ஜேம்ஸ் வின்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் காலின் டி கிராந்தோம். அவர் 28 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறின்
14 Jul 2019 7 PM

விம்பிள்டன் ஆன்!

இந்த உலகக் கோப்பை சிறப்பாகப் போய்க்கொண்டிருக்க, ஜோகோவிச் - ரோஜர் ஃபெடரர் ஆகியோருக்கு இடையிலான விம்பிள்டன் இறுதிப் போட்டியும் இங்கிலாந்தில் தொடங்கிவிட்டது!

14 Jul 2019 7 PM
லாதம் அவுட்!

வோக்ஸ் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு வெளியேறினார் டாம் லாதம். இவரும் ஜேம்ஸ் வின்ஸிடம் கேட்சானார். நியூசிலாந்து -  232/7

14 Jul 2019 7 PM

4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார் மேட் ஹென்றி. நியூசிலாந்து - 240/8

14 Jul 2019 7 PM
நியூசிலாந்து 241
50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
14 Jul 2019 7 PM
கிராஸ் சீம் பந்துகளைத்தான் நான் அதிகம் பயன்படுத்தினேன். அதுதான் எனக்கு நல்ல பலனைக் கொடுத்தது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும் ஒன்றை, இன்று மாற்ற எனக்கு விருப்பமில்லை!
லியாம் பிளங்கட்
14 Jul 2019 7 PM
இங்கிலாந்தின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. 241 என்ற ஸ்கோர் நிச்சயமாகப் போதாது. ஒருகட்டத்தில், 92 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளில், அதுவும் ஒரு உலகக் கோப்பை ஃபைனலில் அது ஏற்புடையது அல்ல. இங்கிலாந்து பௌலர்கள், எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் தடுத்துள்ளனர்.
வி.வி.எஸ்.லட்சுமண்
14 Jul 2019 7 PM

இங்கிலாந்து இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தப்பிப்பிழைத்திருக்கிறார் ஜேசன் ராய். டிரென்ட் போல்ட் வீசிய இன்ஸ்விங்கில் ஏமாந்தவருக்கு எதிராக LBW அப்பீல் செய்யப்பட்டது. நடுவர் நிராகரிக்க, ரிவ்யூவும் கோரப்பட்டது. பால் டிராக்கிங், 'Umpire's call' என்று காட்டியதால் தப்பித்தார் ராய். இல்லையேல், முதல் பந்திலேயே வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்!

14 Jul 2019 8 PM
14 Jul 2019 7 PM

மிரட்டல் கிவிகள்!

நியூசிலாந்து பௌலர்களின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கிறது. போல்ட், பேட்ஸ்மேன்களுக்குள்ளே பந்தை வரவழைக்க, அவுட் ஸ்விங் செய்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஹென்றி. இந்தியாவுக்கு எதிரான முதல் ஸ்பெல்லைப் போலவே இப்போதும் பந்துவீசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு நல்ல பந்து, ஒரு விக்கெட், ஆட்டத்தின் போக்கை மாற்றத் தொடங்கும்!

14 Jul 2019 8 PM
ராய் அவுட்
மேட் ஹென்றி பந்துவீச்சில், கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேசன் ராய். அவர் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து - 28/1
14 Jul 2019 8 PM
14 Jul 2019 8 PM

ஹென்றியின் அவுட்ஸ்விங்கர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்துகொண்டிருக்கிறது. ஃபுல் லென்த்தில் பிட்சாகி, அதே வேகத்தோடு ஸ்டம்புகளுக்கு வெளியே செல்லும் ஒவ்வொரு பந்தும், 'உன் விக்கெட் என் கையில்தான்' என்று சொல்வதுபோல் இருக்கிறது!

14 Jul 2019 8 PM

இங்கிலாந்து - 39/1

10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது

14 Jul 2019 8 PM
ரூட் அவுட்..!
59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளிய இழந்துள்ளது இங்கிலாந்து. 30 பந்துகளைச் சந்தித்த ரூட், 7 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். டி கிராந்தோம், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில். அவுட் சைட் எட்ஜாகி லாதமிடம் பிடிபட்டார் ரூட்.
14 Jul 2019 9 PM
14 Jul 2019 9 PM
பேர்ஸ்டோ அவுட்
36 ரன்கள் எடுத்த நிலையில், லாகி ஃபெர்குசன் பந்துவீச்சில் போல்டானார் ஜானி பேர்ஸ்டோ. இங்கிலாந்து - 71/3
14 Jul 2019 9 PM
மோர்கன் அவுட்

லாகி ஃபெர்குசன் பிடித்த அட்டகாசமான கேட்சால் வெளியேறினார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் - 9 (22). இங்கிலாந்து 0 86/4

14 Jul 2019 9 PM

கிராந்தோம்.. வாட்டே ஸ்பெல்..!

அற்புதமான ஸ்பெல்லை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் காலின் டி கிராந்தோம். 10 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து மிகமுக்கியமான ஜோ ரூட்டின் விக்கெட்டைக் கைப்பற்றினார் அவர். சிக்கனமாகப் பந்துவீசியதோடு, தன் அற்புதமான லைன், லென்த்தால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தினார். 

14 Jul 2019 10 PM
ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதம்
நியூசிலாந்தின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்துக்கொண்டிருக்கிறது பட்லர் - ஸ்டோக்ஸ் கூட்டணி. ஜாஸ் பட்லர், 53 பந்துகளில் அரைசதம் கடந்தார். பென் ஸ்டோக்ஸ், 81 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். 
14 Jul 2019 11 PM
14 Jul 2019 10 PM

பட்லர் அவுட்

ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லர், 59 ரன்கள் அடித்த நிலையில், அவுட்டானார். லாகி ஃபெர்குசன் பந்துவீச்சில் டிம் சௌத்தியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் பட்லர்

இங்கிலாந்து உலக சாம்பியன்... லார்ட்ஸில் சரித்திரம் படைத்தது மோர்கன் & கோ #ENGvNZ உலகக் கோப்பை Live Update
14 Jul 2019 11 PM
மேட்ச் டை
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியும் 241 ரன்களே எடுக்க, உலக சாம்பியன் யார் என்பது சூப்பர் ஓவரில் முடிவாகவுள்ளது.
15 Jul 2019 12 AM
இங்கிலாந்து உலக சாம்பியன்
கிரிக்கெட் உலகின் புதிய சாம்பியனாக லார்ட்ஸ் மைதானத்தில் மகுடம் சூடியது இங்கிலாந்து. சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்ததின் அடிப்படையில், வெற்றி பெற்று முதல் கோப்பையை முத்தமிட்டுள்ளது. 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism