Published:Updated:

`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்!’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்

மாரியப்பன் பொ

இந்த உலகக் கோப்பை தான் ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. பேட்டிங் பிதாமகன் சச்சின், வெற்றிகரமான கேப்டன் பாண்டிங், சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.

1
உலகக் கோப்பை நினைவுகள்

2011 உலகக்கோப்பை. ஸ்டீர்ட் கிரிக்கெட் ஆடுபவர்களில் தொடங்கி ஸ்டிக் கிரிக்கெட் ஆடியவர்கள் வரை ஆடும் 90'ஸ் கிட்ஸிடம் ``உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் போட்டி ஒன்றைச் சொல்லுங்கள்?" என்று கேட்டால் பெரும்பாலானோரின் ஒருமித்த பதில், 2011 இறுதிப் போட்டியாகத்தான் இருக்கும். ஆம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா அந்த வெற்றிக்கனியைப் பறித்தத் தருணம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2011 உலகக்கோப்பையின்போது நம்மில் பெரும்பாலானோர் பள்ளியிலோ, கல்லூரியிலோதான் படித்துக்கொண்டிருப்போம். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், அதைப் பற்றி சிலாகித்த, வாதாடிய, கருத்துச் சொல்லிய எண்ணற்ற நினைவுகளைக்கொண்டிருப்போம்.

உலகக் கோப்பையுடன் சச்சின்!

இந்தத் தொடர்தான் ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. பேட்டிங் பிதாமகன் சச்சின், வெற்றிகரமான கேப்டன் பாண்டிங், சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக்கோப்பை. மேலும், தற்போது ஜொலித்துக்கொண்டிருக்கும் ரன் மெஷின்கள் கோலி, டூ பெளஸ்ஸி என ட்ரெண்டில் இருக்கும் பல வீரர்களுக்கு இதுதான் முதல் தொடர்.

2007-ம் ஆண்டு ஐசிசி கவுன்சிலால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் அடுத்த தொடர் நடத்தப்படும் என முடிவுசெய்யப்பட்டது. பிறகு 2009-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததால் பாகிஸ்தானில் நடக்கவிருந்த போட்டிகள் ஏனைய மூன்று நாடுகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்டன. 10 ஐசிசி அணிகள், 4 அசோசியேட் அணிகள் மொத்தம் 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உலகக்கோப்பை ஆரம்பமானது. அத்தகைய ஸ்பெஷல் உலகக்கோப்பையின் சில சுவாரஸ்ய தருணங்கள்...

மாரியப்பன் பொ