Published:Updated:

`விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்ற பந்து?!' - சேப்பாக்கத்தில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஹெட்மெயர் - ஷாய் ஹோப்
ஹெட்மெயர் - ஷாய் ஹோப்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோசப், ஹோல்டர் மற்றும் கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணி
இந்திய அணி

288 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தீபக் சஹார் வீசிய 5வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அணியின் ஸ்கோர் 11 ரன்னாக இருந்தபோது 9 ரன்களுடன் தொடக்க வீரர் அம்பரீஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன் ஹெட்மெயர் கைகோத்தார். இந்த ஜோடி, இந்திய பௌலர்களின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்க்கொண்டு ரன் சேர்த்தது. ஒருபுறம் ஷாய் ஹோப் பொறுமையாக விளையாடிய நிலையில், மறுபுறம் ஹெட்மெயர் பவுண்டரிகளாக விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் வலைப் பயிற்சி! #PhotoAlbum

இந்த ஜோடியைப் பிரிக்க முயன்ற கோலியின் வியூகங்கள் 39வது ஓவர் வரை பலிக்கவில்லை. 85 பந்துகளில் சதமடித்த ஹெட்மெயர்,ஷமி வீசிய 39வது ஓவரில் 139 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஹோப்புடன் இணைந்த நிகோலஸ் பூரன், வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

ஷாய் ஹோப்
ஷாய் ஹோப்

இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷாய் ஹோப் 102 ரன்களுடனும் பூரன் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சஹார் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 7.5 ஓவர்கள் பந்துவீசிய அறிமுக வீரர் சிவம் துபே, விக்கெட் எதுவும் எடுக்காமல் 68 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ஹெட்மெயர்
ஹெட்மெயர்

தொடக்கம் முதலே பேட்டிங்கில் கலக்கிய ஹெட்மெயர், 106 பகுதிகளில் 139 ரன்கள் குவித்த்ர். இதில், 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார். குறிப்பாக ஜடேஜா வீசிய 36வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரின் 5வது பந்தில் அவர் அடித்த சிக்ஸர், மைதானத்துக்கு வெளியே சென்றது. ஆடியன்ஸ் கேலரியின் மேற்கூரையைத் தாண்டி பந்து அருகில் உள்ள விக்டோரியா ஹாஸ்டல் பகுதியில் விழுந்ததாகத் தெரிகிறது.