Published:Updated:

`ஹிட்மேன் 300, வாய்ப்பிருக்கு!' ரோஹித்தின் சாதனைகள் குறித்து மக்கள் கருத்து #VikatanPollResults

 ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஒருநாள் போட்டிகளில் 8-வது முறையாக 150+ ஸ்கோர், 'ஒரு வருடத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களைக் குவித்த இந்தியர்' பட்டியலில் கடந்த 7 வருடங்களாகத் தொடர்ந்து முதலிடம்... ரோஹித்தின் சாதனைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. இருவருமே சதமடிக்க ரோஹித் அதிரடி காட்டி 138 பந்துகளில் 159 ரன்கள் குவித்தார். இது அவரின் 8-வது 150+ ஸ்கோர்.

`7 வருஷமா ஃபர்ஸ்ட்; 2019-ல 7 சதம்'- ரெக்கார்டுகளை பிரேக் செய்த `ஹிட் மேன்' ரோஹித்!

அது மட்டுமன்றி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களில் தனிநபர்களாக அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்தவர்கள் பட்டியலில் ரோஹித் கடந்த 7 வருடங்களாக முதலிடத்தில் உள்ளார். அவர் 2013-ல் 209 ரன்கள், 2014-ல் 264, 2015-ல் 150, 2016-ல் 171, 2017-ல் 208, 2018-ல் 162, 2019-ல் 159 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித்தின் இந்தச் சாதனைகள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

ஹிட்மேன் ரோஹித்தின் நேற்றைய அதிரடி மற்றும் சாதனைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்...

Rohit Sharma #VikatanPollResults
Rohit Sharma #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Rohit Sharma #VikatanPollResults
Rohit Sharma #VikatanPollResults

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Rohit Sharma #VikatanPollResults
Rohit Sharma #VikatanPollResults

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Rohit Sharma #VikatanPollResults
Rohit Sharma #VikatanPollResults

மொத்தத்தில், ரோஹித்தின் மீது பலரும் நம்பிக்கையுடன் இருப்பதையே இந்த Poll காட்டுகிறது. 51% பேர், 'ஹிட்மேன் 300கூட அடிப்பார்' என்ற பதிலையே தேர்வு செய்துள்ளனர். ஆனால், அதற்கு அடுத்தபடியாக 21.08% 'கன்சிஸ்டன்ஸி இல்லை' என விமர்சனமும் வைத்துள்ளனர். ஒவ்வொரு பதில்களும் பெற்ற சதவிகிதம் இதோ...

Rohit Sharma #VikatanPollResults
Rohit Sharma #VikatanPollResults
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு