Published:Updated:

பா.ஜ.க எம்.பி பாலியல் தொல்லை: மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்!

போராட்டத்தில் வீராங்கனைகள்
News
போராட்டத்தில் வீராங்கனைகள்

`பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க எம்.பி-யை கைது செய்யும் வரை ஓயமாட்டோம். கடந்த முறை நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம். இம்முறை இப்பிரச்னை அரசியலாக்கப்படாது என்று நம்புகிறோம். நாங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப மாட்டோம்’ - டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகள்

Published:Updated:

பா.ஜ.க எம்.பி பாலியல் தொல்லை: மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்!

`பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க எம்.பி-யை கைது செய்யும் வரை ஓயமாட்டோம். கடந்த முறை நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம். இம்முறை இப்பிரச்னை அரசியலாக்கப்படாது என்று நம்புகிறோம். நாங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப மாட்டோம்’ - டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகள்

போராட்டத்தில் வீராங்கனைகள்
News
போராட்டத்தில் வீராங்கனைகள்

பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூசன் சர்மா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. 7 பெண் மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூசன் மீது டெல்லி போலீஸில் புகார் செய்தனர். ஆனால், எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் பதவியில் இருந்தும் நீக்கப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதமே, பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்புகார் குறித்து விசாரிக்க, மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நியமித்தது.

பா.ஜ.க எம்.பி பாலியல் தொல்லை: மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்!

அக்கமிட்டி விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் அக்கமிட்டி இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து வீராங்கனைகள் நேற்று மீண்டும் டெல்லியில் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். சம்பந்தப்பட்ட பா.ஜ.க எம்.பி மீது வழக்குப் பதிவு செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத் கூறுகையில், ``நாங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப மாட்டோம். கடந்த முறை நாங்கள் தவறாக வழிநடத்தப் பட்டோம். இம்முறை இப்பிரச்னை அரசியலாக்கப்படாது என்று நம்புகிறேன். யாரையும் புறக்கணிக்க மாட்டோம். எங்களுக்கு ஆதரவு கொடுக்க விரும்புபவர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்" என்றார்.

மற்றொரு வீராங்கனையான பஞ்ரங் புனியா இது குறித்து கூறுகையில், ``எங்களது போராட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி போன்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் கலந்து கொள்ளலாம். எங்களிடம் கடந்த முறை தவறான வாக்குறுதி கொடுக்கப்பட்டது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இரவும் பகலும் இங்கேயேதான் இருந்து போராட்டம் நடத்துவோம்.

நாங்கள் விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளை தொடர்புகொள்ள கடந்த மூன்று மாதங்களாக முயன்றோம். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்த கமிட்டி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சகமும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் போனைக்கூட எடுத்துப் பேச மறுக்கின்றனர். நாங்கள் நாட்டுக்காக பதக்கங்களை வென்றுள்ளோம்" என்றார்.

மற்றொரு விளையாட்டு வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ``விசாரணை அறிக்கையை அரசு வெளியிடாமல் இருக்கிறது. அந்த அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். விசாரணை அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் மைனர். எனவே, புகார் செய்த பெண்களின் பெயர்கள் வெளியில் கசியக் கூடாது" என்று தெரிவித்தார்.

பா.ஜ.க எம்.பி பாலியல் தொல்லை: மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள்!

அரசு நியமித்த கமிட்டி, ஏப்ரல் முதல் வாரத்தில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால், விசாரணை அறிக்கையில் என்ன தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசனுக்கு எதிராக வீராங்கனைகள் தெரிவித்த பாலியல் துன்புறுத்தல் புகார்களை நிரூபிக்க, வீராங்கனைகள் தவறிவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு மே 7-ம் தேதி நடக்க இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதில்லை என்று பிரிஜ் பூசன் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே 12 ஆண்டுகள் இப்பதவியில் இருந்துவிட்டார். 12 ஆண்டுகள் விளையாட்டுத் துறையில் தலைவராக இருப்பவர்கள் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.