ஜெர்மனியில் நடைபெற்ற 24வது Nord west 2023 கோப்பை செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த IM Ilja Schneider-ரை தோற்கடித்து சென்னையை சேர்ந்த N.R.விக்னேஷ் வெற்றிப் பெற்றுள்ளார். ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைத் தாண்டி இந்தியாவின் 80 வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

விக்னேஷின் சகோதரர் விசாக் 2019-ல் இந்தியாவின் 59 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றிருந்தார். இதன் மூலம் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் சகோதரர்கள் என்ற பெருமையை விசாக் மற்றும் விக்னேஷ் பெற்றிருக்கின்றனர்.
80 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற விக்னேஷ் இது குறித்து பேசும்போது, “ கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றது ஒரு மகிழ்ச்சியான தருணம். செஸ் விளையாட்டில் மேலும் நிறைய சாதனைகளை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்த பட்டத்தை என் அப்பாவுக்கும் எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.