Published:Updated:

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

கிரிக்கெட் வீரர்கள்
News
கிரிக்கெட் வீரர்கள்

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் இவர்கள்தான்!

கிரிக்கெட் விளையாட்டிற்கும் , அதில் விளையாடும் வீரர்களுக்கும் என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் இந்த விளையாட்டில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ்-களைக் கொண்ட டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்!

விராட் கோலி

அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.

விராட் கோலி
விராட் கோலி

கடந்த மூன்று ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சரியாக விளையாடத விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ட்விட்டரில் 50 மில்லியன் பாலோவர்சுகளைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

சச்சின் டெண்டுல்கர்

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது முதல் சர்வதேசப் பயணத்தைத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரையில் சச்சினின் சாதனை பலருக்கும் எட்ட முடியாத ஒரு மைல்கல்லாகவே இருக்கிறது. இவரை சுமார் 35.9 மில்லியன் பேர் ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள்.

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியில் ஹிட் மேன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரோஹித் சர்மா. விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, மும்பை அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர். ரோஹித் சர்மா ட்விட்டரில் 19.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

ஹர்திக் பாண்டியா

2016ம் ஆண்டு இந்திய அணியில் ஆல் ரவுண்டராக அறிமுகமானார் ஹர்திக் பாண்டியா. 2017ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 811 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதே வருடத்தில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக உருவெடுத்த இவருக்கு ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

யுவராஜ் சிங்

இப்பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பவர் யுவராஜ் சிங். இளமையிலேயே டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வம் கொண்டவர். அவரது அபாரமான திறமையை கண்ட தேசிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவரை தேர்வு செய்தது.

`சச்சினை முந்திய கோலி' ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்தியாவின் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!

யுவராஜுக்கு மிகப்பெரிய ரசிகர்களை ஏற்படுத்தியது, அவரை மிகப்பெரிய நட்சத்திர வீரராக மாற்றியது 2002 ல் நடைபெற்ற நேட் வெஸ்ட் சீரிஸ் தான். அபாரமாக ஆடிய யுவராஜ் சிங் அந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மாறினார். ஆட்ட நாயகனான யுவராஜ் சிங்கை ட்விட்டரில் 5.4 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.