Published:Updated:

WTA Chennai Open 2022 Day 6 : தன் முதல் WTA இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Linda Fruhvirtova !

WTA Chennai Open 2022
Live Update
WTA Chennai Open 2022

WTA Chennai Open 2022: சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

17 Sep 2022 11 PM

கோப்பைக்கான இறுதி யுத்தம்!

WTA Chennai Open 2022 Day 6 : தன் முதல் WTA இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Linda Fruhvirtova !

நாளை நடக்கவிருக்கும் சென்னை ஓப்பன் 2022 தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்தின் Magda Linette மற்றும் செக் குடியரசின் Linda Fruhvirtova மோதவிருக்கின்றனர்.

17 Sep 2022 10 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காயம் காரணமாக K.Swan விலகல். இறுதிப்போட்டியில் Magda Linette!

Magda Linette
Magda Linette

இரண்டாவது அரையிறுதி போட்டியிலிருந்து காயம் காரணமாக K.Swan விலகவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் போலந்தின் Magda Linette.

17 Sep 2022 10 PM

சென்னை ரசிகர்களுக்கு நன்றி!

Linda Fruhvirtova
Linda Fruhvirtova

" நான் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறந்த பார்வையாளர்களை கொண்ட மைதானம் இதுவே! " சென்னை ரசிகர்களுக்கு நன்றி கூறிய Linda.

17 Sep 2022 10 PM

இறுதிப்போட்டியில் Linda Fruhvirtova!

Linda Fruhvirtova
Linda Fruhvirtova

அர்ஜென்டினாவின் Nadia Podoroska-வை 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஓப்பன் 2022 தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் செக் குடியரசை சேர்ந்த 17 வயது Linda Fruhvirtova.

17 Sep 2022 9 PM

இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த Linda!

Linda Fruhvirtova
Linda Fruhvirtova

முதல் செட்டை இழந்த நிலையில் இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றார் Linda Fruhvirtova. தொடங்கியது வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்.

17 Sep 2022 8 PM

Nadia Podoroska முன்னிலை!

Nadia Podoroska
Nadia Podoroska

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார் Nadia Podoroska.

17 Sep 2022 6 PM

இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள்!

WTA Chennai Open 2022
WTA Chennai Open 2022

இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் Nadia Podoroska உடன் மோதுகிறார் தொடரின் மிக இளைய வீராங்கனையான செக் குடியரசின் Linda Fruhvirtova.

இதை தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பிரிட்டனின் Katie Swan மற்றும் போலந்தின் Magda Linette ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தயிருக்கின்றனர்.

17 Sep 2022 6 PM

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய G.Dabrowski - L.Stefani ஜோடி!

G.Dabrowski - L.Stefani
G.Dabrowski - L.Stefani

சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் P.Plipuech - M.Uchijima ஜோடியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் G.Dabrowski - L.Stefani இணை.