Published:Updated:

ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

ரஃபேல் நடால்

ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டின் மூலம் எவ்வளவு பரிசுத்தொகை இதுவரை வென்றிருக்கிறார் என்ற தரவுகளை வெளியிட்டது 'Association of Tennis Professionals'.

ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டின் மூலம் எவ்வளவு பரிசுத்தொகை இதுவரை வென்றிருக்கிறார் என்ற தரவுகளை வெளியிட்டது 'Association of Tennis Professionals'.

Published:Updated:
ரஃபேல் நடால்

ரஃபேல் நடால் - ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரரான இவர் தனது நான்கு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர். 'Association of Tennis Professionals' என்ற சங்கத்தின் உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருப்பவர். இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை 90 பட்டங்களை வென்றிருக்கும் நடால், ஒற்றையர் பிரிவில் களிமண் ஆடுகளங்களில் மட்டும் 62 பட்டங்களை வென்றுள்ளார், அவர் பெற்ற 13 பிரெஞ்சு ஓப்பன் பட்டங்களும் இதில் அடங்கும். கிலே எனப்படும் களிமண் ஆடுகளங்களில் தொடர்ச்சியாக அவர் பெற்ற 81 வெற்றிகளே, ஒரே பரப்பில் ஒரு வீரர் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகளாக இருக்கிறது.

Nadal and Medvedev Australian open - 2022
Nadal and Medvedev Australian open - 2022
Clive Brunskill

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது கடந்த ஜனவரி 30 அன்று ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த டானில் மெட்வெடேவை தோற்கடித்து தனது 21-வது கிராண்ட் ஸ்லாமை வென்றார். இத்துடன் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்னும் சாதனையையும் படைத்தார். 35 வயதான ரஃபேல் நடால் அவரது வாழ்க்கை முழுவதும் தனிப்பட்ட முறையில் (ஒற்றையர்) 89 பட்டங்களையும், இரட்டையர்கள் பிரிவில் 11 பட்டங்களையும் குவித்துள்ளார்.

மொத்தத்தில் அவர் பரிசுத் தொகையாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தைச் சேர்த்து டென்னிஸ் விளையாட்டின் மூலம் சம்பாதித்தது 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 950 கோடி ரூபாய்). இந்த ஆஸ்திரேலிய ஓப்பனில் வெற்றி பெற்றதன் மூலம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய்) பரிசுத் தொகையாகப் பெற்றிருக்கிறார் நடால். இந்த எண்ணிக்கையில் வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் தொடர்பான நடாலின் கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை.

ரஃபேல் நடால்
ரஃபேல் நடால்
இவ்வளவு வருமானத்திற்குப் பிறகும் ஜோகோவிச் மற்றும் பெடரரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறார் நடால். முதல் இடத்தில் 154 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் பெடரரும் இருக்கின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism