Published:Updated:

அம்மாவான பின்னும் ஃபோர்ஸ் குறையவில்லை… விம்பிள்டனில் அசத்திய சானியா மிர்ஸா! #SaniaMirza

அம்மாவானப்பின் விம்பிள்டனில் விளையாடிய சானியா மிர்ஸாவின் சர்வீஸ் வேகத்திலும், ஃபோர்ஸிலும் துளி குறைவும் இல்லை என விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதேப்போல் களத்தில் சானியாவின் மூவ்மென்ட்ஸும் மிகவும் வேகமாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தற்போது 2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார். குழந்தைப்பிறப்பு காரணமாக மூன்று ஆண்டுகளாக விம்பிள்டனில் விளையாடாமல் இருந்த சானியா மிர்ஸா, அமெரிக்காவின் பெத்தானியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார். இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் டெஸிரே கிராசிக் - அலெக்ஸா குராச்சி இணையை 7-5, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது சானியா - பெத்தானி இணை.

அம்மாவானப்பின் விம்பிள்டனில் விளையாடிய சானியா மிர்ஸாவின் சர்வீஸ் வேகத்திலும், ஃபோர்ஸிலும் துளி குறைவும் இல்லை என விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதேப்போல் களத்தில் சானியாவின் மூவ்மென்ட்ஸும் மிகவும் வேகமாக இருந்தது. இரட்டையர் பிரிவு மட்டுமல்லாமல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்ஸா - ரோஹன் போபண்ணாவுடன் இணைந்துவிளையாடுகிறார்.

சானியா மிர்ஸா - பெத்தானி
சானியா மிர்ஸா - பெத்தானி
சானியா மிர்ஸா - பெத்தானி
சானியா மிர்ஸா - பெத்தானி
சானியா மிர்ஸா - பெத்தானி
சானியா மிர்ஸா - பெத்தானி

இன்னும் சற்று நேரத்தில் (இந்திய நேரப்படி மாலை 3.30 மணி) சானியா மிர்ஸா - ரோஹன் போபண்ணா இணை மற்றொரு இந்திய இணையான ராம்குமார் ராமநாதன் - அங்கிதா ரெய்னா இணையுடன் முதல் சுற்றில் மோத இருக்கிறது.

விம்பிள்டனுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கிலும் கலந்துகொள்ள இருக்கிறார் சானியா. 2008 பீஜிங், 2012 லண்டன், 2016 ரியோவைத் தொடர்ந்து நான்காவது முறையாகத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் 34 வயதான சானியா மிர்ஸா. இளம் வீராங்கனையான அங்கிதா ரெய்னாவுடன் இணைந்து சானியா ஒலிம்பிக்கில் விளையாட இருக்கிறார்.

குழந்தை பிறப்பு காரணமாக 2018-ல் இருந்து எந்த டென்னிஸ் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார் சானியா மிர்ஸா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணந்திருக்கும் சானியா மிர்ஸாவுக்கு 2018 அக்டோபரில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஸான் மிர்ஸா மாலிக் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு