Published:Updated:

"உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வி பெற..."- ஆதரவு கரம் நீட்டும் ரோஜர் பெடரர்!

Roger Federer | ரோஜர் பெடரர் ( AP )

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வியைப் பெற தன்னுடைய அமைப்பின் வழியாக நன்கொடை அளித்துள்ளார்.

"உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வி பெற..."- ஆதரவு கரம் நீட்டும் ரோஜர் பெடரர்!

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வியைப் பெற தன்னுடைய அமைப்பின் வழியாக நன்கொடை அளித்துள்ளார்.

Published:Updated:
Roger Federer | ரோஜர் பெடரர் ( AP )

உக்ரைனின் போர்க் காட்சிகள் தன்னையும் குடும்பத்தையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வருந்தி ட்விட் செய்துள்ளார். எப்போதுமே இயற்கை பேரிடர் என்று வரும் போதெல்லாம் உதவி கரம் நீட்டும் முதல் நபராக இருக்கும் பெடரர், தற்போது உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தாக்கத்தில் இருந்து மீண்டு வர 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது ட்விட்டின் தமிழாக்கம் இதோ,

"உக்ரைனில் இருந்து வருகிற காட்சிகளால் நானும் என் குடும்பமும் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். கடுமையாக பாதிக்கப்படுகிற அப்பாவி மக்களைப் பார்க்கும் போது மனசு உடைந்து போகிறது. அமைதிக்கு துணை நிற்போம்.

உக்ரைனில் 6 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகள் இன்றைக்குக் கல்வியையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். நாங்கள் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ உள்ளோம். கல்வியைப் பெற முடியாதளவுக்கு இது நிச்சயம் சிக்கலான நேரம்தான். தீவிரமாக மனச்சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உதவி சென்று சேரும்.

ரோஜரர் பெடரர் பவுண்டேஷன் வழியாக 'War Child Holland' என்கிற அமைப்புக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்க உள்ளோம். உக்ரைனின் குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடங்க இது உதவியாக இருக்கட்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர், முன்னாள் உலக சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே 2022-ம் ஆண்டு தான் பெறுகிற போட்டிகளின் பரிசுத் தொகை அனைத்தையும் உக்ரைனில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.