Published:Updated:

தடுப்பூசிக்கு நோ, விசா ரத்து, மேல்முறையீடு... ஜோகோவிச் vs ஆஸ்திரேலியா பிரச்னையின் பின்னணி என்ன?

Novak Djokovic

ஜோக்கோவிச்சிற்கு சரியான நேரம் வழங்கப்பட்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் முறையாக நடந்திருந்தால் இந்தத் தீர்ப்பு ஜோக்கோவிச்சிற்கு எதிராக வந்திருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசிக்கு நோ, விசா ரத்து, மேல்முறையீடு... ஜோகோவிச் vs ஆஸ்திரேலியா பிரச்னையின் பின்னணி என்ன?

ஜோக்கோவிச்சிற்கு சரியான நேரம் வழங்கப்பட்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் முறையாக நடந்திருந்தால் இந்தத் தீர்ப்பு ஜோக்கோவிச்சிற்கு எதிராக வந்திருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
Novak Djokovic

ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வருகிற 17 ஆம் தேதியே தொடங்க இருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே ஜோக்கோவிச் தனது முதல் கேமை வென்றிருக்கிறார். ஜோக்கோவிச்சை எதிர்த்து ஆடியது நடாலோ மெத்வதேவோ அல்ல. ஆஸ்திரேலிய அரசாங்கம்!

ஆம், ஆஸ்திரேலிய ஓபனை முன்னிட்டு மெல்பர்னுக்குப் பறந்திருந்த ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடுமையாக கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படுவதை முன்பே பார்த்திருக்கிறோம். கடந்த 2020-21 இல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியே அங்கே விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளால் கொஞ்சம் அதிருப்தி அடைந்திருந்தது. அதேபோல், இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடருமே அங்கே விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்படும் என்ற பேச்சுகளெல்லாம் இருந்தன. பல இங்கிலாந்து வீரர்களுமே ஆஸ்திரேலிய நாட்டின் கொரோனா கட்டுப்பாடுகளை குறிப்பிட்டு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

Novak Djokovic
Novak Djokovic

பீட்டர்சன் போன்ற கமென்டேட்டர்களுமே இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த ஆஸ்திரேலியாவிற்கு சென்று தங்கி வேலை செய்வது இயலாத காரியம் என பின் வாங்கியிருந்தார். ஆக, கொரோனா கட்டுப்பாடுகளை முன்வைத்து ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் உலாவிக்கொண்டேதான் இருந்தது. அதில் சமீபமாக சிக்கியவர்தான் நோவக் ஜோக்கோவிச். தடுப்பூசிகளுக்கு எதிரான மனநிலையை கொண்டு இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஜோக்கோவிச் இருந்தார். ஆஸ்திரேலிய ஓபனை முன்னிட்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பின் மருத்துவக்குழு சார்பில் ஜோக்கோவிச்சிற்கு தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து சிறப்பு அனுமதியும் வழங்கியிருந்தனர். இந்த அனுமதியோடு ஜோக்கோவிச் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு பயணப்பட்டிருந்தார்.

ஆனால், மெல்போர்னில் தரையிறங்கிய ஜோக்கோவிச் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். தடுப்பூசி செலுத்தவில்லை, முறையான விசா இல்லை எனக்கூறி ஜோக்கோவிச் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரை ஒரு நாட்டின் அரசாங்கம் இவ்வளவு மோசமாக நடத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென ஜோக்கோவிச் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஜோக்கோவிச் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு முன்பாக ரசிகர்களும் குவிந்திருந்தனர். ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கம் ஜோக்கோவிச்சை தங்கள் நாட்டிற்குள் நுழையவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஆஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசனும் கறார் காட்டினார்.

ஜோக்கோவிச்சின் சகாக்கள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. 'ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது முறையான நடவடிக்கை அல்ல. இந்தத் தீர்ப்பு வெளியான அரைமணி நேரத்திற்குள் ஜோக்கோவிச் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்' என நீதிபதி, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்ப்பை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஜோக்கோவிச் விடுவிக்கப்பட்டார்.

Novak Djokovic
Novak Djokovic
விசா ரத்து நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருக்கப்போகிறேன். ஆஸ்திரேலிய ஓபனில்தான் என்னுடைய முழுக்கவனமும் இருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடன் நின்ற அத்தனை பேருக்கும் நன்றி!
ஜோக்கோவிச்

இந்த விவகாரம் இத்தோடு முடிவடைந்துவிட்டதாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வந்திருப்பதால் அந்த அரசாங்கம் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜோக்கோவிச்சிற்கு தடை விதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. "ஜோக்கோவிச்சிற்கு அவருடைய குழுவுடன் விவாதித்து விளக்கம் அளிப்பதற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் காலை 4 மணிக்கு! அந்த சமயத்தில் அவர் யாரை தொடர்பு கொள்வார்?" என ஜோக்கோவிச் தரப்பு கேட்ட கேள்வியை முன்வைத்தே நீதிபதி ஜோக்கோவிச்சிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஜோக்கோவிச்சிற்கு கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கலாம் என எங்கேயும் குறிப்பிடவில்லை.

ஜோக்கோவிச்சிற்கு சரியான நேரம் வழங்கப்பட்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் முறையாக நடந்திருந்தால் இந்தத் தீர்ப்பு ஜோக்கோவிச்சிற்கு எதிராக வந்திருப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை முன்வைத்து அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜோக்கோவிச்சிற்கு தடை விதிக்குமா என்பது அடுத்தடுத்த நாள்களிலேயே தெரியவரும்.

இந்த ஆஸ்திரேலிய ஓபனை ஜோக்கோவிச் வென்றால் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக க்ராண்ட் ஸ்லாம்களை வென்ற வீரராக மகத்தான சாதனையை படைப்பார். ஆனால், இந்த முறை அவர் டென்னிஸ் கோர்ட்டில் எதிர்கொள்ளும் சவால்களை விட வெளியே எதிர்கொள்ளும் சவால்களே அதிகமாக இருக்கின்றன. வென்று காட்டுவாரா ஜோக்கோவிச்?