Published:Updated:

`இதுதான் என் வாழ்க்கை!' - சானியா வெளியிட்ட பவர்ஃபுல் போட்டோவுக்கு குவியும் பாராட்டுகள்

சானியா மிர்சா
சானியா மிர்சா

அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போன்று மகப்பேறு முடிந்து மீண்டும் களத்துக்குத் திரும்பியவர் சானியா.

`சானியா மிர்சா, இந்தியப் பெண்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்பவர். விளையாட்டுத்துறையில் பெண்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க சானியா மிர்சாவும் ஒரு காரணம். ‘ஒரு புகைப்படம் போதும் என் வாழ்க்கையைக் கூற’ என்ற கேப்ஷனுடன் சானியா வெளியிட்டுள்ள புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போன்று மகப்பேறு முடிந்து மீண்டும் களத்துக்கு திரும்பியவர் சானியா.

சானியா மிர்சா
சானியா மிர்சா

2010-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கரம்பிடித்தார். பாகிஸ்தானின் மருமகள் என்றாலும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கெடுத்துவருகிறார். 2018-ம் ஆண்டு, சானியா - மாலிக் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

`இப்படி நடப்பதே அரிது; கிரீன் சிக்னல் கொடுத்த நிர்வாகம்’ - மனைவியைக் காண விரைந்த மிட்செல் ஸ்டார்க்

மகப்பேறுக்குப் பின், சானியாவுக்கு உடல் எடை அதிகரித்தது. இதன் காரணமாக, அவர் சமூக வலைதளத்தில் அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டார். சானியா மீண்டும் டென்னிஸ் களத்துக்குத் திரும்புவாரா, அவரால் அதே ஆக்ரோஷத்துடன் விளையாட முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, உடல் எடையை வெகுவாகக் குறைந்தார். ‘வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற ரீதியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சானியா. 2 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் களத்துக்குத் திரும்பிய சானியா, மீண்டும் ஆக்ரோஷமாக ராக்கெட்டுகளைப் பறக்கவிட்டுவருகிறார்.

சானியா மிர்சா
சானியா மிர்சா

ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய சாய்னா இப்போது துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்றார். இரட்டையா் ஆட்டத்தில் சானியா மிா்ஸா- அங்கிதா இணை இந்தோனேஷியா இணைய வீழ்த்தியது. அங்கிதா - சானியா மிர்சாவின் அபார ஆட்டத்தால் முதன்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னர், சானியா ஒரு கையில் தன் குழந்தை இஸ்ஸான் (Izhaan) மற்றொரு கையில் டென்னிஸ் பேட்டுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ``ஒரு புகைப்படம் போதும் என் வாழ்க்கையைக் கூற” என்று பதிவிட்டுள்ளார். மகன் இஸ்ஸான், தனக்குத் தூண்டுதலாக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு