Published:Updated:

ஆஷ்லி பார்டி... டென்னிஸை விட்டே கிரிக்கெட்டுக்கு ஓடியவர்... மீண்டு வந்து விம்பிள்டன் வென்றது எப்படி?

2011-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்ற ஆஷ்லி பார்டி, 2021-ல் விம்பிள்டன் சாம்பியன் ஆகிறார். இந்த இடைப்பட்ட 10 வருடங்களில் டென்னிஸ் அரங்கில் மட்டுமே அவர் உழைக்கவில்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அவர் பங்கெடுத்த முதல் 12 கிராண்ட் ஸ்லாம்களில், ஏழில் முதல் சுற்றோடு வெளியேறுகிறார். இரண்டு தொடர்களில் இரண்டாவது சுற்றோடு வெளியேறுகிறார். மூன்று முறை தகுதிச் சுற்றையே தாண்ட முடியவில்லை. சர்வதேச அளவில் அவரது ரேங்க் 300+ ஆக இருக்கிறது. திடீரென்று டென்னிஸில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவிக்கிறார் 18 வயது பார்டி.

இரண்டு ஆண்டுகள் டென்னிஸில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். 2017-ல் கம்பேக். 2017-ன் தொடக்கத்தில் 271-வது ரேங்கில் இருப்பவர், அந்த ஆண்டின் முடிவில் 17-வது ரேங்க் வரை முன்னேறுகிறார். அந்த 2 வருட இடைவெளியில் தன் டென்னிஸ் நுணுக்கங்களை அவர் மாற்றினார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அவர் டென்னிஸ் பேட்டைத் தொடாமல், கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுத்து பிக்பேஷ் ஆடச் சென்றார். ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த வீடியோவைப் பாருங்கள், இன்னும் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு