Published:Updated:

“நேர்காணலின்போது எனக்கு கொரோனா தொற்று இருந்ததை அறிவேன்”- உண்மையை உடைத்த ஜோகோவிச்

Novak Djokovic
News
Novak Djokovic

நீதிமன்ற தீர்ப்பை தாண்டி அவரின் விசாவை மற்றுமொரு முறை ரத்து செய்ய ஆஸ்திரேலியை அரசுக்கு உரிமை இருப்பதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு பயணப்பட்டுள்ளார் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச். ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாததை காரணங்காட்டி விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

Novak Djokovic
Novak Djokovic

இதையடுத்து தனக்கு நியாயம் கிடைக்கவேண்டி அந்நாட்டு நீதிமன்றத்தை நாடிய ஜோகோவிச் தனக்கு சாதகமாக தீர்ப்பையும் பெற்றார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை தாண்டி அவரின் விசாவை மற்றுமொரு முறை ரத்து செய்ய ஆஸ்திரேலியை அரசுக்கு உரிமை இருப்பதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்நடவடிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அலெக்ஸ் ஹாக்கே மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோவிட் கட்டுப்பாடுகளை மிக கண்டிப்பாக பின்பற்றும் முதன்மையான நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. நீதிமன்றத்தின் தீர்ப்பைப் மீறி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று ஆஸ்திரேலியா வந்திறங்கிய போது இமிகிரேஷன் படிவத்தில் ஜோகோவிச் செய்த சிறிய தவறு இரண்டாவது அவர் வருவதற்கு முன்பாக தன் சொந்த நாட்டில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதது.

இந்த இரு சர்ச்சைகளுக்கான விளக்கங்களை தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜோகோவிச். அதில் அவர் “ என்னுடைய பயண படிவத்தில் தவறு இருப்பது உண்மைதான். அது எந்தவொரு உள்நோக்கத்துடனும் செய்யப்பட்டதல்ல. தனி மனித தவறினால் மட்டுமே அது நிகழ்ந்தது. இத்தவறுக்காக அப்படிவத்தை நிரப்பிய பயண ஏஜென்ட் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்” என்று விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விதிமுறைகளை பின்பற்றாததை பற்றிக் கூறும் அவர் “ கடந்த டிசம்பர் 14-ம் தேதி பெல்கிரேட்டில் நடந்த ஒரு கூடைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு இருந்த பலருக்கும் கொரோனா தொற்று இருந்ததை அடுத்து டிசம்பர் 16 அன்று ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அதில் தொற்று இல்லை என்று தெரிந்தவுடன் PCR டெஸ்ட்டையும் அதே நாளில் எடுத்துக்கொண்டேன்”

“அதற்கு அடுத்த நாளில் அதே நகரில் குழந்தைகளுக்கான மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன். அதற்கு முன்பாகவும் ஆன்டிஜென் டெஸ்ட் எடுத்து தொற்று இல்லை என்று அறிந்தபின்னே சென்றேன். ஆனால் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று முன்தினம் எடுத்த PCR டெஸ்டின் முடிவுகள் நான் செல்வதற்கு முன்பு வரை வரவில்லை. மேலும் என் உடல் நலமும் நன்றாகவே இருந்தது”

எனக்கு தொற்று உள்ளது என்று தெரிந்த பின்பு அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவிட்டேன். ஆனால் L’Equipe உடனான நேர்காணலை மட்டும் நான் புறக்கணிக்கவில்லை. மாஸ்க் அணியப்பட்டு முழுமையான தனிமனித இடைவெளியுடன்தான் அந்த நேர்காணல் நடைபெற்றது. இறுதியில் புகைப்படம் எடுப்பதற்கான மட்டுமே என் மாஸ்க்கைக் கழற்றினேன்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை முழுமையாக தனிமை படுத்திக்கொண்டேன். கொரோனா தொற்றுடன் அந்நிகழ்ச்சிக்கு சென்றது தவறு தான். அன்று நான் அங்கு சென்றிருக்க கூடாது” என்று கூறியுள்ளார் ஜோகோவிச். எதிர்வரும் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை ஜோகோவிச் வென்றால் அது அவரின் 21-வது கிராண்ட்ஸ்லாம் டைட்டில். ஆனால் அவர் தொடரில் பங்கேற்பதே ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரின் கையில்தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.