Published:Updated:

ரஃபேல் நடால்: 14வது பிரெஞ்சு ஓப்பன் டைட்டில் வெற்றி; 22வது கிராண்ட் ஸ்லாம் - 36 வயதில் சாதனை!

ரஃபேல் நடால்

வெற்றிக்குப் பின்பு, இந்த 36 வயதான டென்னிஸ் வீரர், குழந்தை போல கண்ணீர் சிந்தி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Published:Updated:

ரஃபேல் நடால்: 14வது பிரெஞ்சு ஓப்பன் டைட்டில் வெற்றி; 22வது கிராண்ட் ஸ்லாம் - 36 வயதில் சாதனை!

வெற்றிக்குப் பின்பு, இந்த 36 வயதான டென்னிஸ் வீரர், குழந்தை போல கண்ணீர் சிந்தி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரஃபேல் நடால்
ரஃபேல் நடால் மீண்டும் ஒரு முறை சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தனது 14வது பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்றிருக்கிற இந்த 36 வயதான டென்னிஸ் வீரர், வெற்றிக்குப் பின்பு, குழந்தை போல கண்ணீர் சிந்தி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்புதான் ரஃபேல் நடால் தன்னுடைய 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நடாலுக்கு இது 22வது கிராண்ட் ஸ்லாம் பட்டம். உலகின் எந்த வீரரைவிடவும் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றது இவர்தான்.

ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகிய இருவருக்கும் முன்னிலையில் நடால் இருக்கிறார். ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடமாக களத்தில் இறங்கவில்லை.

ரஃபேல் நடால்
ரஃபேல் நடால்

நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓப்பன் போட்டியில் கொரோனா தடுப்பூசி போடாததால் கலந்து கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து அவர் பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் நடாலிடம் தோல்வியுற்றார்.

இந்த வருட பிரெஞ்சு ஓப்பன் இறுதி போட்டியில் 23 வயதான காஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட நடால், 6-3, 6-3, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

2005-ம் ஆண்டில் முதல் பிரெஞ்சு ஓபன் டைட்டிலை நடால் வென்ற போது அவருக்கு வயது 19. கடைசியாக விளையாடிய 11 இறுதி போட்டிகளிலும் வெற்றி பெற்று களிமண் களத்தின் ராஜாவாக மீண்டும் மகுடம் சூடியிருக்கிறார்.

36 வயதில் பிரெஞ்சு ஓப்பன் வெல்லும் முதல் ஆடவர் என்கிற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார். அதற்கு முன்பு வரை 1972-ல் Andre Gimeno தனது 34 வயதில் பெற்ற வெற்றிதான் சாதனையாக இருந்தது.

அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஜோகோவிச்சின் ரசிகர்களும் நடாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.