Published:Updated:

Australian open - 2022 : ஜோகோவிச்சின் பஞ்சாயத்து முதல் நடாலின் அசாதாரணம் வரை.

Nadal and Medvedev Australian open - 2022 ( Clive Brunskill )

ஆஸ்திரேலியன் ஓப்பனின் இந்த பரபரப்பு இறுதியாட்டத்தில் மட்டுமல்ல அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

Australian open - 2022 : ஜோகோவிச்சின் பஞ்சாயத்து முதல் நடாலின் அசாதாரணம் வரை.

ஆஸ்திரேலியன் ஓப்பனின் இந்த பரபரப்பு இறுதியாட்டத்தில் மட்டுமல்ல அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

Published:Updated:
Nadal and Medvedev Australian open - 2022 ( Clive Brunskill )

2022-ம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் டென்னிஸ் வரலாற்றின் மாபெரும் சாதனையோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்றதன் மூலம் 21-வது கிராண்ட் ஸ்லாமை தொட்ட முதல் வீரனாய் உயர்ந்திருக்கிறார் ராஃபேல் நடால்.

Nadal
Nadal

மெத்வதேவுக்கு எதிராக நடால் நிகழ்த்திய 5 மணி நேரத்திற்கும் மேலான அந்த போராட்டம், மெல்போர்ன் மைதானத்தில் நேரடி சாட்சியாய் கண்டுகளித்தவரை மட்டுமல்ல உலகின் மற்றோரு ஓரத்தில் இருந்த கடைசி டென்னிஸ் ரசிகனையும் உச்சிமுகர செய்தது. ஆஸ்திரேலியன் ஓப்பனின் இந்த பரபரப்பு இறுதியாட்டத்தில் மட்டுமல்ல அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

ஆம், ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதிலிருந்து இத்தொடரில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோ-வேக்சின் நோ- என்ட்ரி:

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் எங்கள் நாட்டில் யாருக்கும் அனுமதி இல்லை. அது உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரராக இருந்தாலும் சரி என்று கறார் காட்டியது ஆஸ்திரேலிய அரசு.

Djokovic
Djokovic

நேற்று நடால் வென்ற அதே 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முக்கிய போட்டியாளராக கருத்தப்படுபவர் நோவக் ஜோகோவிச். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான சிறப்பு அனுமதியோடு ஆஸ்திரேலியா வந்திறங்கியரின் விசாவை முதலில் ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

இந்நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தின் உதவியை நாடிய ஜோகோவிச் தனக்கான நியாயத்தையும் அங்கு பெற்றார். பிரச்சனைகள் அனைத்தும் முடிந்ததென்று போட்டிக்காக ஆயத்தானவரை அவரின் சொந்த நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறினார் என்று காரணம் கூறு மீண்டுமொரு முறை செக் வைத்தது அந்நாட்டு அரசு. கடைசியில் வேறு வழியில்லாமல் செர்பியாவிற்கு விமானம் ஏறினார் ஜோகோவிச்.

டேனியல் மெத்வதேவ்- டென்னிஸ் உலகின் புதிய நம்பிக்கை

தன் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் தோல்வி அடைந்துள்ளார் மெத்வதேவ். நான்கு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஒரு முறை மட்டுமே பட்டம் வென்றிருக்கிறார் அவர். ( 2021 - அமெரிக்கன் ஓப்பன்)

Medvedev
Medvedev

சிட்சிபஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு பின் மெத்வதேவ் இவ்வாறு கூறினார் “ ஒரு தலைசிறந்த வீரருக்கு எதிராக நான் இறுதி போட்டியில் மோத உள்ளேன். இதில் என்ன வேடிக்கை என்றால் கடந்த முறையும் 21-வது கிராண்ட் ஸ்லாமிற்காக விளையாடிய ஜோகோவிச்சுடன் அமெரிக்க ஓப்பனில் விளையாடினேன். அப்போட்டியை நடால் தொலைக்காட்சியில் பாத்திருப்பார் என்று நினைக்கிறேன். இம்முறை ஜோகோவிச் தொலைக்காட்சியில் பார்க்கப்போகிறார்” என்றார்.

ஆனால் ஜோகோவிச்சிடம் சீறிப்பாய்ந்த மெத்வதேவ்வின் ஆட்டம் நேற்று நடாலிடம் எடுபடாமல் போனது. ஆனால் முதலிரண்டு செட்களை வென்று கடைசி புள்ளி வரை ஒரு மகத்தான போராட்டத்தை அரங்கேற்றினார் மெத்வதேவ். எதிர்கால டென்னிஸ் உலகின் மிக முக்கிய நட்சத்திரமாக இவர் உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

44 ஆண்டு காத்திருப்பிற்கு விடை தந்த பார்ட்டி:

1978-ம் ஆண்டு கிறிஸ் ஓ-நெய்லுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஒப்பனை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனையாய் உயர்த்திருக்கிறார் ஆஷ்லே பார்ட்டி.

Ashleigh Barty
Ashleigh Barty

மேலும் சர்வதேச டென்னிஸின் ஓப்பன் era வரலாற்றில் இறுதி சுற்றுகளில் 100% வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கும் நான்காவது வீராங்கனை பார்ட்டி ( குறைந்தது மூன்று கிராண்ட் பட்டங்கள்).

அரையிறுதியை அடைந்த முதல் இத்தாலியன்:

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் முதல் இத்தாலிய வீரராய் உயர்ந்திருக்கிறார் பெரிட்டினி. மோன்பில்ஸ்-க்கு எதிரான பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் 6-4, 6-4, 3-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற பெரிட்டினி அதற்கடுத்த ஆட்டத்தில் நடாலிடம் தோற்று வெளியேறினார்.

விளையாடிய இருவருக்கும் அபராதம்:

விதிமுறைகளை மீறியதற்காக அரையிறுதி போட்டியில் விளையாடிய மெத்வதேவ் மற்றும் சிட்சிபாஸ் இருவரும் அபராதத்தை விதித்தார் ஆட்ட நடுவர்.

Medvedev and Tsitsipas
Medvedev and Tsitsipas

விளையாட்டின் மதிப்பை குலைத்ததற்கும் தகாத வார்த்தைகளை சத்தமாக உபயோகித்ததற்கும் மெத்வதேவுக்கு 12,000 ஆஸ்திரேலிய டாலர்களையும், போட்டி நடக்கும் போது பயிற்சியாளரிடன் அறிவுரை கேட்டதற்காக சிட்சிபஸுக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர்களும் விதிக்கப்பட்டது.