Published:Updated:

மீண்டும் ரத்தான விசா; ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய மூன்றாண்டுகள் தடை? என்ன செய்யப்போகிறார் ஜோகோவிச்?

ஜோகோவிச்

ஆஸ்திரேலியா ஓப்பன் தொடர் தொடங்க வெறும் மூன்றே நாள்களே மீதமிருக்க அவரின் விசாவை ரத்து செய்திருக்கிறார் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே.

மீண்டும் ரத்தான விசா; ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய மூன்றாண்டுகள் தடை? என்ன செய்யப்போகிறார் ஜோகோவிச்?

ஆஸ்திரேலியா ஓப்பன் தொடர் தொடங்க வெறும் மூன்றே நாள்களே மீதமிருக்க அவரின் விசாவை ரத்து செய்திருக்கிறார் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே.

Published:Updated:
ஜோகோவிச்
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சின் விசாவை மீண்டுமொருமுறை ரத்து செய்து கறார் காட்டியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.

எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்நாட்டிற்கு வந்திறங்கினார் ஜோகோவிச். கொரோனா விதிமுறைகளில் ரொம்பவே கண்டிப்பான ஆஸ்திரேலிய அரசு அவர் தடுப்பூசி செலுத்தாததைக் காரணங்காட்டி விசாவை ரத்து செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை எதிர்த்து தனக்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடினார் ஜோகோவிச். அங்கு அவருக்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்ததால் அவர் எந்த ஒரு சிக்கலுமின்றி தொடரில் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்ய ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதென்றும் அதை அவர் போட்டி தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னதாகச் செய்வார் என்றும் செய்திகள் வெளியாயின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டிற்குள் நுழையும் போது விண்ணப்பப் படிவத்தில் செய்த பிழை, சொந்த நாட்டில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதது ஆகியவையே இதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓப்பன் தொடர் தொடங்க வெறும் மூன்றே நாள்கள் மீதமிருக்க அவரின் விசாவை ரத்து செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே. இதனால் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரை இதற்கு முன்னர் ஒன்பது முறை வென்றவரான ஜோகோவிச்சால் இவ்வருடத்திற்கான தொடரில் பங்கேற்கமுடியாது என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ஜோகோவிச்
ஜோகோவிச்

மேலும் விசா ரத்தானது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய நாட்டிற்குள் ஜோகோவிச் மீண்டும் நுழைய மூன்று ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகி வருகின்றன. வேறு வழியில்லாமல் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதா அல்லது நீதிமன்ற வாசலை மீண்டுமொரு முறை நாடுவதா... என்ன செய்ய போகிறார் ஜோகோவிச்?