Published:Updated:

டென்னிஸ்: ரோஜர் பெடரர் புதிய சாதனை!

டென்னிஸ்: ரோஜர் பெடரர் புதிய சாதனை!
டென்னிஸ்: ரோஜர் பெடரர் புதிய சாதனை!
டென்னிஸ்: ரோஜர் பெடரர் புதிய சாதனை!

லண்டன்: அதிக வாரங்கள் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தை வகித்த முன்னாள் டென்னிஸ் வீரர் பீட் சாம்பிராஸின் சாதனையை ரோஜர் பெடரர் முறியடித்துள்ளார்.

சர்வதேச ஏடிபி டென்னிஸ் தரவரிசை பட்டியலில் அதிக நாட்கள் முதலிடத்தில் நீடித்த வீரர் என்ற புதிய சாதனையை ரோஜர் பெடரர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பு பீட் சாம்பிராஸ் முதலிடத்திலிருந்தார். அவர் 286 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தார். சாம்பிராஸ் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர். அந்த வார்த்தையை தற்போது ரோஜர் பெடரர் முறியடித்துள்ளார்.

பெடரர் தொடர்ந்து 287 வாரங்கள் உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ரோஜர் பெடரர், தன்னுடைய குழந்தைப் பருவ ஹீரோவான பீட் சாம்பிராஸின் சாதனையை தாம் முறியடித்துள்ளதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், இதை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.