Published:Updated:

ஒலிம்பிக்கில் டென்னிஸ்: சானியா, சோம்தேவுக்கு வைல்டு கார்டு!

ஒலிம்பிக்கில் டென்னிஸ்: சானியா, சோம்தேவுக்கு வைல்டு கார்டு!
ஒலிம்பிக்கில் டென்னிஸ்: சானியா, சோம்தேவுக்கு வைல்டு கார்டு!
ஒலிம்பிக்கில் டென்னிஸ்: சானியா, சோம்தேவுக்கு வைல்டு கார்டு!

புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை இந்தியாவின் சானியா மிர்சா, ருஷ்மி சக்ரவர்த்தி, சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் வைல்டு கார்டு முறையில் தகுதி பெற்றுள்ளனர்.
 
கடந்த சில தினங்களாக இந்திய ரசிகர்களிடையே நிலவிவந்த எதிர்பார்ப்புக்கேற்ப லண்டன் ஒலிம்பிக்கின் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா-ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடிக்கு வைல்டு கார்டு கிடைத்துள்ளது.
 
மற்றொரு இந்திய வீரரான சோம்தேவ் தேவ்வர்மனும் ஆண்கள் ஒற்றையரில் விளையாட வைல்டு கார்டு பெற்றுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, ஒலிம்பிக் கழகம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் சானியா, ருஷ்மி, சோம்தேவ் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் லண்டன் ஒலிம்பிக்கின் டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் 7 பேர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா, விஷ்ணுவர்தன் ஆகிய நால்வர் ஏற்கனவே இந்திய ஒலிம்பிக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியா சார்பில் 7 பேர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சா கண்டனம்!

இதனிடையே ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாடுவேன் என சானியா மிர்சா கூறியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஏ.ஐ.டி.ஏ., செயல் எனது மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளது. பயஸ், பூபதியை சமாதானப்படுத்த என்னை பயன்படுத்திக் கொண்டது. இந்திய பெண் இனத்துக்கே ஏற்பட்ட இந்த அவமானம் கண்டனத்துக்குரியது.

பயசுடன் தான் விளையாட வேண்டும் என அவரது தந்தை வெசி பயஸ் எழுத்துப்பூர்வமாக உறுதி கேட்டது ஆச்சரியம் அளித்தது.

ரேங்கிங்கில் பின்தங்கி இருந்தாலும் விஷ்ணுவர்தனும் மிகச் சிறந்த வீரர் தான் என்பதை பயசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விஷ்ணுவுடன் சேர்ந்து 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றுள்ளேன். பூபதியுடன் சேர்ந்து விளையாடவே விருப்பம். ஆனாலும், நாட்டின் நலன் கருதி ஒலிம்பிக்கில் பயசுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன்’’ எனக் கூறியுள்ளார். சானியாவின்  இந்த அறிக்கை இந்திய டென்னிஸ் சங்கத்தில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.