Published:Updated:

1992ல் கிருஷ்ணா செய்ததை இன்று பயஸ் செய்ய வேண்டும்: யூகி பாம்ப்ரி

1992ல் கிருஷ்ணா செய்ததை இன்று பயஸ் செய்ய வேண்டும்: யூகி பாம்ப்ரி
1992ல் கிருஷ்ணா செய்ததை இன்று பயஸ் செய்ய வேண்டும்: யூகி பாம்ப்ரி
1992ல் கிருஷ்ணா செய்ததை இன்று பயஸ் செய்ய வேண்டும்: யூகி பாம்ப்ரி

புது டெல்லி: 1992 டென்னிஸ் போட்டியில் ரமேஷ் கிருஷ்ணா, அப்போதைய இளைய வீரரான பயஸுக்கு வாய்ப்பு கொடுத்தது போன்று தனக்கும் பயஸ் வாய்ப்பு வழங்க முன் வர வேண்டும் என்று யூகி பாம்ப்ரி தெரிவித்துள்ளார்.

தரவரிசையில் பின் தங்கியுள்ள இளைய வீரர்களுடன் ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்க மாட்டேன் என்று பயஸ் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு யூகி பாம்ப்ரி பதில் அளித்துள்ளார்.

அதில் 1992ம் ஆண்டு டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் இருந்த ரமேஷ் கிருஷ்ணா, பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இளைய வீரரான லியாண்டர் பயஸுடன் இணைந்து ஆட முன் வந்தார். அதேப் போல ஒரு வாய்ப்பு பயசுக்கு வந்துள்ளது. அவர் கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று  யூகி பாம்ப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டுதான் இந்தியா சார்பில் 2 டென்னிஸ் அணிகளை அனுப்பும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தினால் என்னைப் போன்ற இளைய வீரர்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் யூகி கூறியுள்ளார்.

முன்னதாக லியாண்டர் பயசுடன் இணைந்து ஆட முன்னணி வீரர்களான மகேஷ் பூபதியும், ரோஹன் போபண்ணாவும் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, பயசுடன் அனுப்ப இளைய வீரர்களான விஷ்ணு வர்தன் (தரவரிசையில் 207வது இடம்), யூகி பாம்ப்ரி (தரவரிசையில் 306வது இடம்) ஆகியோரை ஏஐடிஏ பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.