Published:Updated:

லியாண்டர் பயஸ் ஏன் ஜோடியை மாற்றினார்?

லியாண்டர் பயஸ் ஏன் ஜோடியை மாற்றினார்?
லியாண்டர் பயஸ் ஏன் ஜோடியை மாற்றினார்?
லியாண்டர் பயஸ் ஏன் ஜோடியை மாற்றினார்?

டென்னிசில் இவருக்கு ஓய்வே கிடையாதா? என்ற ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார் லியாண்டர் பயஸ்.

அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை லியாண்டர் வென்ற போது அவருக்கு வயது 41. கிராண்ட் ஸ்லாம் வரலாற்றிலேயே அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை லியாண்டர் ஏற்படுத்தினார்.

வயதாக வயதாக லியாண்டரின் ஆட்டம் மெருகேறுகிறது என்றால், அவருக்கு ஜோடியாக ஆடி பட்டம் வென்ற மார்ட்டினா ஹிங்கிஸ் ஓய்வு பெற்று விட்டு மீண்டும் களத்திற்கு திரும்பியவர். ஒரு காலத்தில் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த மார்ட்டினா ஹிங்கிஸ் பிரெஞ்சு ஓபனைத் தவிர அனைத்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றவர். கடந்த 1997, 98, 99-ம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தவர்.

லியாண்டர் பயஸ் ஏன் ஜோடியை மாற்றினார்?

மார்ட்டினாவை பற்றி இன்னொரு முக்கியமான விஷயமும் குறிப்பிட வேண்டும். இரட்டையர் பிரிவில், லியாண்டரின் நீண்ட கால இணையாக இருந்த மகேஷ் பூபதிக்கும் ஜோடியாக மார்ட்டினா ஹிங்கிஸ் விளையாடியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு மார்ட்டினா ஹிங்கிஸ், மகேஷ் பூபதியுடன் சேர்ந்து விளையாடி ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அதற்கு பின் மூட்டு வலி காரணமாக மார்ட்டினா ஓய்வு அறிவித்தார். பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் டென்னிசுக்கு திரும்பினார்.

இந்த சமயத்தில் லியாண்டரின் முன்னாள் ஜோடியான மார்ட்டினா நவரத்திலோவா,  மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து விளையாடுமாறு லியாண்டர் பயசிடம் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்துதான் லியாண்டர் -மார்ட்டினா ஜோடி களமிறங்கத் தொடங்கியதோடு, பட்டத்தை வென்றும் அசத்தியுள்ளது. ஓய்வுக்கு பின் மார்ட்டினா ஹிங்கிஸ் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பின், உற்சாகத்தில் திளைத்த லியாண்டர்- ஹிங்கிஸ் ஜோடி பரஸ்பரம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். அப்போது  லியாண்டர், "எங்களுக்குள் அற்புதமான புரிதல் உள்ளது. களத்தில் நான் எப்படி பந்தை எதிர்கொள்வேன் என்பதை அவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அதுபோல் நானும் அவரை புரிந்து வைத்துள்ளேன்" என்றார் உற்சாமாக... 

1991-ம் ஆண்டு டென்னிசுக்குள் காலடி எடுத்து வைத்த லியாண்டர் பயஸ், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன்,பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என அனைத்திலும் பட்டம் வென்று அசத்தியவர். வருகிற 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின்னரே டென்னிசில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் லியாண்டர் பதக்கம் வென்றால், ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக வயதில் பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையும் அவரது சாதனை புத்தகத்தில் இடம் பெறும்.