Published:Updated:

"முன்னாள் கிரிக்கெட்டர்... இப்போது டென்னிஸில் நம்பர் 1" - யார் இந்த ஆஷ்லி பார்ட்டி?!

ஆஷ்லி பார்ட்டி

"மே ஐ கம் இன்?” என்று புதிதாக என்ட்ரி கொடுத்து, தரமான சம்பவங்களைச் செய்துகொண்டிருகிறார் உலகின் தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது ஆஷ்லி பார்ட்டி.

"முன்னாள் கிரிக்கெட்டர்... இப்போது டென்னிஸில் நம்பர் 1" - யார் இந்த ஆஷ்லி பார்ட்டி?!

"மே ஐ கம் இன்?” என்று புதிதாக என்ட்ரி கொடுத்து, தரமான சம்பவங்களைச் செய்துகொண்டிருகிறார் உலகின் தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது ஆஷ்லி பார்ட்டி.

Published:Updated:
ஆஷ்லி பார்ட்டி

டென்னிஸ் என்றாலே ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் போன்ற பெயர்கள்தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அபார திறமை, தனித்தனி மேட்ச் வின்னிங் திறன்கள் மூலம் டென்னிஸ் உலகை ஆண்டுகொண்டிருக்கின்றனர். பெண்கள் டென்னிஸ் என்று எடுத்துக்கொண்டால் 70-களில் மார்கரட் கோர்ட், 80-களில் ஸ்டெஃபி கிராப், தற்போது செரீனா வில்லியம்ஸ் எனத் தனியொரு வீராங்கனையே தன் காலகட்டத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.

Tennis
Tennis

செரீனா வில்லியம்ஸ்க்கு இணையாக அவ்வப்போது மரியா ஷரபோவா, இவானோவிச், கிவிட்டோவா, ஹாலப் போன்றோர் வந்துபோனாலும் ஒரு நிலையான போட்டி தொடர்ச்சியாக என்றுமே இருந்ததில்லை. இந்நிலையில், "மே ஐ கம் இன்?” என்று புதிதாக என்ட்ரி கொடுத்து, தரமான சம்பவங்களைச் செய்துகொண்டிருகிறார் உலகின் தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது ஆஷ்லி பார்ட்டி. அவருடைய லேட்டஸ்ட் அதிரடி - இந்த வருடத்துக்கான WTA பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினாவைத் தோற்கடித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருடம் முழுவதும் நடைபெறும் பல்வேறு தொடர்களின் அடிப்படையில் டாப்-8 வீரங்கனைகள் விளையாடும் WTA பைனல்ஸ் இந்த வருடம் சீனாவின் ஷேன்சன் நகரில் நடைபெற்றது. பொதுவாக, டென்னிஸ் தொடர் என்றாலே நாக் அவுட் முறையில்தான் நடைபெறும். ஆனால், இந்தத் தொடரில் வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ரவுண்டு ராபின் முறையில் ஆடி ஒவ்வொரு பிரிவின் முதல் இரண்டு பேர் ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறுவர். அதன்படி ரெட் குரூப்பிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கும் பர்ப்பிள் (purple) பிரிவிலிருந்து உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

Ashleigh Barty
Ashleigh Barty

அரையிறுதியில் பார்ட்டி, பிளிஸ்கோவாவை 4 - 6, 6 - 2, 6 - 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இரு வீராங்கனைகளும் ஒரு செட் வென்றிருந்த நிலையில், மூன்றாவது செட் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்க, பெலிண்டா காயம் காரணமாக வெளியேறினார். அதனால், ஸ்விடோலினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே பார்ட்டி 6 - 4, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்விடோலினாவை வீழ்த்தி பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

'யார் நீங்க? இதுக்கு முன்னாடி ஆஸ்திரேலியால என்ன பண்ணிட்டு இருந்தீங்க?' என்று ஆஷ்லி பார்ட்டியிடம் யாரேனும் கேள்வி கேட்டால், 'பிக்பேஷ் கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தேன்' என்ற பதிலே வரும். ஆம், டென்னிஸில் சிறிய வயதில் பல ஆச்சர்யங்களை நிகழ்த்தி சரசரவென இரட்டையர் ரேங்கிங் பட்டியலில் முன்னேறிய பார்ட்டி, திடீரென்று ரூட் மாற்றி, "நான் கிரிக்கெட் ஆடப்போகிறேன்“ என்ற அறிவிப்பைவிட்டார். "நான் வயதில் சிறிய பெண்ணாக இருக்கிறேன், மேலும் ஒரு டீன் ஏஜ் பெண்ணாக எனக்கு பலவற்றை கற்று அனுபவம் பெற ஆசை" என்று அதற்கான காரணத்தையும் கூறினார்.

Ashleigh Barty
Ashleigh Barty

மகளிருக்கான முதல் பிக்பேஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடிய பார்ட்டி, குயின்ஸ்லாந்து ஃபையர் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். சுமார் 3 ஆண்டுகள் வரை டென்னிஸ் போட்டிகளில் இருந்து பிரேக் எடுத்தவர், மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு 2016-ம் ஆண்டு திரும்பினார். அதன்பின் தொட்டதெல்லாம் வெற்றிதான். 2017-ம் ஆண்டு இரட்டையர் போட்டியில் தனது பழைய கூட்டாளியான டெல்லாகுவாவோடு சேர்ந்தபோது ஒற்றையர், இரட்டையர் என இரண்டிலுமே ரேங்கிங்கில் 250-க்கும் பின்னால் இருந்தவர், அந்த ஆண்டு இறுதிக்குள் டாப் 20-க்குள் நுழைந்தார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் மூன்றாவது சுற்று வரை சென்று, 22 வயதிலேயே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

கடந்த ஆண்டு முதல் WTA சிங்கிள்ஸ் போட்டியை மலேசியா ஒப்பனில் வென்ற பார்ட்டி, இந்த ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்று உலக அரங்கில் தன் பெயரைப் பதியவைத்தார். தற்போது WTA இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். ''பார்ட்டியின் டென்னிஸ் ஸ்டைல் மார்ட்டினா ஹிங்கிஸை நினைவுபடுத்துகிறது'' என்று ஹிங்கிஸின் முன்னாள் பயிற்சியாளர் டேவிட் டைலர் சொல்லியிருக்கிறார். மேலும், சர்வ் செய்வதிலும் இவர் ஸ்பெஷலிஸ்ட்.

2018-ம் ஆண்டில் மட்டும் போட்டிக்கு 5 என்ற விகிதம், சுமார் 297 ஏஸ்களை சர்வ் செய்துள்ளார். இந்த லிஸ்ட்டில் இவருக்கு முன்பாக இருப்பது செரீனா வில்லியம்ஸ் மட்டுமே. தற்போது உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் 23 வயது பார்ட்டி, 38 வயதான செரீனாவின் இடத்தை விரைவில் பிடிப்பார் என்பதே டென்னிஸ் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.