Published:Updated:

பிரெஞ்ச் ஓபன்: இரண்டாம் சுற்றில் சானியா மிர்ஸா!

பாரீஸ், மே.24,2011

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்ஸா முன்னேறினார். ##~~##

உலக தர வரிசையில் 72-வது இடத்தில் உள்ள சானியா தனது முதல் சுற்றில் ஜெர்மனியின் கிறிஸ்டினா பாரிஸுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில், சானியா மிர்ஸா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் கிறிஸ்டினாவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.