Published:Updated:

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், அசரென்கா

Vikatan Correspondent
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், அசரென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், அசரென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், அசரென்கா

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நடால், அசரென்கா முன்னேறியுள்ளனர்.

உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2010ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல்நடால் (ஸ்பெயின்) காலிறுதி ஆட்டத்தில் சக நாட்டைச் சேர்ந்த 19ம் நிலை வீரர் டோமி ராபர்ட்டோவை எதிர்கொண்டார்.

இதில், 6–0, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், 4ம் நிலை வீரரான டேவிட் பெரர் (ஸ்பெயின்) காலிறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பிரான்சை சேர்ந்த ரிச்சர்டு கேஸ்கியூட் 6–3, 6–1, 4–6, 2–6, 6–3 என்ற செட் கணக்கில் பெரரை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதியில் நுழைந்தார். அரை இறுதி ஆட்டத்தில் நடால்–கேஸ்கியூட் மோதுகிறார்கள்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், அசரென்கா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அசரென்கா மற்றும் சுலோவேக்கியா நாட்டை சேர்ந்த டேனியலா ஹண்டுசோவா ஆகியோர் மோதினர்.

##~~##
இதில், அசரென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஹண்டுசோவாவை வீழ்த்தி எளிதில் அரை இறுதிக்கு முன்னேறினார்.
அசரென்கா நாளை நடைபெறும் போட்டியில் இத்தாலி நாட்டின் பிளேவியா பென்னட்டாவை எதிர்கொள்கிறார்.