Published:Updated:

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் செரீனா, லி நா

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் செரீனா, லி நா
விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் செரீனா, லி நா
விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றில் செரீனா, லி நா

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,  சீனாவின் லி நா ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று (27ஆம் தேதி) நடந்த ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரர் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (6), 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் டேனியல் பிரான்ட்சை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 8ஆம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 6-2, 7-6 (7), 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் ஜெஸ்சி லெவினை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் நிஷிகோரி, ஆஸ்திரேலியாவின் பெர்னர்ட் தாமிக், பிரான்சின் கேஸ்கியூட் உள்ளிட்டோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2வது சுற்றில் பிரான்சின் கரோலின் கார்சியாவை 6-3, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். செரீனா தொடர்ச்சியாக பெற்ற 33வது வெற்றி இதுவாகும்.

##~~##
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை 42 வயதான கிமிகோ டேட்-கிரம் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் 23 வயதான ருமேனியாவின் அலெக்சாண்ட்ரா கடன்டுவை தோற்கடித்து 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் விம்பிள்டன் வரலாற்றில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய வயதான வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். கிமிகோ அடுத்து செரீனா வில்லியம்சை சந்திக்க உள்ளார்.
இதே போல் 6ம் நிலை வீராங்கனை சீனாவின் லி நா தன்னை எதிர்த்து ஆடிய ருமேனியாவின் சிமோனா ஹலேப்பை 6-2, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
மேலும் ஜெர்மனியை சேர்ந்த சபினே லிசிக்சி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா ஸ்டோசுர், சுலோவக்கியாவின் சிபுல்கோவா, போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்கா ஆகியோரும் 3வது சுற்றை எட்டினர்.