Published:Updated:

பிரெஞ்ச் ஓபன்: இறுதியில் ஷரபோவா, செரீனா

பிரெஞ்ச் ஓபன்: இறுதியில் ஷரபோவா, செரீனா
பிரெஞ்ச் ஓபன்: இறுதியில் ஷரபோவா, செரீனா
பிரெஞ்ச் ஓபன்: இறுதியில் ஷரபோவா, செரீனா

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி சுற்றுக்கு மரிய ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 2ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ரஷ்யாவின் மரிய ஷரபோவாவும், 3ஆம் நிலை வீராங்கனை பெலாரசின் விக்டோரியா அஸரென்காவும் மோதினர்.

முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஷரபோவாவுக்கு, 2வது செட்டில் அஸரென்கா பதிலடி கொடுத்தார். இதன் பின்னர் மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு 3வது செட் தொடர்ந்து நடந்தது. கடைசி செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா அந்த செட்டை தனதாக்கியதுடன் வெற்றியையும் உறுதிப்படுத்தினார்.

2 மணி 10 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அஸரென்காவை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். சர்வீசில் கலக்கிய ஷரபோவா, 12 ஏஸ் சர்வீஸ்களை வீசியது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.

பிரெஞ்ச் ஓபன்: இறுதியில் ஷரபோவா, செரீனா

மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் சாரா எர்ரானியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். வெறும் 46 நிமிடங்களில் ஆட்டத்தை செரீனா முடிவுக்கு கொண்டு வந்தார்.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் செரீனா-ஷரபோவா மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 7 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடாலும் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர்- பிரான்ஸ் வீரர் சோங்கா மோதுகின்றனர்.