Published:Updated:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால் போராடி வெற்றி

Vikatan Correspondent
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால் போராடி வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால் போராடி வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால் போராடி வெற்றி

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 7 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் போராடி வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 7 முறை பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் டேனியல் பிரான்டுன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 4–6, 7–6 (7–4), 6–4, 6–3 என்ற செட் கணக்கில் நடால், டேனியல் பிரான்டை போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஜோவில்பிரட் சோங்கா 6–2, 6–2, 6–3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீரர் அசாஸ் பெட்னெவை தோற்கடித்தார்.

இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் நிகோலஸ் அல்மாக்ரோ 4–6, 6–4, 6–3, 6–3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஆந்த்ரே ஹைடெரை வென்றார்.

மற்ற ஆட்டங்களில்குரேஷியா வீரர்  மரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரி, ஸ்பெயின் வீரர் டாமி ராப்ரெடோ ஆகியோர் வெற்றி கண்டு 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

##~~##
பெண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சீன வீராங்கனை லீ நா 6–3, 6–4 என்ற நேர்செட்டில் அனபெல் மெடினாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் டென் மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6–3, 6–2 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீராங்கனை லாரா ராப்சனை வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் போலந்து அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா 6–1, 6–1 என்ற நேர்செட்டில் இஸ்ரேல் வீராங்கனை ஷாகர் பீரை சாய்த்தார்.
மற்ற ஆட்டங்களில் இத்தாலி வீராங்கனை ராபெர்டா வின்சி, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், சீன வீராங்கனை ஜி ஷெங், அமெரிக்கா வீராங்கனைகள் வானியா கிங், பெதானி மாடெக் ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.