Published:Updated:

அடுத்த தலைமுறை எங்கே?!

அடுத்த தலைமுறை எங்கே?!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த தலைமுறை எங்கே?!

அடுத்த தலைமுறை எங்கே?!

அடுத்த தலைமுறை எங்கே?!

அடுத்த தலைமுறை எங்கே?!

Published:Updated:
அடுத்த தலைமுறை எங்கே?!
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த தலைமுறை எங்கே?!

ருவர் தன் வாழ்நாளில் முதல்முறையாக வெற்றித்தேனை ருசிக்க போராடுகிறார். மற்றொருவர் கிடைத்த வெற்றியை தக்கவைக்க போராடுகிறார். உண்மையில் ஒருவனின் வாழ்க்கை  ஒரு வெற்றியோடு முடிந்துவிடாது என்பது அந்த வெற்றிக்குப் பிறகுதான் தெரியும். அவன் அந்த வெற்றித்தேனை ருசித்த பின் அதை தக்க வைப்பதற்காக அவனின் போராட்டம் தான் உன்மையான வாழ்க்கை போராட்டமே. வெற்றிப்பெற்ற யாரிடமேனும் கேட்டுப்பாருங்கள், வெற்றிப் பெறுவதற்காக போராடியதை விட அந்த வெற்றியை தக்க வைக்க போராடியது தான் அதிகம் என கூறுவார்கள். வெற்று பெறுவது கடினம் என்றால் அந்த வெற்றியை தக்கவைப்பது மிகக்கடினம். இப்படி இரு வீரர்கள்  இரு போராட்டங்களை நேற்று பாரீஸ் நகரத்தில் நிகழ்த்தினர்.

அடுத்த தலைமுறை எங்கே?!

இங்கு தன்னுடைய முதல் வெற்றித்தேனை ருசிக்க, போராட்டத்தை மேற்கொண்டது ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம். வெற்றியைத் தக்கவைக்க, தன்னை மீண்டும் இந்த உலகுக்கு நிரூபிக்க போராட்டத்தை மேற்கொண்டது இதற்குமுன் 11 முறை ஃபிரெஞ்ச் ஓபன், 17 முறை க்ராண்ட் ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால். இந்த இரு போராட்டங்களின் இறுதியில் வென்றது வெற்றியைத் தக்கவைக்க போராடிய ரஃபேல் நடால்.  இங்கிலாந்தில் இடது கை ஆட்டக்காரர் தவான் ஆஸ்திரேலியா அணியை பந்தாட, பாரீஸ் நகரத்தில் இடதுகை ஆட்டக்காரரான நடால் ஆஸ்திரியா வீரரை கலங்கடித்தார்.

நடால் வென்றது எப்படி?

அரையிறுதியில் டொமினிக் தீம் ஜோக்கோவிச்சையும், நடால்  ஃபெடரரையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்கள். இருவரும் கடந்த ஆண்டு இதே ஃபிரெஞ்ச் ஓபன் ஃபைனலில் மோதினார்கள். அப்போது எளிதாக ரஃபேல் நடால் வென்றார். பிரெஞ்ச் ஓபனில் இருவர் மோதிய 3 போட்டியிலும் நடாலே வென்றுள்ளார். இருப்பினும், பார்சிலோனா ஓபனில் களிமண் தரையில் நடாலை நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார் தீம்.  அதனால் மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டியின் முதல் செட்டிலியே ஆட்டம் அன்ல் பறக்கத் தொடங்கியது.  முதல் செட்டை 6-3 என வென்றார் நடால். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த தலைமுறை எங்கே?!

ஸ்கோர் போர்டில் ஆட்டத்தின் அருமை புரியாது என்பார்கள். மேட்ச்சை பார்க்காமல் ஸ்கோரை மட்டும் பார்த்தால் நடால் அந்த செட்டை மிகவும் சிரமமின்றி கைப்பற்றியதாக தோன்றும்.  ஆனால், ஒட்டுமொத்த போட்டியிலும் முதல் செட்டை கைப்பற்றுவதற்குத்தான் நடால் அவ்வளவு போராடினார். பொதுவாகவே களிமண் தரையில் ரேலிகள் அதிகமாக இருக்கும். அதனால், அதிக உடல் உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற ஸ்லாம்களில் ‘ஸ்டாமினா’ மிகவும் முக்கியம். அந்த விஷயத்தில் நடால் எப்போதும் டாப்!

பெரிய ரேலிகள் மூலம் எதிரியை சோர்வாக்கி அதில் வெற்றிபெறுவதுதான் நடாலின் கேம் பிளான். பேஸ்லைன் ஆட்டம்தான் அவருக்கு விருப்பம். ஆனால், தீம் அவ்வளவு எளிதாக புள்ளிகளை விட்டுக்கொடுக்கவில்லை. ரேலிகளின் எண்ணிக்கை பத்தைத் தாண்டிவிட்டால், தீம் அந்தப் பாயின்ட்டை எடுத்துவிடுவார். நடால் முதல் செட்டை கைப்பற்றியிருந்தாலும்  எதுவும் திட்டப்படி நடக்கவில்லை.

முதல் செட்டை வென்ற நடால் இரண்டாவது செட்டை 7-5 என இழந்தார். 51 நிமிடங்கள் வரை நீடித்த இந்த செட், கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கே உரிய விறுவிறுப்பைத் தந்தது. ஆனால் 6-3 என முதல் செட் நீடித்த நேரம் 56 நிமிடம்!  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நேரம்.

முதல் இரண்டு செட்களில் பேஸ்லைன் பாயின்ட்களை 40 சதவிகிதம் நடால் வென்றார். அதில், முதல் செட்டில் மட்டுமே 30 சதவிகிதம் வென்றிருந்தார்.  முதல் இரண்டு செட்களில் பேஸ்லைன் கேமின் ரேலிகளின் சராசரி 9. அதுபோக  தீமின் ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் நடாலை திணறச்செய்தது. ஜோக்கோவிச்சுக்கு எதிரான போட்டியில் 25 வின்னர்கள் ஃபோர்ஹேண்ட் ஷாட்களால் அடித்திருந்தார்.  நடாலை அவர் அணுகும் விதமும் வித்தியாசம்தான். 

அடுத்த தலைமுறை எங்கே?!

பொதுவாகவே நடாலின் சர்வில் வீரியம் இருக்காது. அதனால் பேஸ்லைனிற்கு அருகிலேயே நின்று ரிசீவ் செய்யமுடியும். ஆனால், தீம் பேஸ்லைனிலிருந்து நீண்ட தூரம் தள்ளி நின்றே ரிசீவ் செய்தார். காரணம் அவர் மிகவேகமாக பந்தை திருப்பி அனுப்பும் ஆற்றல் உடையவர். அவரின் வேகத்துக்கு பந்து அவுட்லைனை தாண்டும். அதனால் அவர் அப்படி நின்று விளையாடினார். 

முதல் இரண்டு செட்களுக்குப் பிறகு தனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றினார் நடால். பெரிய ரேலிகள் தனக்கு தோல்வியைத் தந்ததால் அதன் பிறகு பெரிய ரேலிகளை ஆடுவதை தவிர்த்தார். அதில் வெற்றியும் கண்டார். மூன்றாவது மற்றும் நான்காவது  செட்களில் பேஸ்லைன் கேமில் 70 சதவிகிதம் வென்றார். அந்த இரண்டு செட்களின் ரேலிகளின் சராசரி 4! அதுபோக தீமை ஃபோர்ஹேண்ட் ஷாட்களை ஆடவிடாமல் பேக்ஹேண்ட் ஷாட் ஆடவைத்தார். அவரை தவறு செய்ய வைத்தார். (ஃபோர்ஸ்டு எரர் - தீம் 32) அந்த புது அணுகுமுறையினால் அடுத்த இரண்டு செட்களை 6-1, 6-1 என எளிதாக வென்றார். அந்த வெற்றியின் மூலம் களிமண் தரையின் ராஜாதி ராஜா என்பதை உலகுக்கு மீண்டும் உரக்கச் சொன்னார்.  ஒரே க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை அதிக முறை (12) வென்ற நடாலை, டென்னிஸ் உலகம் வியப்புடன் பார்க்கிறது. 

அடுத்த தலைமுறை எங்கே?!

நடாலின் வெற்றி சிறப்புக்குரியது தான். இருந்தும்  நடாலின் வெற்றியை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா எனபது விவாதிக்க வேண்டிய விஷயம். 37 வயதான ஃபெடரர், 31 வயதான ஜோகோவிச், 33 வயதான நடால் ஆகியோர்தான், இந்தமுறை பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோகோவிச், நடால், ஃபெடரர் இவர்கள் மூவரும்தான் மாறி மாறி க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வருகின்றனர்.

ஃபெடரர், நடால், ஜோகோவிச், ஆகியோரின் ஆதிக்கம் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், டென்னிஸின் அடுத்த தலைமுறை வீரர்கள் இவர்களை தோற்கடிக்காமல் இருந்தால், வருங்காலத்தில் Greatest of All time (GOAT)  பட்டியலில் இணைபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.  இப்போது நடால் ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோரில் சிறந்தவர் யார் என்ற விவாதம் நடப்பதைப் போல, இந்த ஜாம்பவான்கள் ஓய்வுக்குப் பின் இப்படி யொரு விவாதம் நிகழுமா? இவர்கள் இன்றும் இளம் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், இவர்களை இளம்தலைமுறை வீரர்கள் தோற்கடித்தால்தானே அவர்களுக்குப் பெருமை. பீட் சாம்ப்ராஸை ஃபெடரர் தோற்கடித்து பெயரெடுத்ததைப் போல!

ஒவ்வொரு க்ராண்ட்ஸ்லாம் தொடர் வரும்போதும் இந்த தொடரில் ஒரு புதிய வெற்றியாளர் வருவார்களா?, அடுத்த தலைமுறை உருவாகுமா என்ற கேள்வி வரும். ஆனால், டென்னிஸின் அடுத்த தலைமுறை இவர்கள்தான் என உருவகம் செய்யப்பட்ட ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸெவ்ரெவ், சிட்ஸிபாஸ் போன்றோர்  இன்னும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. நடாலின் இந்த சரித்திர வெற்றி மற்றுமொரு முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. டென்னிஸின் அடுத்த தலைமுறை எங்கே?!

கி.ர.ராம் கார்த்திகேயன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism