Published:Updated:

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்: 7 வது முறையாகப் பட்டத்தைத் தட்டித்தூக்கிய ஜோக்கோவிச்!

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்: 7 வது முறையாகப் பட்டத்தைத் தட்டித்தூக்கிய ஜோக்கோவிச்!
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்: 7 வது முறையாகப் பட்டத்தைத் தட்டித்தூக்கிய ஜோக்கோவிச்!

ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக ஆஸ்திரேலியன் ஓப்பன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் ரஃபேல் நடால் மோதினர். போட்டியின் ஆரம்பம் முதல் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தியதால், ஜோகோவிச் ஆட்டத்துக்கு நடாலால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6 - 3, 6 - 2, 6 - 3 என்ற நேர்செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி பட்டத்தை வென்றார் ஜோகோவிச். இதன் மூலம் அவர் 7 வது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் பட்டத்தைப் பெறுகிறார். அதிக முறை ஆஸ்திரேலியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார். 

ஜோக்கோவிச்சுக்கு இது ஹாட்ரிக் கோப்பையாகும். கடந்த ஆண்டில் விம்பிள்டன், யு.எஸ் ஓப்பன் பெற்று, அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓப்பனையும் ஜோக்கோவிச் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் 2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஜோக்கோவிச் கோப்பையை வென்று இருந்தார். நேற்றைய ஆட்டத்துடன் கடந்த இரு வாரங்களாக மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டி முடிவுக்கு வந்தது. 31 வயது ஜோக்கோவிச்சுக்கு இந்த ஆஸ்திரேலியன் ஓப்பன் பட்டம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.