Published:Updated:

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen

"ஆண்கள் டென்னிஸ் வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த ஆட்டம்" என்று ஆண்ட்ரே அகாஸி, பீட் சாம்ப்ரஸ், போரிஸ் பெக்கர் என அனைவரும் புகழ்ந்து தள்ளினர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்போர்ன் அரங்கு இவர்களால் மீண்டும் அதிரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். 

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen

"ஆண்கள் டென்னிஸ் வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த ஆட்டம்" என்று ஆண்ட்ரே அகாஸி, பீட் சாம்ப்ரஸ், போரிஸ் பெக்கர் என அனைவரும் புகழ்ந்து தள்ளினர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்போர்ன் அரங்கு இவர்களால் மீண்டும் அதிரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். 

Published:Updated:
7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நடால் - ஜோகோவிச் கிளாசிக்?! #AusOpen

ண்டின் முதல் கிராண்ட் ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டு முர்ரேவின் ஓய்வு அறிவிப்பு பரபரப்போடு தொடங்கிய தொடர், நடப்பு சாம்பியன் ரோஜர் ஃபெடரரின் அதிர்ச்சித் தோல்வியைக் கடந்து, நடால், ஜோகோவிச் இருவருக்கும் இடையிலான வரலாற்று யுத்தத்தோடு முடியப்போகிறது. டென்னிஸ் உலகின் நம்பர் 1, நம்பர் 2 இருவரும் மோதும் இந்தப் போட்டி நாளை மதியம், மெல்போர்ன் ராட் லேவர் அரேனாவில் நடக்கவிருக்கிறது. 

தொடர் காயங்களால் அவதிப்பட்ட இந்த இரு சாம்பியன்களும், இந்தத் தொடரில் வேறு லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜோகோவிச் இரண்டு செட்களை மட்டுமே இழந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மறுபுறம், ஒரு செட் கூடத் தோற்காமல், வெறும் இரண்டு செட்களில் மட்டுமே டை- பிரேக்கர் வரை சென்று, மிரட்டலாக ஃபைனலில் கால் வைத்துள்ளார் நடால். வழக்கம்போல், தன் அற்புதமான டிஃபன்ஸிவ் கேமாலும், பெர்ஃபெக்டான ஷாட்களாலும் எதிராளிகளை 'ஜோக்கர்' மிரட்ட, தன் ஃபோர்ஹேண்ட்களால் அனைவரையும் காலி செய்தார் களிமண் ராஜா!

'நடால் இதற்கு முன் ஆஸ்திரேலிய ஓப்பனில் இப்படி விளையாடியதில்லை' என்று வியக்கிறார்கள் வல்லுநர்கள். அவ்வளவு அற்புதமாக ஆடிக்கொண்டிருக்கிறார் அந்த ஸ்பெயின் வீரர். ஃபெடரரைத் தோற்கடித்து வெளியேற்றிய கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் அவ்வளவு பிரமிப்பு. போட்டிக்குப் பிறகு சிட்ஸிபாஸ் கொடுத்த, அந்த 10 நிமிட பேட்டி சொல்லும், நடால் எப்படியான ஃபார்மில் இருக்கிறார் என்பதை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாகத் தான் செலுத்திவந்த ஆதிக்கத்தை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஜோகோவிச். சொல்லப்போனால் அவர் இரண்டாம் சுற்றில் இருந்தே கொஞ்சம் கடினமான வீரர்களைத்தான் எதிர்கொண்டு வென்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லூகாஸ் பூய்லை, அரையிறுதியில் ஆட்டம் காண வைத்ததைப் பார்த்தபோது, ஏழாவது ஆஸ்திரேலிய ஓப்பனை அவர் வசப்படுத்திவிடுவார் என்றே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், 'Hard court' ஆடுகளங்களில் எப்போதுமே நடாலைவிட அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அது நாளையும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்!

2012 ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனல், டென்னிஸ் வரலாற்றின் ஒரு சிறப்புமிக்க போட்டி. இந்த இரண்டு வீரர்களும் 5 மணி நேரம் 53 நிமிடம் விளையாடிய அந்தப் போட்டி, டென்னிஸ் ரசிகர்கள் எவராலும் மறக்க முடியாதது. கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடந்த அந்த யுத்தத்தை 5-7, 6–4, 6–2, 6–7(5–7), 7–5 என்று வென்றிருந்தார் ஜோகோவிச். தங்கள் உடலின் கடைசி சொட்டு நீரும் வியர்வையாய்க் கொட்டித் தீர்க்கும்வரை இருவரும் அந்தப் பட்டத்துக்காகப் போராடினர். "ஆண்கள் டென்னிஸ் வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த ஆட்டம்" என்று ஆண்ட்ரே அகாஸி, பீட் சாம்ப்ரஸ், போரிஸ் பெக்கர் என அனைவரும் புகழ்ந்து தள்ளினர். அதன்பிறகு, பல ஃபைனல்களில் இவர்கள் மோதினாலும், ராட் லேவர் அரேனாவில் இவர்கள் மோதியதில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்போர்ன் அரங்கு இவர்களால் மீண்டும் அதிரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். 

* கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில், தென் கொரிய வீரர் சுங் ஹியானிடம் தோற்று, நான்காம் சுற்றோடு வெளியேறினார் ஜோகோவிச். காலிறுதியில் மரிச் சிலிச்சோடு மோதிய நடால், ஐந்தாம் செட்டில் காயம் காரணமாக வெளியேறினார். 

* இரண்டு வீரர்களும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ஜோகோவிச் 27 போட்டிகளிலும், நடால் 25 போட்டிகளிலும் வென்றுள்ளனர். 

* 2009-ம் ஆண்டு, தன் முதல் ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனலில் வென்ற நடால், அதற்கடுத்து தான் அங்கு விளையாடிய மூன்று ஃபைனல்களிலும் தோற்றுள்ளார். இதுவரை 6 ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனல்களில் விளையாடியுள்ள ஜோகோவிச், ஒன்றில்கூடத் தோற்றதில்லை. 

ஃபைனல் வந்த பாதை: ஜோகோவிச் 

முதல் சுற்று - மிட்சல் குரூகர் (அமெரிக்கா): 6-3, 6-2, 6-2
இரண்டாம் சுற்று - ஜோ வில்ஃப்ரைட் சோங்கா (பிரான்ஸ்): 6-3, 7-5, 6-4
மூன்றாம் சுற்று - டெனிஸ் ஷபவலோவ் (கனடா): 6-3, 6-4, 4-6, 6-0
நான்காம் சுற்று - டெனில் மெட்வெடேவ் (ரஷ்யா): 6-4, 6-7 (7-5), 6-2, 6-3
காலிறுதி - கெய் நிஷிகோரி (ஜப்பான்): 6-1, 6-1 (ஓய்வு)
அரையிறுதி - லூகாஸ் பூய்ல் (பிரான்ஸ்): 6-0, 6-2, 6-2

ஃபைனல் வந்த பாதை: நடால்

முதல் சுற்று - ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா): 6-4, 6-3, 6-5
இரண்டாம் சுற்று - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா): 6-3, 6-2, 6-2
மூன்றாம் சுற்று - அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா): 6-1, 6-2, 6-4
நான்காம் சுற்று - தாமஸ் பெர்டிச்  (செக் குடியரசு): 6-0, 6-1, 7-6 (7-4)
காலிறுதி - ஃபிரான்செஸ் டியாஃபோ (அமெரிக்கா): 6-3, 6-4, 6-2
அரையிறுதி - ஸ்டெஃபானோஸ் சிட்ஸிபாஸ் (கிரீஸ்): 6-2, 6-4, 6-0

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism