Published:Updated:

பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

Published:Updated:
பாரிஸா... மெல்போர்னா... ரசிகர்களை பிரமிக்கவைத்த நடால்! #AusOpen

அது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ராட் லாவர் மைதானம்தான். ஹார்ட் கோர்ட்தான். இருந்தாலும், ``இது ஐரோப்பியா கண்டத்தில் உள்ள பாரிஸ் நகரமா, களிமண் தரையா?” எனப் பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது நடாலின் ஆட்டம். ஆம், அவர் அரையிறுதியில் சிட்ஸிபாஸுடன் ஆடிய ஆட்டம், அவர் செலுத்திய ஆதிக்கம்... களிமண் தரையில் எப்படித் தன்னை எதிர்த்து விளையாடும் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பாரோ, அப்படித் திகழ்ந்தார். 

கடந்த அமெரிக்க ஓப்பன் அரையிறுதியில் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாகப் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிக்கொண்டார் நடால். அதன் பிறகு நான்கு மாதங்களாக எந்தப் பெரிய டோர்னமென்ட்டிலும் விளையாடவில்லை. இதற்கிடையே காலில் ஒரு சர்ஜரி செய்திருந்தார். காயத்திலிருந்து முழுமையாக மீண்டதும், `2019 ஆஸ்திரேலிய ஓப்பனில் விளையாடுவேன்’ என அறிவித்தார். ஆபரேஷன் செய்தபின் ஆடும் முதல் தொடரே கிராண்ட் ஸ்லாம் போட்டி. எப்படி ஆடப்போகிறார் என்ற கேள்வி இருந்தது. ஆனால், அவர்தான் கம்பேக் கொடுப்பதில் ராஜாதி ராஜாவாச்சே! இந்த ஆஸ்திரேலிய ஓப்பனிலும் ஃபைனல் வரை முன்னேறி கம்பேக் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார் ரஃபா. 

அரையிறுதியில் நடாலை எதிர்த்து விளையாடியது ஸ்டெஃபெனஸ் சிட்சிபாஸ். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், 20 கிராண்ட் ஸ்லாம் டைட்டிலை தன் வசம் வைத்திருக்கும் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தியவர். கிரேக்க நாட்டு 20 வயது இளம்புயல். தன் வாழ்நாளின் மிகவும் பொக்கிஷமான தருணத்தை அனுபவித்த சிட்சிபாஸ், அந்த வெற்றித் தருணம் தந்த சிலிர்ப்பு விலகுவதற்குள், அரையுறுதியில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற நடாலுடன் மோதுகிறார். .ஃபெடரரை போல நடாலுக்கும் அதிர்ச்சி கொடுப்பாரா? எதிர்பார்ப்புடன் 15,000 ரசிகர்கள் ராட் லாவர் அரேனாவில் திரண்டனர். ஆனால், அவர்களுக்கு இந்த மேட்ச் சிறந்த தீனியாக அமைந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஒன் சைட் மேட்ச். 6-2 6-4 6-0 என நேர் செட்களில் மேட்ச் முடிந்தது. நடால் எளிதாக வென்றார் என்று சாதாரணமாகவும் கடந்துவிட முடியாது. காரணம் நடாலின் ஆட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நடாலிடம் எந்த வீரரிடமும் இல்லாத ஒரு திறமை உள்ளது. நம்மை மோசமாக விளையாட வைக்கும் திறன் அது” - இது போட்டி முடிந்ததும் சிட்சிபாஸ் உதிர்த்த வார்த்தைகள். ஆம், நேற்று அவர் ஆடிய ஆட்டம் அதைத்தான் செய்தது. அடிக்கடி நெட் அருகே செல்வது, Volley ஷாட்களை அடித்து, ட்ராப்களை போட்டு சிட்சிபாஸைத் திணறடித்தார். நடாலின் சர்வீஸ் அவ்வளவு வீரியமாக இருக்காது. பேஸ்லைனிலிருந்து கொஞ்சம் பின்னாலிருந்தே ரிசீவ் செய்யலாம். ஆனால், அவருடைய ஃபோர்ஹேண்ட் ஷாட் மின்னல் வேகத்தில் வரும். ஆனால், அரையிறுதியில் நடாலின் சர்வ் ஒருமுறை கூட ப்ரேக் செய்யப்படவில்லை.

மூன்றாவது செட்டில் 5-0 என இருக்கும்போதுதான் ப்ரேக்பாயின்ட் அளவுக்கே சென்றார் சிட்சிபாஸ். ஆட்டம் தொடக்கம் முதலே நடாலின் ஆதிக்கம்தான். சிட்சிபாஸின் அதிவேகமான சர்வை எப்போதும்போல நடால் பேஸ்லைனிலிருந்து மிகவும் பின்னால் நின்றே எதிர்கொண்டு திருப்பி அனுப்பினார். அடுத்த ஷாட்டுக்கு உடனே சர்வீஸ் லைன் நோக்கி ஓடி பந்தை எதிர்கொண்டார். நெட்ப்ளே அதிகம் செய்யாத நடால், இந்தமுறை அடிக்கடி நெட் அருகே சென்று விளையாடினார். 22 volley ஷாட்களில் 18 ஷாட்கள் வின்னராக அமைந்தது. பொதுவாக ஃபோர்ஹாண்ட் ஷாட்களில் ஸ்கோர் செய்யும் நடாலுக்கு, பேக்ஹேண்ட் கைகொடுத்ததால், சிட்சிபாஸிக்கு மேலும் துரதிருஷ்டம். பேக்ஹேண்டில் க்ராஸ் கோர்ட் ஷார்ட்கள் அத்தனையும் அவுட்  லைனுக்கு அருகில்தான் பிட்ச்சானது. சிட்சிபாஸால் பந்து போகும் திசையைப் பார்க்கத்தான் முடிந்தது.

அரையிறுதியில் மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே நடாலின் ஆதிக்கம்தான். தொடர் முழுவதும் ஒரு செட் கூட இழக்கவில்லை. இந்தத் தொடர் முழுவதும் நடாலின் ஃபார்ம் வேற லெவலில் உள்ளது. களிமண் தரையில் எதிரில் விளையாடும் வீரரை எப்படி அசால்டாக எதிர்கொள்வாரோ அப்படித்தான் ஹார்ட் கோர்ட்டிலும் விளையாடுகிறார். இரண்டாவது அரையிறுதியில் லூகாஸ் பெளலியை எதிர்கொள்கிறார் ஜோகோவிச். இருவரில் யார் ஃபைனலுக்கு முன்னேறினாலும் சரி…. நடால் சிம்மசொப்பனமாக இருப்பார். ஏனெனில், இது வின்டேஜ் ரஃபா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism