Published:Updated:

டென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக ஃபெடரர் vs செரினா.. #Hopmancup

கார்த்திகா ராஜேந்திரன்
டென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக ஃபெடரர் vs செரினா..  #Hopmancup
டென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக ஃபெடரர் vs செரினா.. #Hopmancup

ஸ்திரேலியா பெர்த் நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹாப்மன் கப் டென்னிஸ் தொடர், டிசம்பர் 29-ம் தேதி தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்படும்  8 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், ஹாப்மான் தொடரில் பங்கேற்பர். ஒவ்வொரு அணியிலும் அந்த நாட்டின் சிறந்த  ஆண் போட்டியாளரும், பெண் போட்டியாளரும் ஹாப்மான் தொடருக்குத் தகுதிபெறுவர். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் போட்டியிடும். 


2018 ஹாப்மான் தொடரில், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, க்ரீஸ், கிரேட் பிரிட்டன் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.  ஒவ்வொரு  அணியும், மற்றொரு அணியுடன் பெண்களுக்கான ஒற்றையர் , ஆண்களுக்கான ஒற்றையர் , கலப்பு இரட்டையர்  என மூன்று போட்டிகளில் விளையாடும். முதலிடத்தைப் பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு முன்னேறும். இந்த முறை, ஒரே பிரிவில் இடம்பிடித்திருக்கும் சுவிட்சர்லாந்து, அமெரிக்க அணிகள், கலப்பு இரட்டையர் பிரிவில் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்து அணிக்கு விளையாடும் ரோஜர் ஃபெடரர், பெலினா பென்சிக் , அமெரிக்கா அணியில் செரினா வில்லியம்ஸ், ப்ரான்சிஸ் டியாஃபோ ஆகியோரும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.  

டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக, ஃபெடரரும், செரினாவும் கலப்பு இரட்டையர் போட்டியில் மோதிக்கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டென்னிஸ் விளையாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் மோதும் இந்த போட்டி, ஜனவரி 1-ம் தேதி மாலை, பெர்த் இண்டோர் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகுறித்து பேசியுள்ள ரோஜர் ஃபெடரர், ”செரினாவின் சாதனைகள் என்னைப் பிரமிக்கவைக்கின்றன. சிறந்த டென்னிஸ் வீராங்கனையை எதிர்த்துப் போட்டியிடுவது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்றார்.