Published:Updated:

அரையிறுதியில் ஃபெடரர்; இறுதிப் போட்டியில் ஜோகோவிச்! - ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் அசத்திய வெர்வ்

அரையிறுதியில் ஃபெடரர்; இறுதிப் போட்டியில் ஜோகோவிச்! - ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் அசத்திய வெர்வ்
அரையிறுதியில் ஃபெடரர்; இறுதிப் போட்டியில் ஜோகோவிச்! - ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் அசத்திய வெர்வ்

லண்டனில் நடைபெற்ற ஏடிபி தொடரின் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், ஜெர்மனியைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் அலெக்ஸாண்டர் வெர்வ். 

அரையிறுதிப் போட்டியில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கிய வெர்வ், ஜோகோவிச்சை 6-4, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஏடிபி தொடரில் பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்த செர்பியாவின் ஜோகோவிச், இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். 

நான்கு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற ரவுண்ட் ராபின் சுற்றுப் போட்டியில், ஜோகோவிச்சுக்கு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் தோற்றுப்போன வெர்வ், இறுதிப் போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட்டுகளில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். `இது என் வாழ்நாளின் மிகப்பெரிய வெற்றி’ என்று மகிழ்ச்சி தெரிவித்த வெர்வ், `இந்தத் தருணத்தை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. முதலாவதாக, நான் ஜோகோவிச்சுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக அவர் டென்னிஸ் விளையாடும் விதத்தை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. அவர் மிகவும் அரிதாகவே தோல்வியைச் சந்திப்பார். இன்று அது நடந்திருக்கிறது. நானும் ஜோகோவிச்சும் பல்வேறு விஷயங்கள்குறித்துப் பேசினோம். டென்னிஸ் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். இன்றைய போட்டி, நிச்சயம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத போட்டியாக இருக்கும்’’என்றார்.