Published:Updated:

சென்னை ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி!

சென்னை ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி!
சென்னை ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி!
சென்னை ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி!

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வியடைந்தது.

சென்னை எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் கால் இறுதிப் போட்டியில் ஐந்துமுறை மகேஷ் பூபதியுடன் சேர்ந்து பட்டம் வென்ற லியாண்டர் பயஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எடவர்டு ரோஜர் வேசலினுடன் சேர்ந்து விளையாடினார்.

##~~##
அப்போது அவர்கள் தாய்லாந்தை சேர்ந்த சகோதரர்கள் சான்சை ரத்திவானா மற்றும் சான்சட் ரத்திவானா ஆகியோரை சந்தித்தனர்.
இதில் தாய்லாந்தை சேர்ந்த ரத்திவானா சகோதரர்கள் 7-6 (7), 6-1 என்ற நேர் செட்டுகளில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ் ஜோடியினரை வீழ்த்தினர்.இதன் மூலம் லியாண்டர் பெயசின் பதக்கக் கனவு கலைந்துள்ளது.