Published:Updated:

Sports Round Up: தோனியின் திடீர் `விசிட்' முதல் இறுதிப் போட்டியில் இந்திய அணி வரை!

Dhoni
News
Dhoni ( Twitter )

விளையாட்டுலகில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

Sports Round Up: தோனியின் திடீர் `விசிட்' முதல் இறுதிப் போட்டியில் இந்திய அணி வரை!

விளையாட்டுலகில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Dhoni
News
Dhoni ( Twitter )

அசத்திய பெண்கள் அணி!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்குக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 14.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 110 இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. 

இறுதிப்போட்டியில் ஜோக்கோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோக்கோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலை (7-5, 6-1, 6-2) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோக்கோவிச் விளையாடவிருக்கும் 10வது இறுதிப்போட்டி இதுவாகும். இந்தப் போட்டி நாளை நடைபெற உள்ளது. 

Novak Djokovic
Novak Djokovic

வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, தற்போது டி20 போட்டியில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. நேற்று, முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 176 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி, டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

தோனி திடீர் 'விசிட்'!

நேற்று ராஞ்சி மைதானத்தில், இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் முதலாவது டி20 போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியை காண்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவியுடன் வந்திருந்தார். தோனியின் வருகையை அறிந்த மைதானத்திலிருந்த ரசிகர்கள், ஆரவாரமாகச் சத்தமிட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர். நேற்று முன்தினம், பயிற்சியின் போதும் மைதானத்திற்கு வருகை புரிந்து இந்திய அணி வீரர்களை சந்தித்து தோனி உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni
Dhoni

மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் செய்தனர். இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க விளையாட்டு அமைச்சகம், மேற்பார்வைக் குழு ஒன்றை அமைத்தது. இதையடுத்து ஒலிம்பிக் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், “குற்றச்சாட்டை விசாரிக்கும் குழு அமைக்கப்படுவதற்கு முன்பு, எங்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் குழு அமைக்கப்படுவதற்கு முன், எங்களின் கருத்துகள் எடுத்துக் கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது” என ஒரே மாதிரியாகப் பதிவிட்டுள்ளனர்.