Published:Updated:

Sports RoundUp: குண்டுவெடிப்புக்கு மத்தியில் கிரிக்கெட் முதல் பி.டி. உஷாவுக்கு வந்த மிரட்டல் வரை!

PSL Cricket Match |Sports RoundUp
News
PSL Cricket Match |Sports RoundUp

விளையாட்டுலகில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

Sports RoundUp: குண்டுவெடிப்புக்கு மத்தியில் கிரிக்கெட் முதல் பி.டி. உஷாவுக்கு வந்த மிரட்டல் வரை!

விளையாட்டுலகில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

PSL Cricket Match |Sports RoundUp
News
PSL Cricket Match |Sports RoundUp

ஹிஜாப் அவசியம்!

கர்நாடகாவைச் சேர்ந்த தான்யா ஹேம்நாத், ஈரானில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வழங்கும் விழாவில், அவர் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இது அங்கு ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், போட்டியில் விளையாடும்பொழுது அவர்களுக்கு எந்த விதமான ஆடைக் கட்டுப்பாடும் இல்லை. அதேபோல போட்டியைக் காண ஆண்கள் யாருக்கும் (பெற்றோர்‌, பயிற்சியாளர் உட்பட) அனுமதி கிடையாது. போட்டியில் அதிகாரிகள் உட்பட அனைவரும் பெண்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புக்கு மத்தியிலும் 6 பந்துகளில் 6 சிக்சர்கள்!

பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக நட்பு ரீதியிலான போட்டி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடத்தப்பட்டது. குவெட்டா கிளேடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது. போட்டி நடந்துகொண்டிருந்த வேளையில் குவெட்டாவின் மூசா சௌக் பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதனால் மைதானத்திலிருந்த முக்கிய வீரர்களான பாபர் ஆசாம், ஷாஹித் அஃப்ரிடி உள்ளிட்டோர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். பிறகு நிலைமை சீரானதும் போட்டி மீண்டும் தொடரப்பட்டது. அதன் பிறகும் சிறப்பாக விளையாடிய இஃப்திக்கர் அஹமத், கடைசி ஓவரில் எல்லாப் பந்துகளையும் சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிப்பெறச் செய்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஜூலன் கோஸ்வாமி
ஜூலன் கோஸ்வாமி
ICC

பயிற்சியாளராகும் ஜூலன் கோஸ்வாமி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜூலன் கோஸ்வாமி, WPL போட்டியில் மும்மை அணியின் Mentor மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வார்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ஆல்ரவுண்டர் கோச்சாக தேவிக்கா பல்ஷிகாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பி.டி உஷாவுக்கு மிரட்டல்!

புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா நடத்திவரும் பயிற்சி நிறுவனம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி சிலர் அத்துமீறுவதாக பி.டி.உஷா புகார் கூறியுள்ளார். பயிற்சி நிறுவனத்தின் நடுவில் கட்டுமானம் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள உஷா, இது குறித்துக் கேட்டால், பஞ்சாயத்திடம் அனுமதி வாங்கியுள்ளதாகக் கூறுகின்றனர் என்றார். அங்குப் பயிற்சி பெற்றுவரும் 25 பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் இவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

பி.டி.உஷா
பி.டி.உஷா

விண்ணைத் தொடும் டிக்கெட் விலை!

NBA போட்டியில் லெப்ரான் ஜேம்ஸ் தனது வாழ்நாள் முத்திரையைப் பதிக்கப்போகும் முக்கியப் போட்டி லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் மற்றும் ஓக்லஹோமா தண்டர்ஸ் இடையே நடக்கும் இந்தப் போட்டியில் ஜேம்ஸ் 36 புள்ளிகள் எடுத்தால் இதுவரை அதிக புள்ளிகள் பெற்றுள்ள கரீம் அப்துல் ஜப்பாரின் சாதனையை (38, 387) முறியடித்து விடலாம். இந்தப் போட்டியைக் காண மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால், டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 30,000 டாலர்கள் வரை விற்கப்பட்ட டிக்கெட் விலையானது, நட்சத்திர இருக்கைகள் அருகே 68,995 டாலர்கள் வரை விற்கப்படுகிறதாம்!