Published:Updated:

``உங்க அக்கறை எனக்கு தெரியாது பாருங்க!” - அக்தர் ட்வீட்டுக்கு யுவராஜ் ஜாலி ரிப்ளே

ஸ்மித் வலியால் துடித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்த்து ஆர்ச்சர் புன்னகைத்தது சரியல்ல என அக்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

smith
smith

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரின் பந்துவீச்சுதான் கிரிக்கெட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஆர்ச்சரின் பவுன்சர் அட்டாக்கில் ஸ்மித் நிலைகுலைந்ததும் ஆர்ச்சர் அதற்குப் புன்னகைத்ததும் ட்விட்டரில் பேசு பொருளானது. ஸ்மித் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிவிட்டார். ஆனால் ஆர்ச்சர் - ஸ்மித் விவகாரம் இன்னமும் சமூகவலைதளத்தில் பேசுபொருளாகவே உள்ளது. ஆர்ச்சர் நடந்துகொண்ட விதம் சரியில்லை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் ஒரு ட்வீட்டை தட்டிவிட அதற்கு யுவராஜ்சிங் சுவராஸ்யமாக ஒரு கமென்ட் அடிக்க மீண்டும் சூடிபிடித்திருக்கிறது இந்த விவகாரம்.

Archer
Archer

கிரிக்கெட்டில் பவுன்சர் பந்துகளும் ஒரு அங்கம்தான். பௌலர்கள் வீசும் பவுன்சர்கள் பேட்ஸ்மேன்களைத் தாக்கி அதனால் அவர் கீழே விழுந்தால் ஒரு மரியாதைக்காவது அவரை பேட்ஸ்மேன் அருகில் சென்று நலம் விசாரிக்க வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆர்ச்சர் நடந்துகொண்ட விதம் சரியில்லை. ஸ்மித் வலியால் துடித்துக்கொண்டிருக்கும்போது அவரை பார்த்துப் புன்னகைப்பது சரியல்ல. இதுபோன்ற சூழல்களில் நான் முதலில் ஓடிச்சென்று பேட்ஸ்மேன்களை நலம் விசாரிப்பேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என வர்ணிக்கப்படும் அக்தரின் தான் விளையாடிய காலகட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் அக்தர் பந்துவீச்சு ஆக்ரோஷமாக இருக்கும். அவரது பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்களையும் நிலைக்குலைய செய்துள்ளார். அக்தர் ட்விட்டர் பதிவுக்கு அட்டகாசமாகப் பதிலளித்துள்ளார் யுவராஜ் சிங்.

``ஆமாம் நீங்கள் செய்வீர்கள்! நன்றாக இருக்கிறீர்களா எனக் கேட்பீர்கள். நீங்கள் இன்னும் நிறைய பவுன்சர்களை வீச திட்டமிட்டிருப்பீர்கள் அதன் காரணமாகக் கேட்பீர்கள்” எனப் யுவராஜ் பதிலளித்துள்ளார். இவரது இந்த கமெண்ட், தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.