Published:Updated:

80's கிட்ஸ்களின் ஃபேவரைட் என்டர்டெயினர்... ஷான் மைக்கேல்ஸ்! #HBDShawnMichaels

தமிழ் சினிமாவில், விக்ரம் என்றால் ரெஸ்ட்லிங்கில் ஷான் மைக்கேல்ஸ். பெரும்பாலான ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ஷான் மைக்கேல்ஸுக்கு, ஹேட்டர்ஸ் மிகக் குறைவு. காரணம், ரெஸ்ட்லர், ஃபைட்டர் என்பதையெல்லாம் தாண்டி ஷான் ஒரு நல்ல என்டர்டெயினர்.

பறந்து வந்து செல்லுக்குள் என்ட்ரி, ரெஸ்டலிங் சூப்பர் ஸ்டார்களுடன் டேக் டீம், ரத்தம் சொட்டும் மோதல்கள், ரெஸ்ட்லிங் மூன்று எராக்களின் 'ஹார்ட் ப்ரேக்கிங் கிட்', வில்லன் டு பேபி முகமாக மாறிய சூப்பர் ஸ்டார் ஷான் மைக்கேல்ஸுக்கு இன்று பிறந்தநாள்!

Vikatan

தமிழ் சினிமாவில் விக்ரம் என்றால், ரெஸ்ட்லிங்கில் ஷான் மைக்கேல்ஸ். பெரும்பாலான ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ஷான் மைக்கேல்ஸுக்கு, ஹேட்டர்ஸ் மிகக் குறைவு. காரணம், ரெஸ்ட்லர், ஃபைட்டர் என்பதையெல்லாம் தாண்டி ஷான் ஒரு நல்ல என்டர்டெயினர். ஆட்டிட்யூட் எராவுக்குப் பிறகு ரெஸ்ட்லிங் பார்க்கத் தொடங்கியவர்கள் ஷான் மைக்கேல்ஸை கண்டிப்பாக வெறுக்க மாட்டார்கள். அதனால்தான் என்னவோ, தி ஐகான், ஷோ ஸ்டாப்பர், மெயின் ஈவென்ட் போன்ற பெயர்களில் அழைத்து ரெஸ்ட்லிங் ரசிகர்கள் இவரை கொண்டாடினர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து கிளம்பிய மைக்கல் ஷான் ஹிக்கன்பாட்டம், ரெஸ்ட்லிங் உலகில் 'ஹெச்.பி.கே'வாக அறிமுகப்படுத்திக்கொண்டார். இத்தனை ஆண்டுகளில், ரெஸ்ட்லிங்கின் ஒவ்வொரு முக்கிய பெல்ட்டையும் வென்றுள்ள ஹெச்.பி.கே, இரண்டு முறை ராயல் ரம்பிள் சாம்பியனும்கூட.

Shawn Micheals
Shawn Micheals

இப்போதுதான் ஷான் மைக்கேல்ஸுக்கு ஹேட்டர்ஸ் குறைவு. ஆனால், தொடக்க காலகட்டத்தில், ரசிகர்கள் அவரை வெறுத்தனர். காரணம், 'Montreal Screwjob'. ரெஸ்ட்லிங் வரலாற்றில் மறக்க முடியாத இந்த நிகழ்வின் அங்கமான ஷானை ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. ஹிட்மேனை வெளியேற்ற நாடகமாடிய ரெஸ்ட்லிங் அமைப்பு, ஷானை இரையாக்கியது. நியாயமாக நடக்காத ஹிட்மேன் - ஷான் மைக்கேல்ஸ் இடையேயான போட்டியில், ரெஸ்ட்லிங் அமைப்பு ஷான் வெற்றிபெற்றதாக அறிவித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்த ஷான், வில்லனாகவே பார்க்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷான் மைக்கேல்ஸின் வில்லன் இமேஜை உடைத்தது டி-ஜெனரேஷன் எக்ஸ். சக ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரிப்பிள் ஹெச் உடன் டேக் டீம் அமைத்த ஷான் மைக்கேல்ஸ், பல டேக் டீம் போட்டிகளை வென்றார். இந்தச் சமயத்தில்தான் கர்ட் ஆங்கிள், கிறிஸ் ஜெரிக்கோ, அண்டர்டேக்கர் என ரெஸ்ட்லிங்கின் பெரிய கைகளை எதிர்த்து சண்டையிட்ட ஹெஎச்.பி.கே, சூப்பர் ஸ்டாராக உருவாகிக்கொண்டிருந்தார். ரத்தம் சொட்டச்சொட்ட சண்டையிடும் ஷான் மைக்கேல்ஸுக்கு, 1998-ம் ஆண்டு ஏற்பட்ட காயம் வாழ்க்கையையே மாற்றியது. அண்டர்டேக்கர் உடனான போட்டியின்போது முதுகில் காயம் ஏற்பட, மூன்று ஆண்டுகளுக்கு ரெஸ்ட்லிங்கிற்கு ஓய்வளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

The Undertaker
The Undertaker

2002-ம் ஆண்டு, மீண்டும் ரெஸ்ட்லிங்கிற்குத் திரும்ப வந்த ஷான் மைக்கேல்ஸ், சிறந்த என்டர்டெயினராகவே தொடர்ந்தார். ஷான் ரெஸ்ட்லிங் கரியரில் அண்டர்டேக்கர் உடனான போட்டிகளை மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஏற்கெனவே, அண்டர்டேக்கருடனான மோதலால் காயமடைந்த ஷான், மற்றொரு போட்டியினால் ரெஸ்ட்லிங்கில் இருந்தே விடைபெற்றார்.

2010-ம் ஆண்டு, ரெஸ்ட்ல்மேனியாவில் தோற்றால், ரெஸ்ட்லிங்கை விட்டுச்செல்ல வேண்டும் என்ற நிபந்தனையில் அண்டர்டேக்கரை எதிர்கொண்டார் ஷான். கடைசி வரை போராடியும் ஷானால் அந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. முடிவில், ரெஸ்ட்லிங்கிற்கு 'பை' சொன்னார்.

Vikatan

ரெஸ்ட்லிங்கின் High Flyer Rocker ஆக அறிமுகமாகி ஹால் ஆஃப் ஃபேம் பட்டத்தை பெறும் வரை ஷான் மைக்கேல்ஸின் பயணம் நீண்டது. வெற்றி, தோல்வி, நட்பு, துரோகம் ஆகியவற்றை எதிர்கொண்ட ஷான், ரசிகர்களுக்கு எப்போதுமே ஃபேவரைட்டாகத்தான் இருப்பார்! இப்போதும் ஷான் மைக்கேல்ஸின் பழைய மோதல்கள் யூடியூபில் ரிப்பீட் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. 80's கிட்ஸ்களின் ரெஸ்ட்லிங் ஹீரோவுக்கு ஹேப்பி பர்த்டே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு