Published:Updated:

சாகசத்திலும் சாதிப்பார்கள் பெண்கள்!

த்ரில் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
த்ரில் ஆட்டம்

த்ரில் ஆட்டம்

சாகசத்திலும் சாதிப்பார்கள் பெண்கள்!

த்ரில் ஆட்டம்

Published:Updated:
த்ரில் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
த்ரில் ஆட்டம்

பார்ப்பதற்கு துப்பாக்கியால் எதிராளியின் மீது நீரைப் பீய்ச்சியடிக்கும் குழந்தைகளின் விளையாட்டு போலிருக்கிறது. களமிறங்கிப் பார்ப்பவர்களுக்கோ அது ரொம்பவே சீரியஸான விளையாட்டு. அதுதான் பெயின்ட்பால் கேம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழுவாக இணைந்து விளையாடும் போட்டி விளையாட்டு. டை நிரப்பிய ஜெல் கேப்ஸ்யூல்களை மார்க்கரில் பொருத்தி, எதிராளிகளை நோக்கி ஷூட் செய்ய வேண்டும். அவை எதிராளிகளின் மேல் பட்டால் அவர்கள் அவுட்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை பொழுதுபோக்குக்காக மட்டுமே விளையாடப்பட்ட பெயின்ட்பால், இன்று பெரிய டோர்னமென்ட்டுகளாக நடத்தப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதேபோல ஆரம்பகாலத்தில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த விளையாட்டில் இன்று பெண்களின் பங்கும் சம அளவு அதிகரித்திருக்கிறது. சிங்கப்பூர், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களுக்கான பிரத்யேக டோர்னமென்ட்டுகளே நடத்தப்படுகின்றன.

சாகசத்திலும் சாதிப்பார்கள் பெண்கள்!

அண்மையில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த ‘ஏஷியா கேர்ள்ஸ் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்’பில் 14 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். ‘Riot Girls’ எனும் ஐவரணியில் விளையாடி, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள் கோவாவைச் சேர்ந்த நுதன் நக்வேகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த நவ்யா ராவ்.

‘`ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் மிகச்சில விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. 2015-ம் ஆண்டு மலேசியாவில் முதல் வேர்ல்டு கப்பில் பங்கேற்றதிலிருந்து இந்த விளையாட்டின் மீது என் ஆர்வம் அதிகரித்தது. இந்திய அளவில் அதிகம் பிரபலமாகாமல் இருந்த இந்த விளையாட்டில் நிறைய குழுக்களை உருவாக்கி, புதிய பிளேயர்களை அறிமுகப்படுத்துவதே என் லட்சியம். தென்னிந்திய அளவில் இதுவரை 35 குழுக்களை உருவாக்கி உள்ளோம். 2020-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 100-ஐத் தொடும்’’ என்கிறார் இந்தியாவில் பெயின்ட்பால் விளையாட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இயங்கிவரும் மல்லிகா ஏஞ்சலா சௌத்ரி. பெயின்ட்பால் விளையாட்டில் ஆர்வமுள்ளோருக்காக சென்னையில் பெயின்ட்பால் கிளப் ஒன்றை நடத்துகிறார்.

இந்தியாவின் முதல் பெண் பெயின்ட்பால் பிளேயரான நுதன், இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தின் காரணமாக கார்ப்பரேட் வேலையையே உதறியவர். 2016-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஏஷியா வேர்ல்டு கப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று இந்தியாவின் மீது மற்ற நாடுகளின் கவனத்தைத் திருப்பியவர்.

சென்னையைச் சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் நவ்யாவின் லேட்டஸ்ட் காதல் பெயின்ட்பால்.

‘`நம்மூரில் இன்னும் இந்த விளையாட்டு பெரிய அளவில் பிரபலமாகலை. மிகச் சிலர் மட்டுமே இணைந்திருக்கும் பெயின்ட்பால் கம்யூனிட்டி பற்றிக் கொஞ்ச நாள்களுக்கு முன்னாலதான் எனக்குத் தெரியவந்தது. பெங்களூரில் உள்ள ‘பெயின்ட்பால் X’ என்ற அமைப்பு, இந்த விளையாட்டில் ஆர்வமுள்ளோருக்கான அமெச்சூர் டோர்னமென்ட்டுகளை நடத்துகிறது. இன்டர்நெட் மூலமாக இந்த விளையாட்டைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களைத் திரட்டினேன். த்ரில் நிறைந்த விஷயங்கள் இயல்பிலேயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அட்ரீனலின் சுரப்பை எகிறச் செய்யும் விஷயங்களைச் செய்ய நினைக்கும் எனக்கு பெயின்ட்பால் கான்செப்ட் பிடித்துப் போனது. விளையாட்டாக ஆட ஆரம்பித்தது, இன்று சாம்பியன்ஷிப்பில் ஜெயிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது’’ என்கிறார் நவ்யா.

பெயின்ட்பால் விளையாட்டும் கிட்டத்தட்ட ஷூட்டிங் போன்றதுதான். ஷூட்டிங்கில் ரைஃபிள், ஷார்ட் கன் அல்லது ஹேண்டு கன் போன்றவை பயன்படுத்தப்படும். பெயின்ட்பால் விளையாடப் பயன்படுத்தப்படுவது மார்க்கர்.

மூன்று, ஐந்து அல்லது பத்து பேர் கொண்ட குழுக்களாக இது விளையாடப் படும். விளையாட்டுக் களத்தில் காற்று நிரப்பிய தடுப்புகள் ஆங்காங்கே வைக்கப் பட்டிருக்கும். மார்க்கரால் எதிராளியின் மீது பெயின்ட்பால்களை எய்துவதே போட்டியாளரின் இலக்கு. இப்படியாகப் படிப்படியாக முன்னேறி, எதிராளியின் எல்லையைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நெருங்குபவரே வெற்றி யாளர். எதிராளியின் மேல் எய்தப்படும் பெயின்ட்பால்கள், வெஜிடபுள் டை நிரப்பியவை என்பதால் அவற்றின் வீச்சும் வேகமும் அவர்களைக் காயப்படுத்தாது.

சாகசத்திலும் சாதிப்பார்கள் பெண்கள்!

‘`நடந்து முடிந்த இந்த சாம்பியன்ஷிப்பில் ஏஷியாவுக்கு ஐந்தாம் இடத்தை வாங்கிக் கொடுத்திருக்கோம். சாகசம் நிறைந்த த்ரில் விளையாட்டுகள் ஆண்களுக்கானவை என்ற பொதுக்கருத்தையும் உடைத்திருக்கோம். எந்த வயதிலும் பெயின்ட்பால் விளையாடலாம். அட்ரீனலின் ரஷ் என ஓர் உணர்வு உண்டு. அதை அனுபவிக்க பெயின்ட்பால் விளையாடுங்கள்’’ - அணியின் சார்பாக அழைக்கிறார் நவ்யா. ஆர் யூ ரெடி?