Published:Updated:

இளம் பெண்ணுக்கு மதிய வணக்கம்! - மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முகமது ஷமி

முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.

முகமது ஷமி
முகமது ஷமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. முகமது ஷமி அணியில் சேர்க்கப்படாதது பல கேள்விகளை எழுப்பியது. முகமது ஷமியின் பயிற்சியாளர் பத்ரூதின் சித்திக் கூறுகையில், ``நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறாதது கடும் அதிர்ச்சியை அளித்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளித்திருந்தார்கள் என்று நினைத்திருந்தேன்.

சோபியாவின் ட்விட்
சோபியாவின் ட்விட்

ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் களம் இறக்கப்படவில்லை. இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒருவரை எப்படி நீக்கம் செய்ய முடியும்? தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இந்தத் தொடரில் தன் திறமையை முகமது ஷமி நிரூபித்துள்ளார்'' என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்ளே போன்றவர்களும் ஷமி அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஆச்சர்யம் தெரிவித்தனர். இதற்கிடையே ஷமி மீது தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கெனவே, முகமது ஷமிக்கும் அவரின் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

முகமது ஷமி
முகமது ஷமி

இந்நிலையில், முகமது ஷமி, ஷோபியா என்ற பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 'மதிய வணக்கம்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஷமியின் மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த ஷோபியா, அதை ட்விட்டரில் பதிவிட்டு ''என்னை 14 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார்'' என்று கூறியிருந்தார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்திய அணியின் ஷமி சேர்க்கப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்திய ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

'முகமது ஷமி இப்படிச் செய்ததில் வியப்பு ஏதுமில்லை' என்று அவரை விமர்சித்தும் மதிய வணக்கம்தானே அனுப்பியிருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது' என்றும் ஷோபியாவைக் கண்டித்தும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.