Published:Updated:

`ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!' - `தங்கமங்கை' இளவேனில் நம்பிக்கை

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை இளவேனிலுக்கு சொந்த ஊரான கடலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Elavenil Valarivan
Elavenil Valarivan

பிரேசிலினின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் உருத்திராபதி (84), கிருஷ்ணவேணி தம்பதிகளின் மகன் வாலறிவன் மகள் இளவேனில்.

Elavenil Valarivan
Elavenil Valarivan

வதற்பொழுது இவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரில் வசிக்கும் தாத்தா, பாட்டியிடம் ஆசிபெறுவதற்காக இளவேனில் கடலூர் மாவட்டம் காரமணிக்குப்பம் கிராமத்திற்கு தந்தை வாலறிவனுடன் வந்திருந்தார்.

Vikatan

அப்பொழுது ஊர் எல்லையில் கிராம மக்கள் மற்றும் அவரின் உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கிராமத்தின் ஆரம்பத்தில் இருந்து தாத்தா வீடு செல்லும்வரை வழியில் ஒவ்வொரு வீட்டிலும் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தங்கம் வென்ற இளவேனிலுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Elavenil Valarivan
Elavenil Valarivan
உலககோப்பை போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். அதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ந்து அதிக அளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைசேர்ப்பேன்.
இளவேனில்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளவேனில், ``எங்கள் ஊரில் அனைவரும் குடும்பமாக வந்து வரவேற்பு அளித்ததைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உலககோப்பை போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ந்து அதிக அளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்பேன்.

Elavenil Valarivan
Elavenil Valarivan

நான் இந்த வெற்றி பெற்றதற்கு எங்கள் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம்தான் காரணம், அவர்கள் தொடர்ந்து ஊக்கமளித்து வந்ததால்தான் இந்த சாதனை புரியமுடிந்தது. நான் தங்கம் வென்றதும் வாழ்த்துத் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி" என்றார். அப்பொழுது அவரது தந்தை வாலறிவன், தாத்தா உருத்திராபதி, பாட்டி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.